Advertisment

அருணாச்சலில் காணாமல் போன 5 இளைஞர்களை ஒப்படைக்கிறது சீனா: மத்திய அமைச்சர் ரிஜிஜு

கடந்த வாரம் அருணாச்சல பிரதேசத்தில் இருந்து காணாமல் போன 5 இளைஞர்களை சீனாவின் மக்கள் விடுதலை இராணுவம் (பி.எல்.ஏ) சனிக்கிழமை இந்திய அதிகாரிகளிடம் திருப்பி அனுப்ப உள்ளதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.

author-image
WebDesk
New Update
missing arunachal youth china, india china line of actual control, அருணாச்சலப் பிரதேசம், இந்தியா, சீனா, காணாமல் போன 5 பேர் ஒப்படைப்பு, india china border row, arunachal youth missing, kiren rijiju

கடந்த வாரம் அருணாச்சல பிரதேசத்தில் இருந்து காணாமல் போன 5 இளைஞர்களை சீனாவின் மக்கள் விடுதலை இராணுவம் (பி.எல்.ஏ) சனிக்கிழமை இந்திய அதிகாரிகளிடம் திருப்பி அனுப்ப உள்ளதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.

Advertisment

மத்திய அமைச்சர் ரிஜிஜு இன்று தனது ட்விட்டர் பக்கத்தில், “அருணாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர்களை நம்முடைய பக்கம் ஒப்படைப்பதாக சீன ராணுவம் இந்திய ராணுவத்திடம் உறுதிப்படுத்தியுள்ளது. அவர்களை ஒப்படைப்பது செப்டம்பர் 12ம் தேதி நியமிக்கப்பட்ட இடத்தில் எப்போது வேண்டுமானாலும் நடைபெறும்” என்று தெரிவித்துள்ளார்.

அருணாச்சல பிரதேசத்தின் சுபன்சிரி மாவட்டத்தில் இருந்து காணாமல் போன 5 இளைஞர்கள் இருக்கும் இடம் குறித்து, இந்திய ராணுவம் செவ்வாய்க்கிழமை சீனாவிடம் இருந்து ஒரு தகவலைப் பெற்றது. சீன-இந்திய எல்லையைத் தாண்டிய நிலையில் இளைஞர்களைக் கண்டுபிடித்ததாக சீனாவின் பி.எல்.ஏ ராணுவம் தெரிவித்திருந்தது.

தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பேசிய, அரசாங்க அதிகாரிகள் மற்றும் உள்ளூர்வாசிகள், மக்கள் வாழ்வாதார நோக்கங்களுக்காக எல்லையில் உள்ள காடுகளின் உட்புற பகுதிகளுக்கு வருவது பொதுவானது என்று கூறினார்கள். சரியான கட்டுப்பாட்டு கோடு பல இடங்களில் தெளிவாக வரையறுக்கப்படவில்லை என்பதால் அவர்கள் சீனாவின் பி.எல்.ஏ ராணுவ வீரர்களால் பிடிக்கப்படுகின்றன என்று அவர்கள் தெரிவித்தனர்.

சீன-இந்திய எல்லையில் சீனாவின் எல்லையில் இளைஞர்கள் காணப்பட்டனர் என்பதை பி.எல்.ஏ உறுதிப்படுத்தியது பற்றிய செய்தியை முதலில் தெரிவித்தவர் அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ரிஜிஜு தான்.

இருப்பினும், கிழக்கு அருணாச்சலத்தைச் சேர்ந்த எம்.பி., தபீர் காவ், சீன மக்கள் விடுதலை இராணுவத்தால் 5 பேரும் கடத்தப்பட்டதாக குற்றம் சாட்டி உள்ளூர் செய்திகளை மேற்கோள் காட்டியிருந்தார். சீனா 5 இளைஞர்கள் இருக்கும் இடத்தைப் பற்றி திங்கள்கிழமை தெரிவித்தது. மேலும், இந்தியாவை வம்புக்கு இழுகும் விதமாக, அருணாச்சலப் பிரதேசத்தை ஒருபோதும் அங்கீகரிக்கவில்லை என்றும் அது தெற்கு திபெத்தின் ஒரு பகுதி என்றும் கூறியது.

“சீனா-இந்தியா எல்லையின் கிழக்குப் பிரிவில் சீனாவின் நிலை அல்லது ஜங்னன் (சீனாவின் ஜிசாங்கின் (திபெத்) தெற்குப் பகுதி) நிலையானது மற்றும் தெளிவானது” என்று சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியன் பெய்ஜிங்கில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார். அப்போது அவர், “அருணாச்சல பிரதேசம் என்று அழைக்கப்படுவதை சீன அரசாங்கம் ஒருபோதும் அங்கீகரிக்கவில்லை.” என்று கூறினார்.

செய்தியாளர்கள், காணாமல் போன இந்தியர்களைப் பற்றி ஏதேனும் புதிய தகவல்கள் உள்ளதா என்று கேட்டபோது, “நீங்கள் குறிப்பிட்டுள்ள நிலைமை எனக்குத் தெரியாது” என்று சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் கூறினார்.

லடாக்கில் சரியான கட்டுப்பாட்டு கோட்டில் எல்லை பிரச்னை ஏற்பட்டுள்ளதற்கு மத்தியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மற்றும் சீனப் பிரதிநிதி வாங் யி இடையே இரண்டரை மணி நேர இருதரப்பு பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர், இரு தரப்பினரும் வியாழக்கிழமை எல்லையில் நிலைமையை பின்வாங்குவதற்கும் நிலைமையை குறைப்பதற்கும் 5 அம்ச உடன்பாட்டை எட்டினர்.

மார்ச் மாதம், ஒரு 21 வயது நபரை சீன ராணுவம் அசபிலா பிரிவில் இருந்து மெக்மோஹன் கோட்டிற்கு அருகே கடத்திச் சென்றது. அவருடைய 2 நண்பர்களும் தப்பித்த நிலையில், டோக்லி சிங்கம் துப்பாக்கி முனையில் அழைத்துச் செல்லப்பட்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். சிறைபிடிக்கப்பட்டு 19 நாட்களுக்குப் பிறகு, அந்த இளைஞர் சீன இராணுவத்தால் விடுவிக்கப்பட்டார்.

செப்டம்பர் 2ம் தேதி, வடக்கு சிக்கிமில் ஒரு எல்லைப் பகுதியில் 17,500 அடி உயரத்தில் ஸீரோ வெப்பநிலைக்கும் கீழே உள்ள பகுதியில் வழி தவறி வந்த 3 சீன குடிமக்களுக்கு இந்திய இராணுவம் உணவு, கதகதப்பான உடைகள் மற்றும் மருத்துவ உதவிகளை வழங்கியது.

அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த இந்திய ராணுவ வீரர்கள் ஒரு பெண் உட்பட 3 சீன குடிமக்களுக்கு சீனாவுக்கு திரும்பிச் செல்ல வழிகாட்டினர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
India China Arunachal Pradesh
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment