ஃபிளிப்கார்ட் குழும சிஇஓ பின்னி பன்சல் திடீர் ராஜினாமா

பன்சல் ராஜினமா செய்துள்ள நிலையில் அவருக்கு பதிலாக கல்யாண் கிருஷ்ணமூர்த்தி தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்

நாட்டின் மிகப்பெரிய இ-காமர்ஸ் நிறுவனமான Flipkart ஐ சச்சின் பன்சல் (Sachin Bansal) மற்றும் பின்னி பன்சல் (Binny Bansal) ஆகியோர் 2008-ஆம் ஆண்டு பெங்களூரில் தொடங்கினார்கள்.

ப்ளிப்கார்ட் (Flipkart) வெறும் 4 இலட்சம் மற்றும் இரண்டு கம்ப்யூட்டர்கள் ஆரம்பிக்கப்பட்ட நிறுவனம் மிகப்பெரிய நிறுவனமாக உருவெடுத்தது. சச்சின் பன்சல் மற்றும் பின்னி பன்சல் இருவரும் IIT-டெல்லியில் படித்தவர்கள். அமேசானில் ஒன்றாக பணிபுரிந்து வந்தார்கள்.

Flipkart நிறுவனம் முதலில் புத்தகத்தை ஆன்லைனில் விற்பனை செய்து வந்தது. இப்போது பல பொருட்களை விற்பனை செய்து வருகிறது. செப்டம்பர் 2015 ல், அதன் இரண்டு நிறுவனர்களும் $ 1.3 பில்லியன் டாலர் மதிப்புடன் Forbes இந்திய பணக்கார பட்டியலில் 86-வது இடத்தைப் பிடித்தனர்.

Myntra, WeRead, Chakpak.com மற்றும் Mime360 ஆகிய நிறுவனங்களை flipkart வாங்கியுள்ளது குறிபிடத்தக்கது.

இந்நிலையில், ஃப்ளிப்கார்ட் குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி பின்னி பன்சல் தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, பாலியல் குற்றச்சாட்டுகள் அவர் மீது முன்வைக்கப்பட்டுள்ளதால் அவர் ராஜினாமா செய்திருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் அவர் இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ளார். இருந்தபோதிலும் அவர் ராஜினமா செய்துள்ளார்.

பின்னி பன்சல் ராஜினமா செய்துள்ள நிலையில் அவருக்கு பதிலாக கல்யாண் கிருஷ்ணமூர்த்தி தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close