டெல்லியில் குளிர்காலம் தொடங்கியது முதலே காற்று மாசு அதிகரித்து காற்றின் தரக் குறியீடு அளவு மோசமாகி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் டெல்லி இதை எதிர்கொள்கிறது. இந்த ஆண்டில் இன்று (நவ.13) புதன்கிழமை காலையில் முதல் அடர்ந்த மூடுபனி ஏற்பட்டது.
Advertisment
தலைநகரில் சராசரி காற்றின் தரம், காலை 10 மணி நிலவரப்படி, காற்றுத் தரக் குறியீடு (AQI) 370 ஆகப் பதிவாகி, ‘மிகவும் மோசமான’ பிரிவில் தொடர்ந்து இருந்தது.
மூடுபனி காரணமாக, டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் visibility level காலை 9.30 மணி நிலவரப்படி 50 மீட்டராகக் குறைந்து இருந்தது. இதன் காரணமாக விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் low visibility நடவடிக்கைகள் தொடங்கப்பட்டதாக விமான நிர்வாகம் அறிவித்தது.
இந்திய வானிலை ஆய்வுத் துறையின் (IMD) படி, சஃப்தர்ஜங் விமான நிலையத்தில் காலை 5.30 மணிக்கு 200 மீ என poor visibility குறியீடு இருந்தது. அதே நேரத்தில் பாலம் விமான நிலையம் புதன்கிழமை காலை 8.30 மணிக்கு 0 மீ என மிகக் குறைந்த visibility குறியீடு பதிவு செய்ததாக கூறியது.
AQI 428 குறியீடு உடன் மிகவும் காற்று மோசமான பகுதியாக ஆயா நகர், அதைத் தொடர்ந்து 413 AQI-ல் ஆனந்த் விஹார் நிலையம் இருந்தது எனக் கூறியது.
இந்திய வானிலை மையக் கூற்றுப்படி, புதன்கிழமை வடமேற்கு பிராந்தியத்தில் தலைநகரில் அடர்த்தியானது முதல் மிகவும் அடர்த்தியான மூடுபனி நிலவும். வெள்ளிக்கிழமை (நவம்பர் 15) முதல் நவம்பர் 19 வரை மாலையில் மிதமான மூடுபனி நிலவும் எனக் கூறியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Advertisment
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news