மீண்டும் நடைமுறைக்கு வருகிறது வேத கல்வி பள்ளிகள்… வாரியத்தின் முதல் தலைவரா ராம்தேவ் ?

பாடத்திட்டங்கள், தேர்வுகள், சான்றிதழ்கள் ஆகியவற்றை தயாரித்து வருகின்றோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

By: Updated: February 25, 2019, 01:09:50 PM

First Vedic education board : யோகா குருவான ராம் தேவ், இந்தியாவின் முதல் வேதக் கல்வி வாரியத்தின் தலைவராக செயல்படலாம் என்று தேர்வுக் குழு கூறியுள்ளது.

ஐந்து பேர் அடங்கிய குழுவின் இந்த தேர்வினை, மத்திய மனிதவளத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவதேகர் தலைமையில் இயங்கி வரும் மஹார்ஷி சண்டிபனி ராஷ்ட்ரியா வேதவித்யா ப்ரதிஷ்தன் அமைப்பு பரிசீலனை செய்யும் என்று கூறப்பட்டுள்ளது.

வேதக் கல்வியை போதிக்கும் வகையில், மனித வள மேம்பாட்டுத் துறையின் கீழ் தன்னிச்சையாக செயல்பட்டு வருகிறது MSRVP அமைப்பு.

பதஞ்சலி நிறுவனத்தின் யோக்பீத் தொண்டு அமைப்பு உட்பட மூன்று தனியார் நிறுவனங்கள் இந்த பதவிக்கான தங்களின் விருப்ப மனுக்களை அளித்தன. MSRVP விருப்பமனுக்களை வழங்கி வந்தது குறிப்பிடத்தக்கது. யோக்பீத் இல்லாமல் ரிட்னாண்ட் பால்வேத் கல்வி அறக்கட்டளை மற்றும் புனேவை மையமாக கொண்டு இயங்கி வரும் மகாராஷ்ட்ரா இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி உள்ளிட்ட இரண்டு நிறுவனங்களும் இந்த பட்டியலில் அடங்கும்.

பாடத்திட்டங்களை தயாரிக்கும் பணியில் யோக்பீத்

இந்த மூன்று நிறுவனங்களும் தங்களின் அறிக்கையினை சமர்பித்தனர். நேசனல் புக் ட்ரஸ்ட்டின் புதிய சேர்மென் கோவிந்த் பிரசாத் ஷர்மா முன்னிலையில் யோக்பீத்திற்கான அறிக்கையை ஆச்சரியா பால்கிருஷ்ணா சமர்பித்தார்.

யோக்பீத் சார்பில், இந்த வேத கல்வியை வளர்க்கும் பொருட்டு ரூ.21 கோடியை அளித்துள்ளது. இது குறித்து ஆச்சரியா பேசும் போது கல்வி எனப்படுவது ஆனா ஆவண்ணா கற்றுக் கொள்வது மட்டுமல்ல. மாணவர்கள் இந்தியாவின் கலாச்சாரம், பண்பாடு, பழக்கவழக்கம், ஆகியவற்றையும் கற்றுக் கொள்ள வேண்டும். ஏற்கனவே நாங்கள் ஆச்சார்யாகுலம் என்ற பள்ளியை நடத்தி வருகின்றோம்.

பி.எஸ்.பி. – இந்த கல்வி முறையின் மூலம் இந்தியாவின் பாரம்பரியம் பற்றிய அறிவினை நிலை நிறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டது. வேதம், சமஸ்கிருதம், சாஸ்த்ரம், மற்றும் தர்சணம் ஆகியவற்றை இந்த கல்வி மூலம் மாணவர்களுக்கு அறிமுகம் செய்ய உள்ளோம். இதற்கும் பாடத்திட்டங்கள், தேர்வுகள், சான்றிதழ்கள் ஆகியவற்றை தயாரித்து வருகின்றோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:First vedic education board chief will be ramdev panel says

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X