இந்தியாவின் முதல் பெண் ஃபைட்டர் பைலட்: உலகிலேயே அதிவேகமான பைலட்டை இயக்கி சாதனை

அப்படித்தான், ஆவனி சதுர்வேதி ஃபைட்டர் விமானத்தை தனியாக இயக்கும் முதல் இந்திய பெண் என்ற சாதனையை சமீபத்தில் நிகழ்த்தியிருக்கிறார்.

பெண்கள் எல்லா துறைகளிலும் தங்கள் கால் தடங்களை பதிந்துகொண்டே தான் இருக்கின்றனர், பல்வேறு தடைகளையும் தாண்டி. ஆனால், எல்லா துறைகளிலும் ஒரு பெண் அந்த பயணத்தை முதன்முறையாக துவங்கிவைக்க வேண்டியுள்ளது. அப்படித்தான், ஆவனி சதுர்வேதி ஃபைட்டர் விமானத்தை தனியாக இயக்கும் முதல் இந்திய பெண் என்ற சாதனையை சமீபத்தில் நிகழ்த்தியிருக்கிறார்.

கடந்த 19-ஆம் தேதி இந்திய விமானப்படையின் ஜாம்நகர் தளத்திலிருந்து எம்.ஐ.ஜி 21-பைசன் (MiG-21 Bison) எனும் ஃபைட்டர் விமானத்தை தனியாளாக இயக்கி சாதனை படைத்தார். இந்த விமானம் உலகிலேயே வேகமாக பறக்கும் (மணிக்கு 340 கி.மீ.) திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

பைலட்டுஸ் பிசி -7 டர்போபிராப்ஸ், கிரான் மற்றும் ஹாக் ஜெட் போன்ற விமானங்களை கையாள்வதில், ஆவனி சதுர்வேதிக்கு கடந்த கால அனுபவங்களும் உள்ளன.

எம்.ஐ.ஜி.-21 பைசன் ஃபைட்டர் விமானத்தை இயக்க, இந்தியாவிலேயே முதன்முறையாக இந்திய விமானப்படையில் தீவிரமான பயிற்சி மேற்கொண்ட முதல் மூன்று பெண்களில் ஆவனி சதுர்வேதியும் ஒருவராவார். மற்றவர்கள் பாவனா காந்த், மோகனா சேத்மு ஆவர்.

ஆவனி சதுர்வேதிக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Flying officer avani chaturvedi scripts history becomes 1st indian woman to fly a fighter jet solo

Next Story
ஃபேஸ்புக் மூலமாக டீச்சரை மிரட்டிய 7 ஆம் வகுப்பு மாணவன் சஸ்பெண்ட்!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com