‘Fraud against country’: FM Nirmala Sitharaman slams UPA govt over 2005 Antrix-Devas deal: ஆன்ட்ரிக்ஸ்-தேவாஸ் ஒப்பந்தம் தொடர்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செவ்வாய்கிழமை ஐக்கிய முற்போக்கு கூட்டணி (UPA) அரசை கடுமையாக சாடினார். சுப்ரீம் கோர்ட் உத்தரவு மிகவும் விரிவானது என்று கூறிய அவர், UPA ஆட்சியின் போது ஆன்ட்ரிக்ஸ்-தேவாஸ் ஒப்பந்தம் கையெழுத்தானது என்றும் அது இந்தியாவுக்கு எதிரான மோசடி என்றும் காங்கிரஸ் தலைமையிலான முந்தைய அரசாங்கத்தை நிர்மலா சீதாராமன் தாக்கினார்.
செய்தியாளர் சந்திப்பில் பேசிய நிர்மலா சீதாராமன், ஒப்பந்தம் தொடர்பான ஊழலில் "சம்பந்தப்பட்ட UPA அரசின் அமைச்சர் கைது செய்யப்பட்டார்" என்று கூறினார். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்தில் நாட்டின் வளங்கள் அப்பட்டமாக விற்பனை செய்யப்பட்டதாகவும், இந்த ஒப்பந்தம் குறித்து அமைச்சரவைக்குக் கூட தெரியாது என்றும் நிர்மலா சீதாராமன் கூறினார்.
ஆன்ட்ரிக்ஸ் தேவாஸ் ஒப்பந்தத்தில் UPA அரசாங்கம் ஒருபோதும் மத்தியஸ்தரை நியமிக்கவில்லை என்றும் நிதியமைச்சர் கூறினார். 2011 இல், முழு விஷயமும் ரத்து செய்யப்பட்டபோது, தேவாஸ் நிறுவனம் சர்வதேச நடுவர் மன்றத்திற்குச் சென்றது. "UPA அரசாங்கம் ஒருபோதும் நடுவரை நியமிக்கவில்லை, 21 நாட்களுக்குள் நடுவரை நியமிக்குமாறு அவர்களுக்கு நினைவூட்டப்பட்டது, ஆனால் அப்போதைய அரசாங்கம் அதை நியமிக்கவில்லை." என்று நிர்மலா சீதாராமன் கூறினார்.
ஆன்ட்ரிக்ஸ்-தேவாஸ் ஒப்பந்தம் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் சமீபத்திய உத்தரவு இரண்டும் UPA அரசாங்கம் எவ்வாறு தவறான நடைமுறைகளில் ஈடுபட்டது என்பதைக் காட்டுகிறது என்று நிர்மலா சீதாராமன் குற்றம் சாட்டினார்.
இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு எதிராக இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டது என்றும், நாட்டு மக்களுக்கு இதுபோன்ற மோசடி எப்படி செய்யப்பட்டது என்பதை இப்போது காங்கிரஸ் கட்சி கூற வேண்டும் என்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
ஆன்ட்ரிக்ஸ் தேவாஸ் ஒப்பந்த மோசடியில் இருந்து தப்பித்துவிடக்கூடாது என்பதற்காக NDA அரசு ஒவ்வொரு நீதிமன்றத்திலும் போராடுகிறது என்று நிர்மலா சீதாராமன் கூறினார். கலைப்பலுவலர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் முடிவடையும் செயல்முறை தொடங்கும் என்றும் நிர்மலா சீதாராமன் கூறினார்.
"வரி செலுத்துவோரின் பணத்தை சேமிக்க நாங்கள் போராடுகிறோம், இல்லையெனில் மோசடியான ஆன்ட்ரிக்ஸ்-தேவாஸ் ஒப்பந்தத்தை நோக்கி சென்றிருக்கும்" என்று சீதாராமன் கூறினார்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) வணிகப் பிரிவான ஆன்ட்ரிக்ஸ் கார்ப்பரேஷனுடன் இணைந்து, இந்தியா முழுவதும் உள்ள வாகனங்கள் மற்றும் மொபைல் போன்களில் உள்ள மொபைல் பெறுநர்களுக்கு செயற்கைக்கோள் வழியாக வீடியோ, மல்டிமீடியா மற்றும் தகவல் சேவைகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட தேவாஸ் (டிஜிட்டலி மேம்படுத்தப்பட்ட வீடியோ மற்றும் ஆடியோ சேவைகள்) மல்டிமீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தை மூடுவதற்கான தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் (NCLAT) உத்தரவை உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை உறுதி செய்தது.
இது ஒரு பெரிய அளவிலான மோசடி வழக்கு என்று நீதிமன்றம் கூறியது, இது ஒரு தனிப்பட்ட வழக்கு என கம்பளத்தின் கீழ் மறைக்க முடியாது என்றும் நீதிமன்றம் கூறியது.
NCLAT, ஆன்ட்ரிக்ஸின் மனுவின் பேரில் மே 25, 2021 அன்று தேவாஸை மூட உத்தரவிட்டது. இது செப்டம்பர் 8, 2021 அன்று NCLAT ஆல் உறுதிப்படுத்தப்பட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.