இந்தியாவிற்கு எப்போது வரப்போகிறது ரபேல் போர் விமானங்கள் ?

செப்டம்பர், 2022ல் அனைத்து விமானங்களும் இந்திய விமானப் படையில் ஒப்படைக்கப்படும்.

ரபேல் போர் விமானங்கள் : முழு உள்கட்டுமான அம்சங்களுடன் முடிக்கப்பட்ட ஒரே ஒரு ரபேல் போர் விமானம் பிரான்சில் இருந்து இந்தியாவிற்கு 2022ம் ஆண்டு தான் கிடைக்கும்

உள்கட்டுமான வேலைகள் ஏதும் இல்லாத மிச்சம் இருக்கும் 35 விமானங்களையும் 2019ம் ஆண்டில் இருந்து மாதத்திற்கு 7 என்ற கணக்கில் இந்தியாவிற்கு அனுப்பி வைக்க உள்ளது பிரான்ஸ். இருப்பினும் அதன் உள்கட்டுமான வேலைகள் யாவும் 2022ம் ஆண்டிற்கு பின்பு தான் இந்தியாவில் ஆரம்பிக்கப்படும்.

இந்தியாவிற்கு எப்போது வரும் ரபேல் போர் விமானங்கள்

ராஜ்ய சபாவில் இது குறித்து கேள்வி எழுப்பிய போது, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், “பறக்கும் தருவாயில் ஆயுதங்கள் தாங்கிய 36 ரபேல் போர் விமானங்களும் 2022ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்தியாவிற்கு வந்து விடும்” என்று கூறியுள்ளார்.

இருப்பினும் இந்திய விமானப் படைக்கு இந்த விமானங்கள் செப்டம்பர் 2022ல் தான் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய விமானப் படைப் பிரிவினர் மற்றும் பிரெஞ்ச் விமானிகள் இந்த போர் விமானங்களின் சோதனை ஓட்டங்கள் மற்றும் விமானம் ஓட்டுவது தொடர்பான பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க

India-Specific Enhancements என்றால் என்ன ?

India-Specific Enhancements தொடர்பான எதிர்பார்ப்புகள் அனைத்தையும் முதல் போர் விமானம் நிறைவேற்றி சான்றிதழ் பெற்றுவிட்டால் மீதம் இருக்கும் அனைத்து அனைத்து விமானங்களையும் குறிப்பிட்ட காலத்திற்குள் ஒப்பந்த அடிப்படையில் அனுப்பி வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ரபேல் விமான ஒப்பந்தம் – தொடர் சர்ச்சையில் சிக்கும் ரிலையன்ஸ் நிறுவனம்

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் வகுக்கப்பட்ட 13 India-Specific Enhancements அம்சங்களில் மிக முக்கியமானது ரேடார் கருவி, ஹெல்மெட் மவுண்ட்டட் டிஸ்பிளே, டவ்ட் டிகாய் சிஸ்டம், லோ பேண்ட் ஜாம்மர், ரேடியோ அல்டிமீட்டர், அதிக உயரத்தில் இருந்து விமானத்தை செயல்படுத்துவது போன்றவைகள் ஆகும்.

இந்த சிறப்பம்சங்கள் யாவும் பிரான்ஸ் நாட்டு விமானப்படை பயன்படுத்தும் ரபேல் போர் விமானங்களில் இல்லை. இந்த India-Specific Enhancements – ல் எந்த மாற்றங்களையும் செய்யாமல், காங்கிரஸ் குறிப்பிட்டிருக்கும் அனைத்து அம்சங்களுடன் பாஜக அரசு போர் விமானங்களை உற்பத்தி செய்ய பிரான்ஸ் நாட்டிடம் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close