Advertisment

45 ஆண்டுகளுக்கு பிறகு எல்.ஏ.சி-யில் துப்பாக்கிச்சூடு: லடாக் முழு நிலவரம்

ஸ்பாங்கூர் த்சோவிற்கு மேற்கிலும் ரெசாங் லாவின் வடமேற்கிலும் அமைந்துள்ள முக்பரி குறிப்பிடத்தக்க ஆதிக்கத்தை அளிக்கிறது.

author-image
WebDesk
New Update
45 ஆண்டுகளுக்கு பிறகு எல்.ஏ.சி-யில் துப்பாக்கிச்சூடு: லடாக் முழு நிலவரம்

 Krishn Kaushik

Advertisment

First time in 45 years, shots fired along LAC as troops foil China’s bid to take a key height : இந்திய ராணுவ வீரர்கள் எல்லையில் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சீன படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர் என்று பெய்ஜிங் வைத்த குற்றச்சாட்டினை மறுத்துள்ளது இந்திய ராணுவம். மேலும் இந்த துப்பாக்கிச் சூட்டினை செய்தது சீனா ராணுவம் தான் என்றும் லடாக்கின் பிரச்சினை குறித்து இந்தியா முன்னேறி வருவதை தடுக்கும் நோக்கமாக சில சுற்றுகள் துப்பாக்கிச் சூட்டினை சீன ராணுவம் நடத்தியுள்ளது என்று இந்தியா குற்றச்சாட்டு வைத்துள்ளது. 1975 க்குப் பிறகு லைன் ஆப் கண்ட்ரோல் பகுதியில் நடத்தப்பட்ட முதல் துப்பாக்கிச்சூடு இதுவாகும். 45 ஆண்டுகளுக்கும் முன்பு அருணாச்சல பிரதேசத்தின் துலாங் லாவில் அசாம் ரைபிள்ஸ் ரோந்து படையினரை நோக்கி துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டது சீன ராணுவம். சசூல் பகுதியில் அமைந்திருக்கும் உயரமான இடத்தை அடைய சீன ராணுவம் முயன்ற போது முப்பரி என்ற இடத்தில் சீனாவின் முயற்சியை இந்திய ராணுவம் முறியடித்தது என்ற தகவல்களும் தற்போது வெளியாகியுள்ளது.

இந்த கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க

செவ்வாய்க்கிழமை மாலை வரை இந்திய மற்றும் சீன துருப்புகள் ஸ்டாண்டாஃப் தளத்தின் பொது பகுதியில்தான் தொடர்ந்து இருந்தன. சில நூறு மீட்டர்கள் இடைவெளியே அவர்களை பிரித்து வைத்தது. இது தொடர்பாக ராணுவ அதிகாரி ஒருவர் பேசும்போது ஆகஸ்ட் 29-30 தேதிகளில் இந்தியா எடுத்த நடவடிக்கைக்கு பிறகு, சீனர்கள் தொடர்ந்து தினமும் ஒரு குறிப்பிட்ட உயரத்தை அடைய முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். பல்வேறு இடங்களில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்பாங்கூர் த்சோவிற்கு மேற்கிலும் ரெசாங் லாவின் வடமேற்கிலும் அமைந்துள்ள முக்பரி குறிப்பிடத்தக்க ஆதிக்கத்தை அளிக்கிறது. இது நிலப்பரப்பு மற்றும் மோல்டோவில் உள்ள சீன நிலைகள் ஆகியவற்றைக் கட்டளையிடும் காட்சியையும் வழங்குகிறது. இப்பகுதியின் உயரத்திலிருந்து, துருப்புக்கள் 1962 ஆம் ஆண்டு போரில் சீனர்கள் சுஷூலை நோக்கிச் செல்ல முயன்ற ஒரு மலைப்பாதையான ஸ்பான்குர் இடைவெளியைக் இங்கிருந்து கண்காணிக்க முடியும். திங்கள்கிழமை மாலை, முக்பரியில் உள்ள இந்திய துருப்புக்கள் 30-40 சீன வீரர்கள் அடங்கிய குழுவைக் கவனித்தனர், அவை எஃகு கம்பிகள் மற்றும் பிற பொருள்களுடன் ஆயுதம் ஏந்தி, அவர்கள் பகுதியில் இருக்கும் எல்.ஏ.சி.யில் இருந்து மலையில் ஏற முயற்சி மேற்கொண்டனர். உயரத்தில் உள்ள இந்திய துருப்புக்கள், சீனர்கள் நெருங்கி வந்தால் அது ஆபத்தானது என்று எச்சரித்தனர். அவர்கள் திரும்பிச் செல்லும்படி கூறப்பட்டது. சீன துருப்புக்கள் திரும்பி வருகையில், அவர்களில் ஒருவர் காற்றில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்திய ராணுவம் வெளியிட்ட அறிக்கையில் சீனாவின் புகார்களை மறுத்துள்ளது மேலும் இந்திய ராணுவம் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபடவோ எல்லையை கடக்க முயற்சியோ செய்யவில்லை என்றும் கூறியுள்ளது. எந்த ஒரு நிலையிலும் துப்பாக்கிச்சூடு அல்லது எல்ஏசி எல்லையை மீறுதல் போன்ற ஆக்கிரமிப்பு வழிகளை இந்தியா பின்பற்றவில்லை. தற்போது எல்லையில் நிலவி வரும் பதட்டமான சூழலை நீக்குவதற்கும் அதனை விரைவாக முடிப்பதற்கும் இந்திய ராணுவம் உறுதி பூண்டுள்ளது. ஆனால் சீனா இந்த நிலைமையை நீட்டிக்க ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ராணுவம் மற்றும் அரசியல் மட்டத்தில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது சீன ராணுவம் ஆக்கிரமிப்பு சூழ்ச்சிகளை மேற்கொள்வதாக இந்திய ராணுவம் குற்றம் சாட்டியுள்ளது.

திங்களன்று நடைபெற்ற சம்பவம் குறித்து ராணுவம் வெளியிட்ட அறிக்கையில் சீன ராணுவம் தான் இந்தியா பகுதியில் இருக்கும் லைன் ஆப் கண்ட்ரோல் பகுதியை கடக்க முயற்சி செய்தது. சொந்த துருப்புகளால் பிரச்சனை ஏற்பட்டபோது, சில சுற்றுகள் துப்பாக்கிச்சூடு நடத்தி அச்சுறுத்தலை ஏற்படுத்தியது.  இந்திய ராணுவம் மிகவும் கட்டுப்பாட்டை கொண்டு முதிர்ச்சியாகவும் பொறுப்பான முறையிலும் நடந்துகொண்டது. அமைதியையும் அமைதியை காப்பதற்கான உறுதியுடனும் தேசிய ஒருமைப்பாட்டையும் இறையாண்மையையும் எந்த காலத்திலும் பாதுகாப்பதில் உறுதியாக உள்ளோம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இச்சம்பவம் குறித்து பி எல் ஏ வின்  வெஸ்டர்ன் தியேட்டர் கமெண்டின் அறிக்கையில் இந்த சம்பவம் உள்நாட்டு மற்றும் சர்வதேச மக்களை தவறாக வழிநடத்தும் முயற்சி என்று குறிப்பிட்டிருந்தது.

பி.எல்.ஏவின் வெஸ்டெர்ன் தியேட்டர் கமெண்ட் செய்தி தொடர்பாளர், கர்னல் ஜங் ஷுயுலி, இந்திய ராணுவம் தான் எல்லையை தாண்டு பாங்காங் ஹூனான் பகுதியை அடைய முயன்றது என்று குற்றம் சுமற்றியுள்ளார். "இந்திய நடவடிக்கைகள் சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான ஒப்பந்தங்களை கடுமையாக மீறியுள்ளது. பிராந்திய பதட்டங்களை அதிகரித்து, தவறான புரிதல்களையும் தவறான தீர்ப்புகளையும் எளிதில் ஏற்படுத்தியுள்ளது" என்றும் கூறியுள்ளார்.

இந்த இராணுவ நடவடிக்கைகள் மிகவும் மோசமான தன்மை கொண்டவை என்று வர்ணித்த ஜாங், ஆபத்தான நடவடிக்கைகளை உடனே நிறுத்த வேண்டும் என்றும், உடனடியாக எல்லையைக் கடந்த ராணுவ வீரர்களைத் திரும்ப பெற வேண்டும் எனவும், முன் வரிசையில் இருக்கும் ராணுவ வீரர்கள் கண்டிப்பாக நடந்து கொள்ள வேண்டும் என்றும், துப்பாக்கிச் சூடு நடத்திய நபர்களை விசாரித்து தண்டிக்க வேண்டுமென இந்திய தரப்பை வலியுறுத்தியுள்ளார்.  மேலும் இதுபோன்ற சம்பவங்கள் பின்னாளில் எழ வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

China
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment