scorecardresearch

16 ஆண்டுக்கு பிறகு கொள்கை மாற்றம்; வெளிநாடுகளில் இருந்து உதவிகளை பெறும் இந்தியா

சீனாவில் இருந்து அவசரகால பொருட்களை வாங்குவதற்கான அணுகுமுறையில் புது தில்லியின் நுணுக்கமான மாற்றம், குறிப்பாக ஆக்ஸிஜன் தொடர்பான சாதனங்கள், இரு நாடுகளும் எல்லை நிலைப்பாடு தொடர்பாக முரண்படுகின்றன.

First policy shift in 16 yrs: India open to foreign aid, ok to buying from China

 Shubhajit Roy

Policy Change : 16 ஆண்டுகளுக்கு பிறகு கொள்கையை மாற்றிய இந்தியா, தற்போது கொரோனா தொற்றை கட்டுக்குள் வைக்க உதவிகளை வெளிநாடுகளில் இருந்து பெற்று வருகிறது. ஆனால் இந்த மாற்றத்தை இரண்டு விதமாக இந்தியா அணுகு வருகிறது. சீனாவிடம் இருந்து ஆக்ஸிஜன் தொடர்பான உபகரணங்களை வாங்குவதில் இந்தியாவுக்கு எந்தவிதமான கருத்தியல் பிரச்சனைகளும் இல்லை. ஆனால் புதுடெல்லி பாகிஸ்தானில் இருந்து வரும் உதவிகளை ஏற்றுக் கொள்ளுமா என்பது குறித்து உறுதியாக தெரிவிக்கவில்லை. மாநில அரசுகளும் உயிர் காக்கும் உபகரணங்களை சர்வதேச அளவில் மத்திய அரசின் குறுக்கீடுகள் இல்லாமல் பெற்றுக் கொள்ளவும் அனுமதிக்கிறது.

இந்த மூன்று கூறுகளும் புது தில்லியின் மூலோபாயத்தில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை உருவாக்குகின்றன. டெல்லி எப்போதும் சுயதேவைகளை தாமே பூர்த்தி செய்து கொள்ளும் என்ற பிம்பத்தை கொண்டிருந்தது. 16 வருடங்களுக்கு முன்பு காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சியில் மன்மோகன் சிங் வெளிநாட்டு உதவிகளை ஏற்க வேண்டாம் என்று கூறிய கொள்கையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதுவரை உத்தர்காஷி நிலநடுக்கம் 1991, லத்தூர் நிலநடுக்கம் (1993), குஜராத் நிலநடுக்கம் (2001), வங்கப்புயல் (2002), பீகார் பெருவெள்ளம் (2004) போன்ற பேரிடர்களில் இருந்து மீள இந்தியா வெளிநாடுகளின் உதவிகளை பெற்று வந்தது.

டிசம்பர் 2004ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமிக்கு பிறகு அன்றைய பிரதமர் மன்மோகன் சிங், நம்முடைய சூழலை நம்மால் சமாளிக்க முடியும். தேவையென்றால் வெளிநாடுகளின் உதவியை பெற்றுக் கொள்ளலாம் என்று கூறினார். அதன் பின்னர் இந்தியா 16 ஆண்டுகளில் உத்தரகாண்ட் வெள்ளம் (2013), காஷ்மீர் நிலநடுக்கம் (2005), காஷ்மீர் வெள்ளம் (2014) போன்ற காலங்களில் வெளிநாடுகளின் உதவியை ஏற்கவில்லை.

மேலும் படிக்க : சென்னையை விட சிறு நகரங்களில் மோசமாக பரவும் கொரோனா வைரஸ்

2018ம் ஆண்டு கேரள வெள்ளத்திற்கு பிறகு, அமீரகத்தில் இருந்து 700 கோடி நிதி உதவி தர முன்வந்துள்ளது என்று கேரளா கூற, அதனை நிராகரித்துவிட்டது மத்திய அரசு. மேலும் மத்திய அரசு, மாநில அரசின் அனைத்துவிதமான நிதி தேவைகளையும் ஏற்கும் என்று கூறியது. மத்திய மற்றும் மாநில அரசுக்கு இது கடுமையான காலகட்டமாக மாறியது.

