கோதாவரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு; ஏனாம் கரையோரம் மணல் மூட்டைகள் வைத்து நீர்வரத்து தடுப்பு
கோதாவரி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக ஏனாம் ஆற்றங்கரையோரம் மணல் மூட்டைகள் வைத்து நீர்வரத்து தடுக்கப்பட்டு வருகிறது என்றும் பொதுமக்கள் அச்சமடைய வேண்டாம் என மண்டல நிர்வாக அதிகாரி முனுசாமி தெரிவித்துள்ளார்.
கோதாவரி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக ஏனாம் ஆற்றங்கரையோரம் மணல் மூட்டைகள் வைத்து நீர்வரத்து தடுக்கப்பட்டு வருகிறது என்றும் பொதுமக்கள் அச்சமடைய வேண்டாம் என மண்டல நிர்வாக அதிகாரி முனுசாமி தெரிவித்துள்ளார்.
Advertisment
கோதாவரி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக ஏழாம் பகுதி மழை மற்றும் வெள்ள நீரால் சூழ்ந்துள்ளது. ஆந்திராவின் தபலேஸ்வரன் அணையில் இருந்து 15 லட்சம் கன அடி நீர் திறந்து விடப்படுவதால் கோதாவரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஏனாமின் தாழ்வான பகுதிகளான குருசம்பேட்டா, பரம்பேட்டா, பிரான்ஸ் பேட்டா, கைரிலாக் போன்ற பகுதிகளில் வெள்ள நீர் புகுந்துள்ளது.
இங்கு மண்டல நிர்வாக அதிகாரி முனுசாமி தலைமையில் பொதுப்பணித்துறை,வருவாய் துறையினர் கரைகளை மணல்மூட்டைகளை கொண்டு பலப்படுத்தி வருகின்றனர். மக்களை பாதுகாப்பான இடங்களை தங்க வைக்க ஏற்பாடு செய்துள்ளனர்.
பொது மக்கள் தங்களுடைய சான்றிதழ்கள், விலையுயர்ந்த பொருட்களை பாதுகாப்பாக வைக்க அறிவுறுத்தியுள்ள மண்டல நிர்வாக அதிகாரி முனுசாமி,கோதாவரி ஆற்றங்கரையோரம் மணல் மூட்டைகள் வைத்து நீர்வரத்து தடுக்கப்பட்டு வருகிறது.இதனால் ஏனாம் மக்கள் அச்சமடைய வேண்டாம்.பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டு கொண்டுள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"