Advertisment

மீனை சைவ உணவாக மாற்ற வேண்டும்: தமிழிசை கோரிக்கை; காரணம் என்ன?

கடலில் மீன் பிடிக்க செல்லும் மீனவர்களுக்கு இயற்கை சீற்றத்தில் இருந்து பாதுகாக்க அனைத்து மீனவர்களுக்கும் ஸ்மார்ட் போன் வழங்கப்படும்- துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்

author-image
WebDesk
New Update
Tamilisai.jpg

புதுச்சேரி அரசு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் சாகர் பயணத் திட்டம் தொடக்கம். மத்திய, மாநில அரசுகளின் நலத்திட்ட உதவிகள் மற்றும் மீனவர்களுக்கு கிசான் கடன் அட்டை வழங்கும் விழா காரைக்கால் மீன்பிடி துறைமுக வளாகத்தில் நேற்று (07-10-2023) நடைபெற்றது. 

Advertisment

துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் சிறப்பு விருந்தினராக விழாவில் கலந்து கொண்டார். மத்திய மீன்வளம், கால்நடைவளர்ப்பு மற்றும் பால்வள அமைச்சர் பர்சோத்தம் ரூபாலா, மத்திய மீன்வளத்துறை இணை அமைச்சர் டாக்டர் எல். முருகன்  சட்டப்பேரவைத் தலைவர் R. செல்வம்,  உள்துறை அமைச்சர்  A. நமச்சிவாயம், பொதுப்பணி மற்றும் மீன்வளம் & மீனவர் நல அமைச்சர்,  க. லட்சுமி நாராயணன்,  போக்குவரத்து & நல அமைச்சர் S. சந்திர பிரியங்கா, மாவட்ட ஆட்சியர் . A. குலோத்துங்கன், இயக்குநர்  முகமது இஸ்மாயில் ஆகியோர் உடனிருந்தனர். துணைநிலை ஆளுநர் மத்திய அமைச்சர்களுடன் இணைந்து மீனவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். 

 Pudu.1.jpg

விழாவில் தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில்,  மீனவ சகோதரர்களுக்கு என்னென்ன உதவிகளை செய்ய முடியுமா அதனை மத்திய, மாநில அரசுகள் சிறப்பாக செய்து கொண்டு வருகின்றன. மீனவர் சமுதாய மக்களுக்கு உதவிகள் தேவை என்று அரசாங்கம் முடிவு செய்து அது தொடர்பான கோப்புகள் என்னிடம் வந்தால் அதை உடனடியாக ஒப்புதல் அளித்து வருகிறேன்.

மருத்துவராக கூறுகிறேன்

நாம் உண்ணும் மீனில் ‘ஒமேகா 3’ சத்து நிறைந்திருக்கிறது. எனவே, மீன் அதிகமாக சாப்பிடுபவர்களுக்கு பெரும்பாலும் மாரடைப்பு வராது. மீன் உணவை சைவ உணவில் சேர்ப்பதன் மூலம் அதனை அதிகமான மக்கள் சாப்பிட முடியும். எப்படி முட்டையில் அதிகமான புரோட்டின் இருந்ததால் அதை அசைவத்தில் இருந்து சைவமாக மாற்றி இருந்தார்களோ அதைப்போல மீனையும் மாற்ற வேண்டும். இதனை ஆளுநராக இல்லாமல் மருத்துவராகவும் கூறுகிறேன். 

 Pudu.12.jpg

மீனை சாப்பிட ஆரம்பித்தால் எளிதில் அதனை விட்டுவிட முடியாது. மீனவர்களின் பதப்படுத்தும் முறை திறமையானது. மீனை உணவாக எடுத்துக்கொள்ள முடியாத சூழலில் அதனை கருவாடாக மாற்றி கொடுத்துக் கொண்டிருக்கிறீர்கள். அந்த கலையை உலகிற்கு மீனவர் சமுதாயம் தான் சொல்லிக்கொடுத்து இருக்கிறது. 