இதுவரை 20 நாடுகள் இந்தியாவிற்கு உதவ முன்வந்துள்ளது. பூடான் ஆக்ஸிஜனை வழங்க, அமெரிக்கா அஸ்ட்ரஜெனாகா தடுப்பூசிகளை அடுத்த மாதம் வழங்கும் என்று கூறப்பட்டுள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்து, ஃப்ரான்ஸ், ஜெர்மனி, ரஷ்யா, அயர்லாந்து, பெல்ஜியம், ரொமானியா, லக்ஸம்பர்க், போர்ச்சுகல், ஸ்வீடன், ஆஸ்திரேலியா, பூடான், சிங்கப்பூர், சௌதி, ஹாங்காங். தாய்லாந்து, ஃபின்லாந்து, ஸ்விட்சர்லாந்து, நார்வே, இத்தாலி, மற்றும் அமீரகம் உதவ முன்வந்துள்ளது.

இருப்பினும் டெல்லி இவை நன்கொடைகள் அல்லது உதவிகள் இல்லை என்று சுட்டுக்காட்டி அணுகுமுறையில் மாற்றத்தை ஒப்புக் கொள்ளவில்லை. இந்தியா உதவிக்காக “முறையீடு” செய்யவில்லை என்றும், இவை கொள்முதல் முடிவுகள் என்றும் அவர்கள் கூறுகிறார்கள். “சில அரசாங்கங்கள் அல்லது தனியார் நிறுவனங்கள் பரிசாக நன்கொடை அளிக்க விரும்பினால், நாங்கள் அதை நன்றியுடன் ஏற்றுக்கொள்கிறோம்,” என்று ஒரு வட்டாரம் தெரிவித்துள்ளது.

இந்திய செஞ்சிலுவை சங்கத்திற்கு நன்கொடை வழங்குமாறு இந்திய அரசு அனைத்து வெளிநாட்டு அரசாங்கங்களையும் ஏஜென்சிகளையும் கேட்டுக் கொள்கிறது, அதன் பிறகு ஒரு அதிகாரமளித்த குழு அவற்றை எவ்வாறு முன்னோக்கி அனுப்புவது என்பது குறித்து அழைப்பு விடுக்கும் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.

ஹைட்ராக்ஸிக்ளோரோகுயின் முதல் தடுப்பூசிகள் இந்தியா வெளிநாடுகளுக்கு அனுப்பியதற்கு பதிலாக தற்போது வெளிநாடுகளில் இருந்து உதவிகளும் நன்கொடைகளும் வருகிறது என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியா 6.5 கோடி தடுப்பூசிகளை 80 நாடுகளுக்கு மேல் அனுப்பியுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

சீனாவில் இருந்து அவசரகால பொருட்களை வாங்குவதற்கான அணுகுமுறையில் புது தில்லியின் நுணுக்கமான மாற்றம், குறிப்பாக ஆக்ஸிஜன் தொடர்பான சாதனங்கள், இரு நாடுகளும் எல்லை நிலைப்பாடு தொடர்பாக முரண்படுகின்றன.

இந்தியாவுக்கான சீனத் தூதர் சன் வீடோங் 25,000 ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் இந்தியாவுக்கு வழங்கப்படும் என்பதை உறுதிப்படுத்தினார். “சீன மருத்துவ சப்ளையர்கள் இந்தியாவின் உத்தரவின் பேரில் கூடுதல் நேரம் வேலை செய்கிறார்கள். சமீபத்திய நாட்களில் ஆக்சிஜன் செறிவூட்டிகளுக்கு குறைந்தது 25,000 ஆர்டர்கள். சரக்கு விமானங்கள் மருத்துவ விநியோகத்திற்கு தயார் நிலையில் உள்ளன. சீன சுங்கத்துறை தொடர்புடைய செயல்முறைகளை எளிதாக்கும் ”என்று அவர் ட்வீட் வெளியுட்டுள்ளார்.

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: First policy shift in 16 yrs india open to foreign aid ok to buying from china

Best of Express