Assembly Elections 2022, Himachal to vote on Nov 12, results on Dec 8, no dates for Gujarat, Gujarat Assembly Elections 2022, குஜராத் சட்டமன்ற தேர்தல் தேதி, குஜராத் சட்டமன்ற தேர்தல், பாஜக, காங்கிரஸ் | Indian Express Tamil

மீண்டும் திரும்பிய 2017.. குஜராத்துக்கு ஏன் தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை?

தற்போதைய குஜராத் சட்டப்பேரவையின் பதவிக் காலம் பிப்ரவரி 18ஆம் தேதியோடும், இமாச்சலப் பிரதேசத்தின் சட்டப்பேரவை பதவிக்காலம் ஜனவரி 8ஆம் தேதியோடும் நிறைவடைகிறது.

Flashback 2017 as EC again skips Gujarat in poll schedule announcement
குஜராத், இமாச்சலப் பிரதேச மாநிலங்கள் கடந்த காலங்களில் ஒரே மாதிரி தேர்தலை சந்தித்தன. தற்போது 2017 மீண்டும் திரும்பியுள்ளது.

குஜராத் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்புகள் இன்றைய தினம் (வெள்ளிக்கிழமை) மாலை 3 மணிக்கு அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில்,இமாச்சல் பிரதேச சட்டப்பேரவை தேர்தல் தேதி மட்டுமே அறிவிக்கப்பட்டது.

குஜராத் சட்டமன்ற தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படவில்லை. இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார், “குஜராத் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பில் கடந்த கால முறையை பின்பற்றுகிறோம்” என்றார்.

மேலும், குஜராத் சட்டப்பேரவை நாள்கள் முடிய இன்னமும் 40 நாள்கள் இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். குஜராத், இமாச்சலப் பிரதேசத்துக்கு ஒரே மாதிரியான தேர்தல் அறிவிக்கப்படாமல் இருப்பது இது முதல் முறையல்ல.

கடந்த 2017ஆம் ஆண்டு தேர்தலிலும் இதுபோன்று நடந்தது. இமாச்சலப் பிரதேசத்தின் தேர்தல் தேதி அக்டோபர் 13ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.
ஆனால் குஜராத் சட்டப்பேரவை தேர்தல் தேதி அக்டோபர் 25ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.

இமாச்சலப் பிரதேசத்தில் ஒரே கட்டமாக நவம்பர் 9ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. ஆனால் குஜராத்துக்கு இரண்டு கட்டங்களாக டிசம்பர் 9 மற்றும் 14 ஆகிய இரு தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது.

எனினும் வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 18ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. தற்போதைய குஜராத் சட்டப்பேரவையின் பதவிக் காலம் பிப்ரவரி 18ஆம் தேதியோடும், இமாச்சலப் பிரதேசத்தின் சட்டப்பேரவை பதவிக்காலம் ஜனவரி 8ஆம் தேதியோடும் நிறைவடைகிறது.

இந்த நிலையில் தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பேசிய குரேஷி, “இது சில தீவிரமான கேள்விகளை எழுப்புகிறது. இரு மாநில சட்டசபைகளின் விதிமுறைகள் கிட்டத்தட்ட ஒத்துப்போகின்றன. எனவே குஜராத் சட்டப்பேரவைக்கான தேதிகளை அறிவிக்க தேர்தல் ஆணையம் ஏன் காத்திருக்க வேண்டும்?” என்றார்.

2002-03 கோத்ரா கலவரத்திற்குப் பிறகு, குஜராத் சட்டமன்றம் முன்கூட்டியே கலைக்கப்பட்டதைத் தவிர, இந்த அறிவிப்புகள் ஒன்றாகவே இருந்தன.
மேலும், “இமாச்சல் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு முன்பே குஜராத்தில் வாக்குப்பதிவு முடிவடையும் என்று தலைமை தேர்தல் ஆணையர் ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளார்” எனவும் குரேஷி சுட்டிக் காட்டினார்.
தொடர்ந்து, இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள வாக்குகளை எண்ண இத்தனை காலம் காத்திருக்க வேண்டும் எனவும் அவர் கேள்வியெழுப்பினார்.
இந்த நிலையில், குஜராத் தேர்தல் அறிவிப்பை பாஜக தாமதப்படுகிறது எனக் காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Flashback 2017 as ec again skips gujarat in poll schedule announcement