scorecardresearch

Budget 2023: மனித மலத்தை மனிதன்  அகற்றும் முறை முற்றிலும் ஒழிக்கப்படும்: நிர்மலா சீதாராமன்

இனி மலக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறை முற்றிலுமாக ஒழிக்கப்படும் என்று 2023-24-க்கான பட்ஜெட் உரையில் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில்  2007-க்கு பிறகு மட்டும் 400 தூய்மை பணியாளர்கள் மரணமடைந்துள்ளனர் என்று ஆய்வு கூறுகிறது. இந்த மரணம் அனைத்துமே செப்டிக் டேங்கை சுத்தம் செய்யும் போது நடைபெற்றுள்ளது.  தமிழகத்தில் கடந்த சில மாதங்களில் மட்டும் 30-க்கும் மேற்பட்ட மலக்குழி மரணங்கள் நடைபெற்றதாக ஆங்கில ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது.

இந்நிலையில் செப்டிக் டேங்கை சுத்தம் செய்ய 100% இயந்திரங்களே இனி பயன்படுத்தப்படும் என்றும் இதற்கான முழு முயற்சிகள் எடுக்கப்படும் என்று பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். 

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Fm aims to end manual scavenging announces 100 mechanical de sludging of septics tanks

Best of Express