தேசிய பாதுகாப்புப் படை (NSG) மற்றும் அமெரிக்க சிறப்பு அதிரடிப் படை (SOF) மேற்கொள்ளும் TARKASH பயங்கரவாத தடுப்பு பயிற்சி தற்போது சென்னையில் நடந்து வருகிறது. போர் உலகிற்கு அச்சுறுத்தலாக இருக்கிறது. மெமிக்கல் மற்றும் பையோ போர் இரண்டும் உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக உள்ளது. இந்நிலையில், தற்போது இந்தியா-அமெரிக்கா இடையே பயங்கரவாத தடுப்பு கூட்டுப்பயிற்சி நடந்து வருகிறது. இந்த பயிற்சியில் முதல் முறையாக அணு மற்றும் உயிரி பயங்கரவாத தாக்குதல்களுக்கு எதிராக பயிற்சி நடைபெறுகிறது. Chemical, Biological, Radiological and Nuclear (CBRN) போருக்கு எதிராக கூட்டுப்பயிற்சி மேற்கொள்ளப்படுகிறது.
6-வது முறையாக நடைபெறும் இந்த கூட்டுப்பயிற்சி இந்தாண்டு ஜனவரி 16-ம் தேதி தொடங்கப்பட்டது. பிப்ரவரி 14-ம் தேதிவரை நடைபெறுகிறது. ரஷ்யா - உக்ரைன் போர் பின்னணியில் இந்த கூட்டுப்பயிற்சி நடைபெறுகிறது. சென்னையில் நடைபெற்று வரும் பயிற்சியில் மெமிக்கல் மற்றும் உயிரி தாக்குல்களை எதிர்ப்பதற்கான பயிற்சியையும் சேர்க்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
பயிற்சி குறித்து மூத்த அதிகாரி கூறுகையில், "இந்த கூட்டுப்பயிற்சியில் முதல் முறையாக சி.பி.ஆர்.என் பயங்கரவாத எதிர்ப்பு பயற்சி சேர்க்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சியின் போது கெமிக்கல் போர் ஏஜென்சி சர்வதேச உச்சிமாநாட்டின் அரங்கை தாக்குவது போன்று ஒத்திகை பார்க்கப்பட்டது. அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஒத்திகை பார்க்கப்பட்டது. . NSG மற்றும் US (SOF) குழுக்களின் கூட்டுப் பயிற்சியின் நோக்கம், பயங்கரவாதிகளை விரைவாக நடுநிலையாக்குவது, பணயக்கைதிகளை பாதுகாப்பாக மீட்பது மற்றும் பயங்கரவாதிகள் எடுத்துச் செல்லும் ரசாயன ஆயுதங்களை செயலிழக்கச் செய்வது ஆகும்" என்று தெரிவித்தார்.
IAF ஹெலிகாப்டர்கள் மூலம் இலக்கை தாக்குவது போன்ற ஒத்திகையும் செய்யப்பட்டது. வெற்றிகரமாக இலக்கை தாக்கி அழிப்பது, பணயக்கைதிகளை மீட்பது மற்றும் இரசாயன முகவர் ஆயுதத்தை செயல் இழக்கச் செய்வது ஆகியவை பயிற்சி செய்யப்பட்டது.
"இந்தப் பயிற்சியானது, திறமையான CBRN பயங்கரவாத பதிலளிப்பதற்கான திறமையை மேம்படுத்துவதற்கும், திறன்களை மேம்படுத்துவதற்கும் இரு படைகளுக்கும் வாய்ப்பளித்தது. அமெரிக்க சிறப்புப் படைகள் மற்றும் NSG ஆகியவற்றின் இரசாயன, உயிரியல், கதிரியக்க மற்றும் அணுசக்திப் போர்களில் உள்ள பொருள் வல்லுநர்கள் நகர்ப்புற பயங்கரவாத எதிர்ப்பு சூழலில் CBRN அச்சுறுத்தலைக் கையாள்வதில் மதிப்புமிக்க அறிவைப் பரிமாறிக்கொண்டனர்" என்று அதிகாரி கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.