12 வயதுக்கு மேற்பட்டோருக்கு கோவிட் -19 தடுப்பூசி; அனுமதி வழங்கியது இந்தியா

ஜைடஸ் காடிலாவின் ZyCoV-D தடுப்பூசி பிளாஸ்மிட் டிஎன்ஏ மேடையில் உருவாக்கப்பட்ட முதல் கோவிட் தடுப்பூசி வேட்பாளராக உலகில் எங்கும் வணிக ரீதியாக அறிமுகப்படுத்தப்பட்டது.

First Covid-19 vaccine for children

Kaunain Sheriff M

First Covid-19 vaccine for children : குஜராத்தை தளமாகக் கொண்ட ஜைடஸ் காடிலாவின் மூன்று டோஸ் கோவிட் -19 தடுப்பூசியை, 12 வயதுக்கு மேற்பட்டோருக்கு பயன்படுத்த வெள்ளிக்கிழமை அன்று அவசரகால பயன்பாட்டு அங்கீகாரம் வழங்கப்பட்டது. இது இந்தியாவில் இளம் பருவத்தினருக்கு வழங்கப்படும் முதல் தடுப்பூசி ஆகும். மத்திய மருந்து கட்டுப்பாட்டாளர் இந்த தடுப்பூசிக்கு அனுமதி வழங்கிய பிறகு, ஜைடஸ் காடிலாவின் ZyCoV-D தடுப்பூசி பிளாஸ்மிட் டிஎன்ஏ மேடையில் உருவாக்கப்பட்ட முதல் கோவிட் தடுப்பூசி வேட்பாளராக உலகில் எங்கும் வணிக ரீதியாக அறிமுகப்படுத்தப்பட்டது.

பயோடெக்னாலஜி துறையுடன் கூட்டாக உருவாக்கப்பட்ட இந்த தடுப்பூசியின் செயல்திறன் மூன்றாம் கட்ட பரிசோதனையில் 66.66 சதவிகிதமாக பதிவாகியுள்ளது. 12-18 வயதுக்குட்பட்ட-இளம் பருவத்தினருக்கு இந்தியாவில் சோதனை செய்யப்பட உள்ள முதல் கோவிட் -19 தடுப்பூசி இதுவாகும்.

வெள்ளிக்கிழமை அன்று, இந்திய மருந்து கட்டுபாளரகம் ஒரு ட்வீட்டில், “இடைக்கால” மூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனைகளின் முடிவுகளுக்குப் பிறகு, நிபுணர் குழுவுடன் கலந்தாலோசித்து, 12 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு ZyCoV-D ஐ அவசர கால பயன்பாட்டிற்கு இந்தியாவில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டிருந்தது. தடுப்பூசி 0, 28, மற்றும், 56 நாட்களில் வழங்கப்பட வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இளம் பருவத்தினருக்கு தடுப்பூசி பயன்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த வயதினருக்கான தடுப்பூசி இயக்கத்தை தொடங்கலாமா என்பது குறித்து அரசாங்கம் முடிவெடுக்க வேண்டும்.

இந்தியாவில் மக்களுக்கு கொரோனாவுக்கு எதிரான இதுவரை மூன்று தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வந்தன. சீரம் நிறுவனத்தின் கோவிட்ஷீல்ட், பாரத் பயோடெக்கின் கோவாக்ஸின் மற்றும் ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி. மடெர்னாவின் எம்.ஆர்.என்.ஏ. தடுப்பூசி மற்றும் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் சிங்கிள் டோஸ் தடுப்பூசியும் அவசர கால பயன்பாட்டு அனுமதியை பெற்றுள்ளன. இருப்பினும் தடுப்பூசி இயக்கத்தில் பயன்படுத்தப்படவில்லை.

அக்டோபர் மாதத்திற்குள் ஜைடஸ் டிஎன்ஏ கோவிட் -19 தடுப்பூசி சந்தைக்கு வர வாய்ப்புள்ளதாக அரசு உயர் வட்டாரங்கள் தெரிவித்தன. ஜூலை மாதம், Zydus ஆண்டுதோறும் 10-12 கோடி டோஸ் தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக கூறியிருந்தது.

‘ப்ளக் அன்ட் ப்ளே’ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் ZyCoV-D, டிஎன்ஏ பிளாஸ்மிட் திசையனை கொண்டுள்ளது, இது கோவிட் -19 தொற்றுநோயை ஏற்படுத்தும் SARS-CoV-2 மேற்பரப்பில் இருக்கும் ஸ்பைக் புரதத்தை குறியாக்கும் மரபணுவைக் கொண்டுள்ளது. டிஎன்ஏ பிளாஸ்மிட் மனித உயிரணுக்குள் செலுத்தப்படும் போது, அது ஸ்பைக் புரதங்களின் வளர்ச்சியை அதிகரிக்கும். பதிலுக்கு, மனித உடல் ஆன்டிபாடிகளை உருவாக்குகிறது.

கோவிட் -19 ஐச் சமாளிக்க அதன் தொழில்நுட்பம் பொருத்தமானது என்று ஜைடஸ் கூறியுள்ளது. ஏற்கனவே நிகழும் வைரஸின் பிறழ்வுகளைச் சமாளிக்க எளிதாக மாற்றியமைக்கப்படலாம். கோவிட் -19 தடுப்பூசியின் மிகப்பெரிய மருத்துவ பரிசோதனையிலிருந்து உருவாக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் வெள்ளிக்கிழமை இதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. 28,000க்கும் மேற்பட்டோர் மருத்துவ பரிசோதனைகளின் மூன்றாம் கட்டத்தில் பங்கேற்கின்றனர்.

இந்த டி.என்.ஏ. தடுப்பூசி மூன்று முக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. முதலில் இது ஒரு இண்ட்ராடெர்மல் தடுப்பூசி. ஊசிகள் இல்லாமல் மருந்து செலுத்தும் முறையை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது என்பதால் வலி போன்ற பக்க விளைவுகள் குறையும்.

அல்ட்ரா குளிர் சாதன பெட்டிகளில் வைக்கப்படும் எம்.ஆர்.என்.ஏ. தடுப்பூசிகள் போல் இல்லாமல் இவை, இந்த டி.என்.ஏ. தடுப்பூசிகள் 2 முதல் 8 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் வைத்துக் கொள்ள இயலும். இது இந்தியாவின் குளிர் சேமிப்பு தேவைக்கு மிகவும் பொருத்தமானது.

மூன்றாவது. இந்த தடுப்பூசியை தயாரிக்க கோவாக்ஸின் தயாரிப்பிற்கு தேவைப்பட்டது போன்ற பி.எஸ்.எல். 3 உயர்தர கட்டுப்பாட்டு வசதி இதற்கு தேவையில்லை. . அதற்கு பதிலாக, குறைந்தபட்ச உயிர் பாதுகாப்பு தேவைகளுடன் தடுப்பூசி தயாரிக்க முடியும்.

நாட்டுக்கு இரட்டை நற்செய்தி. டி.என்.ஏ. அடிப்படையில் உருவாக்கப்பட்ட, ஊசி அற்ற ம்தல் கோவிட் தடுப்பூசி ஜைகோவ்-டிக்கு இந்தியா அனுமதி வழங்கியுள்ளது. இந்திய குழந்தைகளை இது பாதுகாக்கிறது. 12 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினர் இந்த தடுப்பூசியை பெற்றுக் கொள்ளலாம். ZyCov-D ஆனது இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட 6 வது #COVID19 தடுப்பூசி ஆகும், மேலும் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட இரண்டாவடு தடுப்பூசியாகும். பிரதமர் @நரேந்திரமோடியின் #ஆத்மநிர்பர் பாரத் மற்றும் மேக் இன் இந்தியா பற்றிய பார்வை மற்றொரு குறிப்பிடத்தக்க சாதனையை அளிக்கிறது என்று மாண்டாவியா ஒரு ட்வீட்டில் குறிப்பிட்டிருந்தார்.

கோவிட்19-ஐ எதிர்த்து போராடக்கூடிய ஒரு பாதுகாப்பான, நன்கு பொறுத்துக் கொள்ளக் கூடிய, பயனுள்ள தடுப்பூசியை வெளியிடுவதற்கான எங்கள் முயற்சியில் ZyCoV-D வந்ததை நினைத்து நாங்கள் மகிழ்ச்சி அடைகின்றோம். இவ்வளவு முக்கியமான தருணத்தில் உலகின் முதல் டிஎன்ஏ தடுப்பூசியை உருவாக்குவது மற்றும் அனைத்து சவால்களையும் மீறி, இந்திய ஆராய்ச்சி விஞ்ஞானிகளுக்கும் அவர்களின் கண்டுபிடிப்பு உணர்வுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கின்றோம். ஆத்மா நிர்பார் பாரத் மற்றும் இந்திய தடுப்பூசி மிஷன் கோவிட் சுரக்ஷாவின் இந்த பணிக்கு ஆதரவளித்த இந்திய அரசின் பயோடெக்னாலஜி துறைக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன் என்று ஜைடஸ் நிறுவனத்தின் தலைவர் பங்கஜ் ஆர். படேல் கூறினார்.

‘மிஷன் கோவிட் சுரக்ஷா’வின் கீழ் பயோடெக்னாலஜி துறையுடன் இணைந்து தடுப்பூசி உருவாக்கப்பட்டு பயோடெக்னாலஜி தொழில் ஆராய்ச்சி உதவி கவுன்சிலால் செயல்படுத்தப்பட்டது.

உலகின் முதல் டிஎன்ஏ கோவிட் -19 தடுப்பூசிக்கு இன்று நாம் அவசர பயன்பாட்டு ஒப்புதலை பெற்றுள்ளோம். உலகின் முதல் டிஎன்ஏ கோவிட் -19 தடுப்பூசிக்கு இன்று நாம் ஜைடஸ் மூலம் ZyCoV-D, பயோடெக்னாலஜி துறையுடன் இணைந்து உருவாக்கப்பட்டது மற்றும் மிஷன் கோவிட் சுரக்ஷா மூலம் ஆதரிக்கப்படுவது மிகவும் பெருமைக்குரியது” என்று டாக்டர் ரேணு ஸ்வரூப், செயலாளர், DBT மற்றும் தலைவர், BIRAC கூறினார்.

2010 ஆம் ஆண்டில், பன்றி காய்ச்சலுக்கு எதிரான தடுப்பூசியை உருவாக்கி உள்நாட்டில் தயாரித்த முதல் நிறுவனமாக ஜைடஸ். முன்பு டெட்ராவலண்ட் பருவகால இன்ஃப்ளூயன்ஸா தடுப்பூசி மற்றும் செயலிழந்த ரேபிஸ் தடுப்பூசியை உருவாக்கியது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: First covid 19 vaccine for children above 12 years gets emergency use nod

Next Story
2024 நாடாளுமன்ற தேர்தலே இறுதி இலக்கு : எதிர்கட்சி கூட்டத்தில் சோனியா காந்தி பேச்சு
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com