மத்திய அரசு மீனவர் சமுதாயத்தை ‘ஜிபிஎஸ் சிஸ்டம்’ முறைகளின் மூலம் பாதுகாக்கிறது. ஐதராபாத் மீன் வளத்துறை அலுவலகத்தில் ஒரு கூட்டம் நடைபெற்ற போது, ஆராய்ச்சி விண்வெளி நிறுவனங்களோடும், பாதுகாப்பு நிறுவனங்களோடும் இணைந்து மீனவச் சகோதரர்களுக்கு சுனாமி, புயல், கடல் சீற்றம் போன்ற பேரிடர்கள் நிகழ்வதை முன்கூட்டியே தெரிந்து அவர்களுக்கு ‘ஸ்மார்ட் மொபைல் போன்’ மூலம் தெரியப்படுத்த ஆலோசனை சொன்னார்கள். அதற்கு, “அத்தனை மீனவர் சகோதரர்களிடமும் ஸ்மார்ட் போன் இருக்குமா?” என்று நான் கேட்டேன். 

 Pudu.3.jpg

அவர்கள் “தெரியாது” என பதிலளிக்க, “இந்த தொழில்நுட்பத்தை நீங்கள் சிறப்பாக வடிவமைத்து கொடுத்தால் புதுச்சேரியில் மீனவ சகோதரர்களின் பாதுகாப்பிற்காக அவர்களுக்கு ஸ்மார்ட் போன் தருவதற்கான அத்தனை முயற்சிகள் மேற்கொள்ளப்படும்” என்று சொன்னேன். ஏனென்றால், இது மீனவர்களின் பாதுகாப்புக்கு மிகவும் உகந்தது. 

பொன்னாடைகளுக்குப் பதிலாக கைத்தறி ஆடை

பாரதப் பிரதமர் ஆட்சிக்கு வந்த பிறகுதான் மீன் வளத்துறைக்கு தனி அமைச்சகம் அளிக்கப்பட்டது. அதற்கு நாம் நன்றியை தெரிவித்துக் கொள்ள வேண்டும். மரியாதைக்குரிய சுஷ்மா ஸ்வராஜ் ராமநாதபுரத்தில் ஒரு கூட்டதிற்கு வந்திருந்தார். அப்போது மீனவச் சகோதரர்களை கொண்டு அவரிடம் ஒரு கோரிக்கை வைக்கப்பட்டது. அவர் மீன்வளத்துறை அமைத்து தரப்படும் என்று உறுதி கொடுத்தார். அதனால் அவர் சொன்னது போலவே மீன் வளத்துறை அமைக்கப்பட்டது. 

மீனவ சகோதரர்களுக்கு மீன்பிடிப்பது மட்டுமல்லாது அவர்களின் குழந்தைகளை படிக்க வைப்பது அவர்களின் தொழிலை தொழில்நுட்பங்கள் மூலம் மேம்படுத்துவதற்கும் இது போன்ற அனைத்து உதவிகளும் இந்த அரசாங்கம் செய்ய வேண்டும். மீனவர்கள் தொழில்நுட்பத்தோடு அவர்களின் தொழில் வளர திறன் மேம்படுத்தப்பட வேண்டும், அவர்களின் குழந்தைகள் நன்றாக படிக்க வேண்டும் என்பது என் விருப்பம். அதனை அரசு செய்ய வேண்டும்.

 Pudu.4.jpg

சமீபத்தில் மீனவர் சமுதாயம் அரசலாறு முகப்பு தூர்வாரப்பட வேண்டும்,  ரூ.70 கோடியில் துறைமுகம் விரிவாக்கப்பட வேண்டும் என்று பல கோரிக்கைகள் வைத்தார்கள். இதனை நிறைவேற்றுவதற்கு மாநில அரசு உதவியாக இருக்கும். அதை போல எந்த விதத்தில் மத்திய அரசு உதவ முடியுமோ அதற்கு உறுதுணையாக மத்திய அமைச்சர்கள் இருப்பார்கள். 

மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு ஒரு வேண்டுகோள். அதிகாரிகளைச் சிறப்பு செய்ய பொன்னாடைகளுக்கு பதிலாக கைத்தறி ஆடைகளை கொடுத்தால் நெசவாளர்கள் வாழ்க்கை மேம்படும். இதனை பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நாட்டின் பொருளாதாரம் மீன் பிடிப்பதில் இருப்பதைப் போல கைத்தறி ஆடைகளை நெய்வதில் அவர்களின் பொருளாதாரம் இருக்கிறது என்றார். 

Pudu.5.jpg


செய்தி: பாபு ராஜேந்திரன்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Puducherry Dr Tamilisai Sounderrajan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment