Advertisment

ஐ.என்.எஸ் டிரின்காட் போர்க் கப்பலின் தலைமைப் பொறுப்பை ஏற்கும் முதல் பெண்

லெப்டினன்ட் கமாண்டராக இருக்கும் அவர் மேற்கு கடற்பரப்பில் நிலைநிறுத்தப்படும் வேகமான தாக்குதல் கப்பலான ஐ.என்.எஸ் டிரிங்காட்க்கு தலைமை தாங்குவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் இன்னும் பொறுப்பேற்க வில்லை.

author-image
WebDesk
New Update
Ship navy.jpg

இந்திய கடற்படை தனது ஐ.என்.எஸ் டிரிங்காட் போர் கப்பலுக்கு முதல் பெண் கட்டளை அதிகாரியை (woman commanding officer) நியமித்துள்ளது. கடற்படையின் “all roles-all ranks” என்ற தத்துவத்தின் அடிப்படையில் முதல் பெண் கட்டளை அதிகாரியை கடற்படை நியமித்துள்ளது என்று கடற்படைத் தலைமை அட்மிரல் ஆர்.ஹரி குமார் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

Advertisment

லெப்டினன்ட் கமாண்டராக இருக்கும் அவர் மேற்கு கடற்பரப்பில் நிலைநிறுத்தப்படும் வேகமான தாக்குதல் கப்பலான ஐ.என்.எஸ் டிரிங்காட்க்கு தலைமை தாங்குவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் இன்னும் பொறுப்பேற்க வில்லை.

பெண் அதிகாரி ஒருவர் கப்பலின் தலைமைப் பொறுப்பை ஏற்பது இதுவே முதல் முறை. பொறுப்பேற்றும் பெண் அதிகாரி ஒரு தகுதிவாய்ந்த வழிசெலுத்தல் பயிற்றுவிப்பாளர் (Navigation instructor) ஆவர். மேலும் அவர் கடற்படை சேருபவர்களுக்கான  ட்ரைனிங் அம்சர்வராகவும்  (Training observers) உள்ளார். 

கடற்படையின் Tupolev Tu-142 ரோந்து கப்பலில் பார்வையாளராகப் பணியாற்றிய முதல் பெண் அதிகாரி என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.

அட்மிரல் குமார் கூறுகையில், அதிகாரி தகுதி மற்றும் தேர்வுகளுக்கான அனைத்து செயல்முறைகளையும் கடந்து செல்ல வேண்டும் என்றும், பொறுப்பேற்கும் முன் ஆணையத்திற்கு முந்தைய பயிற்சியைப் பெறுவார் என்றும் கூறினார்.

கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பலும் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்காக அவர்கள் தன்னார்வத்தை வளர்த்துக் கொண்டு சேர வேண்டும். திறமைத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் மற்றும் பொறுப்பேற்பதற்கு முன் கடுமையான பயிற்சி பெற வேண்டும் என்று அவர் கூறினார்.

அக்னிவீரர் பெண்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை தற்போது 1,000-ஐ கடந்துள்ளது. பெண்களை சேவையில் ஈடுபடுத்துவதற்கான ‘all roles, all ranks’ அணுகுமுறையின் தத்துவத்திற்கு இந்த புள்ளி விவரங்கள் சான்றாக நிற்கின்றன” என்று கூறினார். தேர்வு செய்யப்பட்ட பெண் குறித்து கடற்படை வேறு எந்த தகவலும் தெரிவிக்க வில்லை. 

மார்ச் மாதம், இந்திய விமானப் படை குரூப் கேப்டன் ஷாலிசா தாமியை மேற்குத் துறையில் ஒரு முன்னணி போர்ப் பிரிவின் தலைமைப் பொறுப்பை ஏற்கத் தேர்ந்தெடுத்தது. ராணுவத்தில் பல பெண் அதிகாரிகள் நாடு முழுவதும் உள்ள பல்வேறு பிரிவுகளுக்கு தலைமை தாங்கி வருகின்றனர்.

ஆங்கிலத்தில் படிக்க:  https://indianexpress.com/article/india/a-first-woman-officer-to-take-over-command-of-warship-ins-trinkat-9050386/

இந்திய ஆயுதப் படையில் மருத்துவ சேவைகள் உட்பட 10,493 பெண் அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர். 3 சேவைகளில் ராணுவத்தில் அதிக பெண்கள் பணியாற்றுகின்றனர்.  ராணுவம் 1,705 பெண் அதிகாரிகளைக் கொண்டுள்ளது, அதைத் தொடர்ந்து விமானப் படையில் 1,640 மற்றும் கடற்படையில் 559 பெண் அதிகாரிகள் உள்ளனர். இந்தத் தரவுகள் கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் மத்திய அரசாங்கத்தால் சமர்ப்பிக்கப்பட்டது.

 

 

India Indian Navy
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment