காஷ்மீர் மாநிலம் சோபர் பகுதியில் இந்திய ராணுவத்தினர் நடத்திய அதிரடி தாக்குதலில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
துப்பாக்கிச் சூடு:
கடந்த வியாக்கிழமை(2.8.18) சோபோர் மாவட்டத்தில் துருசு கிராமத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக ராணுவத்திற்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சோபர் வனபகுதியில் திடீரென்று ராணுவ வீரர்கள் சோதனை நடத்தினர்.அப்போது பாதுகாப்பு படையினரை இருப்பிடத்தை குறிவைத்து பயங்கரவாதிகள் சிலர் நள்ளிரவில் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
தாக்குதல் நடத்தப்பட்ட இடம்
அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாதுகாப்பு படையினரும் தாக்குதல் நடத்தினர். சுமார் 4 மணி நேரம் நடைபெற்ற இந்த தாக்குதலில் முதலில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அதன் பின்பு தொடர்ந்து இரவு முழுவதும் நடைப்பெற்ற இந்த துப்பாக்கி சூடு தற்போது முடிவுக்கு வந்துள்ளது.
ராணுவ வீரர்கள் மற்றும் பயங்கரவாதிகளுக்கு இடையே நடந்த இந்த தாக்குதலில் மொத்தம் 2 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர், மேலும் ராணுவ வீரர் ஒருவர் வீர மரணம் அடைந்துள்ளார். ஒருவர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
சுட்டு கொல்லப்பட்ட பயங்கரவாதிகளில் இருவர் லஷ்கர் இ தொய்பா இயக்கத்தை சேர்ந்த ரியாஸ் அகமது மற்றும் குர்ஷித் அகமது மாலிக் என தெரிய வந்துள்ளது. இதில் ரியாஸ் அகமது பி.டெக் மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது. மற்ற மூவர் குறித்த விவரங்கள் தெரியவரவில்லை.