Advertisment

வெள்ள அபாயத்தில் தென்னிந்தியா - பல மாவட்டங்கள் பாதிப்பு

TamilNadu Weather News: நீலகிரிகளில் உள்ள அவலாஞ்ச் பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் 820 மி.மீ மழை பெய்தது. இது தமிழக வரலாற்றில் மிக உயர்ந்ததாகும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Kerala flood, maharastra flood ,karnataka Flood, nilagir,Avalanche,820 mm rainfall, பேரிடர் மேலாண்மனை வாரியம், வெள்ளம்

Kerala flood, maharastra flood ,karnataka Flood, nilagir,Avalanche,820 mm rainfall, பேரிடர் மேலாண்மனை வாரியம், வெள்ளம்

கேரளாவில்:

Advertisment

இடுக்கி மற்றும் கேரளாவின் வடக்கு மாவட்டங்களில் புதிய மழை பெய்ததால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது. கோழிக்கோடு, வயநாடு, இடுக்கி மற்றும் மலப்புரம் ஆகிய இடங்களில் ஐஎம்டி சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.திருவனந்தபுரம் தவிர மாநிலத்தின் மற்ற அனைத்து மாவட்டங்களிலும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.அம்மாநில பேரிடர் மேலாண்மனை வாரியத்தின் அறிக்கையின் படி,இது வரை கேரளாவில் ஒன்பது பேர் வெள்ளத்தாலும்,நிலச்சரிவினாழலும் மரணம் அடைந்துள்ளனர்.

மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவில்:

மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவின் பெரும்பகுதிகள் பரவலான வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன, தொடர்ச்சியான மழையால் அங்கு ஆற்றங்கரைகள் மற்றும் அணைகள் நிரம்பி வழிகின்றன. இதனால் அங்கு இந்திய ராணுவமும்,இந்திய கடற்படையும் களத்தில் இறங்கியுள்ளன.

தமிழகத்தில்:

நீலகிரிகளில் உள்ள அவலாஞ்ச் பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் 820 மி.மீ மழை பெய்தது. இது தமிழக வரலாற்றில் மிக உயர்ந்ததாகும்

 

Flood
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment