புனேவில் அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு; ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்த சோகம்

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதல் லோனாவாலாவில் பெய்த கனமழையால் புஷி அணை நிரம்பி அருவியில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதல் லோனாவாலாவில் பெய்த கனமழையால் புஷி அணை நிரம்பி அருவியில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.

author-image
WebDesk
New Update
Lonavala falls

லோனாவாலா, பூஷி அணைக்கட்டுப் பகுதியில் அதிகாலை முதல் பெய்த கனமழையால், புஷி அணை நிரம்பி, அருவிகளின் வரத்து அதிகரித்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். (Screengrab)

Listen to this article
0.75x1x1.5x
00:00/ 00:00

ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் லோனாவாலாவில் உள்ள புஷி அணைக்கு பின்னால் உள்ள நீர்வீழ்ச்சியில் 3 குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் மூழ்கி உயிரிழந்தனர். திங்கட்கிழமை மாலைக்குள், காணாமல் போன அவர்களது 5-வது உறவினரான நான்கு வயது குழந்தையின் சடலத்தையும் போலீசார் மீட்டனர்.

ஆங்கிலத்தில் படிக்க: 5 from a Pune family drown in Lonavala waterfall

Advertisment

போலீசார் கூறுகையில், புனேவின் ஹடப்சர் பகுதியைச் சேர்ந்த குடும்பம் சுற்றுலாவுக்காக லோனாவாலாவுக்குச் சென்றுள்ளனர். அங்கேதான் இந்த சோகம் நடந்துள்ளது.

ஐ.என்.எஸ் சிவாஜி மற்றும் சிவ்துர்க் மித்ரா மண்டல் உறுப்பினர்களுடன் புனே கிராமப்புற போலீசார் மீட்பு நடவடிக்கையை மேற்கொண்டனர், அதில் மூன்று உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன: அமீனா சல்மான் என்ற அடில் அன்சாரி (13), அவரது சகோதரி உமேரா சல்மான் என்ற அடில் அன்சாரி (8) மற்றும் ஒரு பெண் ஷாஹிஸ்தா லியாகத் அன்சாரி (37).

திங்கள்கிழமை காலை, மரிய அகில் சய்யாத் (9) சடலம் போலீஸாரால் கண்டெடுக்கப்பட்டது. மாலையில், அட்னான் சபாஹத்தின் உடலும் மீட்கப்பட்டது.

Advertisment
Advertisements

உயிரிழந்த அனைவரும் ஹடப்சரில் உள்ள சய்யத் நகர் பகுதியை சேர்ந்தவர்கள் என போலீசார் தெரிவித்தனர்.

புனே நகரின் ஹடாப்சர் பகுதியைச் சேர்ந்த லியாகத் அன்சாரி மற்றும் யூனுஸ் கான் ஆகியோரின் குடும்பத்தைச் சேர்ந்த சுமார் 18 பேர் ஞாயிற்றுக்கிழமை சுற்றுலாவிற்கு லோனாவாலா வந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

புஷி அணைக்கு பின்புறம் உள்பகுதியில் அமைந்துள்ள அருவிக்கு சென்றனர். முதலில் தண்ணீர் வரத்து குறைவாக இருந்ததாக போலீசார் சந்தேகிக்கின்றனர். ஆனால், கனமழை காரணமாக, அருவி ஓடையில் வேகம் கூடியதால், மாலை 3 மணியளவில் 10 சுற்றுலாப் பயணிகள் அடித்துச் செல்லப்பட்டனர்.

அவர்களில் ஐந்து பேர் மீட்கப்பட்டதாகவும், ஆனால் மற்ற 5 பேரும் அணை நீரை இணைக்கும் நீர்த்தேக்கத்தில் அடித்துச் செல்லப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

சம்பவ இடத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரும், அப்பகுதி மக்களும் அவர்களுக்கு உதவ முயன்றனர். ஆனால், நீரின் வேகமும் அளவும் உயர்ந்து அவர்கள் சிறிது நேரத்திலேயே நீர் ஓடையில் அடித்துச் செல்லப்பட்டனர்.

லோனாவாலா நகர காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சுஹாஸ் ஜக்தாப் கூறுகையில், “இறந்தவர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள், அவர்களில் சிலர் புனேவில் வசிப்பவர்கள், சுற்றுலாவுக்காக லோனாவாலாவுக்கு தனியார் வாகனத்தில் வந்திருந்தனர். அவர்களில் சிலர் தண்ணீர் ஓடையில் விளையாடிக் கொண்டிருந்தபோது, ​​திடீரென தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதனால், அவர்கள் அடித்துச் செல்லப்பட்டனர்.” என்று கூறினார்.

திங்கள்கிழமை காலையும் தேடுதல் பணி தொடர்ந்தது.

உயிரிழந்த 3 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதற்கிடையில், பாதிக்கப்பட்டவர்கள் அருவி ஓடையுடன் பாய்ந்து செல்லும் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது.

சம்பவம் நடந்த இடம் இந்திய இரயில்வே மற்றும் வனத்துறையின் அதிகார வரம்பில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

எனவே, எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க ரயில்வே மற்றும் வனத்துறையின் உதவியுடன் இப்பகுதியில் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

மழை பொழியும் இடங்களில் உள்ள பொதுமக்கள் ஆபத்தான இடங்களுக்குள் செல்ல வேண்டாம் என்றும், சுற்றுலா தலங்களில் பணியில் இருக்கும் போலீசார் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Pune

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: