Advertisment

இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு விமான சேவை ; இன்று முதல் ஆரம்பம்...

வருகின்ற 31ம் தேதி வரை இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு 18 முறை விமானங்கள் இயக்கப்பட உள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Flight service started from today between India and America

Flight service started from today between India and America :  இந்தியா- அமெரிக்காவிற்கு இடையே அமெரிக்கன் கெரியர் யுனிடெட் ஏர்லைன்ஸ் நிறுவனம் இன்று முதல் இயங்க உள்ளது.   இன்று முதல் வருகின்ற 31ம் தேதி வரை மொத்தமாக 18 விமானங்களை அந்த நிறுவனம் இயக்க உள்ளது.

Advertisment

மேலும் படிக்க : தீபிகாவிற்கு இந்த உணவு மட்டும் போதுமாம்… வாழ்நாள் முழுவதும் வாழ்ந்து கொள்வாராம்!

இது தொடர்பாக விமான போக்குவரத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி வெளியிட்டிருக்கும் ட்விட்டர் பதிவில் 31ம் தேதி வரை டெல்லியில் இருந்து நியூயார்க்கிற்கு தினமும் ஒரு விமானமும், டெல்லியில் இருந்து சான்ஃபிரான்சிஸ்கோவிற்கு இடையே 3 விமானங்களும் இயங்கும் என்று தெரிய வந்துள்ளது.

இதே போன்று இந்தியாவில் இருந்து பாரிஸூக்கும் விமான சேவைகள் துவங்க உள்ளது. டெல்லி, மும்பை, பெங்களூரில் இருந்து பிரான்ஸ் தலைநகர் பாரிஸுக்கு ஏர் பிரான்ஸ் நிறுவனம்  18ம் தேதி ஜூலை முதல் ஆகஸ்ட் 1-ம் தேதி வரை 28 விமானங்களை இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் தவிர்த்து ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து போன்ற ஐரோப்பிய நாடுகளுக்கும் விமான சேவைகள் துவங்குவது குறித்து  பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

வந்தே பாரத் திட்டத்தின் மூலம் இதுவரை வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு 2,27,000 நபர்கள் வந்துள்ளனர். அதே போன்று இந்தியாவில் இருந்து இதுவரை 89 ஆயிரம் நபர்கள் தங்களின் சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். கொரோனா காலத்தில் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு விமானங்கள், கப்பல் மற்றும் எல்லை வழியாக மொத்தம் 6,87,000 நபர்கள் வந்துள்ளனர்.

மேலும் படிக்க : 7 நாள்… 700 கிலோமீட்டர்… 73 வயது: சென்னை டு நாங்குநேரி சைக்கிளில் பயணித்த ‘இளைஞர்’

India America
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment