/tamil-ie/media/media_files/uploads/2020/03/New-Project-2020-03-08T191822.149.jpg)
தவிர்க்க முடியாத சூழ்நிலைகளால் வெளிநாட்டில் சிக்கித் தவிக்கும் இந்தியர்கள் நாடு திரும்ப இந்திய அரசு விமானங்கள் மற்றும் கடற்படை கப்பல்கள் மூலம் பயணங்கள் ஏற்பாடு செய்யப்படுவதாகவும், இதற்கான இதற்கான பட்டியல் தூதரகம் மூலம் தயார் செய்யப்பட்டு வருகிறது என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த மீட்பு நடவடிக்கைக்கு "வந்தே பாரத் மிஷன்" என்று பெயரிடப்பட்டுள்ளது. மே 7 முதல் 13 வரை 64 விமானங்கள் மூலம் 14,800 இந்தியர்களை அழைத்து வர திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தியா ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு 10, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்துக்கு தலா ஏழு , சவுதி அரேபியாவிற்கு ஐந்து , சிங்கப்பூருக்கு ஐந்து ,கத்தாருக்கு இரண்டு விமானங்களின் மூலம் சிக்கித் தவிக்கும் இந்தியர்கள் தாயகத்திற்கு திருப்பி அனுப்பி வைக்கப் படுவார்கள் என்று விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் தெரிவித்தார். அதே நேரத்தில், இந்தியா மலேசியா மற்றும் பங்களாதேஷுக்கு தலா ஏழு விமானங்களும் , குவைத் மற்றும் பிலிப்பைன்ஸுக்கு தலா ஐந்து விமானங்களும் , ஓமான் மற்றும் பஹ்ரைனுக்கு தலா இரண்டு விமானங்களும் இயக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.
Commenced preparations for Vande Bharat Mission. Planning underway for stranded Indian nationals to return home starting 7th May. Urge them to keep in regular touch with their Embassies. pic.twitter.com/uFtNijO3DO
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) May 5, 2020
இந்த சிறப்பு விமானங்கள் ஏர் இந்தியா மற்றும் அதன் துணை நிறுவனமான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மூலம் இயக்கப்படுகின்றது. லண்டன்- டெல்லி / மும்பை / அகமதாபாத் / பெங்களூர் பயணத்திற்கு தலா ரூ .50,000 மற்றும் டாக்கா-டெல்லி விமானத்திற்கு ரூ .12,000 வசூலிக்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. அமெரிக்காவிலிருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு ரூ .1 லட்சம் கட்டணம் வசூலிக்கப்படும், துபாயிலிருந்து வரும் பயணிகள் ரூ .13,000-த்தை கட்டணமாக செலுத்த வேண்டும்.
கேரளா மாநிலத்திற்கு அதிகபட்ச (15) எண்ணிக்கையிலான விமானங்கள் இயக்கப்படுகின்றன. டெல்லி-என்.சி.ஆர் மற்றும் தமிழ்நாட்டிற்கு தலா 11, மகாராஷ்டிரா மற்றும் தெலுங்கானாவுக்கு ஏழு, குஜராத் மாநிலத்திற்கு ஐந்து, ஜம்மு-காஷ்மீர் மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு தலா மூன்று, பஞ்சாப்/ உத்தர பிரதேச மாநிலத்திற்கு தலா ஒரு விமானங்கள் இயக்கப்படுகிறது.
இந்திய தூதரகங்களும் உயர் ஆணையங்களும் தயாரித்த பயணிகள் பட்டியலில் உள்ளவர்களுக்கு மட்டுமே விமான டிக்கெட் வழங்கப்படும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமானம் ஏறும் முன்பாக பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்படும். அறிகுறிகள் இல்லாத பயணிகள் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப் படுவார்கள். சுகாதார அமைச்சகம் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள சுகாதார நெறிமுறைகள் உட்பட அனைத்து விதிகளையும் பயணத்தின் போது பயணிகள் கடைப்பிடிக்க வேண்டும்.
சேருமிடத்தை அடைந்தவுடன், அனைவரும் தங்களை ஆரோக்ய சேது செயலியில் பதிவு செய்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொருவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்படும். ஆய்வுக்கு பிறகு, மருத்துவமனையிலோ அல்லது நிறுவன தனிமைப்படுத்துதல் வசதியிலோ தொடர்புடைய மாநில அரசால் 14 நாட்களுக்கு இவர்கள் கட்டண அடிப்படையில் தனிமைப்படுத்தப் படுவார்கள். 14 நாட்களுக்கு பிறகு கோவிட் பரிசோதனை செய்யப்பட்டு சுகாதார வழிமுறைகளின் படி மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.