Advertisment

சி.ஏ படித்த இளம் பெண் மரணம்: ‘எந்த விதத்திலும் அவரை அவமதிக்கவில்லை’; சர்ச்சைக்கு பதிலளித்த நிர்மலா சீதாராமன்

நிர்மலா சீதாராமன் கூறினார்: “துரதிர்ஷ்டவசமான இழப்பு குறித்த வருத்தத்துடன், குழந்தைகளை ஆதரிப்பதற்கான நிறுவனங்கள் மற்றும் குடும்பங்களின் முக்கியத்துவத்தை நான் எடுத்துரைத்தேன், எந்த வகையிலும் தனியாகவோகூட, பாதிக்கப்பட்டவரை அவமானப்படுத்தவோ அல்லது குற்றிப்பிடவோ செய்யவில்லை” என்று கூறினார்.

author-image
WebDesk
New Update
sitharaman nirmala

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் (PTI/File Photo)

சமீபத்தில் இளம் பட்டயக் கணக்காளர் (சி.ஏ) தொழில் நிபுணரின் மரணம் குறித்து நிர்மலா சீதாரமான கூறிய கருத்துகள் சர்ச்சையான நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திங்கள்கிழமை தனது கருத்துக்கள் பாதிக்கப்பட்டவர்களை அவமானப்படுத்துவதற்கானது இல்லை என்று தெளிவுபடுத்தினார்.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: ‘In no way victim shaming’: Nirmala Sitharaman after her remark on CA death sparks row

சிவசேனா - யு.பி.டி அணி தலைவர் பிரியங்கா சதுர்வேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கருத்துக்களை விமர்சித்த எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டதற்கு பதிலளித்த நிர்மலா சீதாராமன் கூறினார்: “துயரமான இழப்பின் வருத்தத்துடன், குழந்தைகளுக்கு ஆதரவாக நிறுவனங்கள் மற்றும் குடும்பங்களின் முக்கியத்துவத்தை நான் எடுத்துரைத்தேன். எந்த விதத்திலும் பாதிக்கப்பட்டவரை அவமானப்படுத்துவது தனியாகக்கூட செய்யப்படவில்லை.” என்று தெரிவித்தார்.

கடந்த சனிக்கிழமை (செப்டம்பர் 21) ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகையில், கேரளாவைச் சேர்ந்த 26 வயதான அன்னா செபாஸ்டியன் பேராயில், புனேவில் உள்ள எர்ன்ஸ்ட் அண்ட் யங் (EY)-ல் வேலை செய்த 4 மாதங்களில் இறந்த சம்பவத்தைப் பற்றி குறிப்பிட்டார். அவரது தாயார் இ.ஒய் இந்தியா தலைவருக்கு எழுதிய கடிதத்தில்,  “வேலை அழுத்தம் மற்றும் நீண்ட வேலை நேரம்” காரணமாக தனது மகள் இறந்துவிட்டதாகக் குற்றம் சாட்டியது, நாடு தழுவிய விவாதத்தைத் தூண்டியது.

பி.டி.ஐ செய்தியின்படி, இந்த நிகழ்ச்சியில் நிர்மலா சீதாராமன் தனது உரையில்: “...கடந்த இரண்டு நாட்களாக செய்திகளில் இருக்கும் ஒரு பிரச்சினை பற்றி விவாதித்துக் கொண்டிருந்தார்... இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பு எங்களுக்கு ஒரு செய்தி வந்தது. இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பு வேலை அழுத்தத்தை சமாளிக்க முடியாமல் சி.ஏ படித்த பெண் ஒருவர் இறந்துவிட்டார். இருப்பினும், மத்திய நிதியமைச்சர் அந்த ஊழியரின் பெயரையோ அல்லது அவர் பணிபுரிந்த நிறுவனத்தையோ குறிப்பிடவில்லை.” என்று தெரிவித்துள்ளது.

“கடின உழைப்பு மற்றும் உழைக்கும் இளம் தலைமுறையினரின் வலியை, ஆளும் அரசாங்கம் மற்றும் நிதியமைச்சகம் கண்டுகொள்வதில்லை” என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியதும் இந்த கருத்து கணிசமான விமர்சனத்தை ஈர்த்தது.

சிவ சேனா (யு.பி.டி) தலைவர் சதுர்வேதியும் எக்ஸ் பக்கத்தில் நிதி அமைச்சரை வசைபாடினார்: “கடுமையான பட்டயக் கணக்கியல் பட்டப்படிப்பைத் தொடர்வதால் ஏற்பட்ட மன அழுத்தத்தை சமாளிக்க அன்னாவுக்கு உள் வலிமை இருந்தது. நச்சு வேலைக் கலாச்சாரம், நீண்ட வேலை நேரம் ஆகியவையே அவளது உயிரைப் பறித்தது. பாதிக்கப்பட்டவர்களை அவமானப்படுத்துவதை நிறுத்துங்கள், குறைந்தபட்சம் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட முயற்சி செய்யுங்கள், நீங்கள் தேடினால் கடவுள் வழிகாட்டுவார் என்று நான் நம்புகிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

அவரது இந்த விமர்சனத்துக்குப் பதிலளித்த நிர்மலா சீதாராமன், “சென்னையின் புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் தமிழில் ஆற்றிய உரையில் இந்த விஷயத்தைக் குறிப்பிட்டிருந்தேன். சி.ஏ போன்ற கடினமான தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு, அவர் மீதான மன அழுத்தம் தாங்க முடியாததாக இருந்தது என்று குறிப்பாக குறிப்பிட்டிருந்தார். பெண் அல்லது நிறுவனத்தின் பெயர்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை. பல்கலைக்கழகம் அதன் அனைத்து மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் ஒரு தியான மண்டபம் மற்றும் வழிபாட்டுத் தலத்தை அமைத்துள்ளது. இந்தச் சூழலில்தான் மாணவர்களுக்கு உள் வலிமையை வளர்ப்பது எப்படி அவசியம் என்று பேசினேன்” என்றார்.

சி.ஏ படித்த இளம் பெண்ணின் மறைவு தொடர்பாக, சுரண்டல் பணிச்சூழல் குற்றச்சாட்டுகள் குறித்து முழுமையான விசாரணைக்கு மத்திய தொழிலாளர் அமைச்சகம் ஏற்கனவே உறுதியளித்துள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Nirmala Sitharaman
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment