ஆத்ம நிர்பார் பாரத் அபியான் திட்டத்தின் ஒரு பகுதியாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாரமான் மூன்றாம் கட்ட பொருளாதார நடவடிக்கையை நேற்று அறிவித்தார். இந்த பொருளாதார அறிவிப்புகள் பெரும்பாலும் விவசாயிகள், கால்நடை வளர்ப்பு, மீன்வளம், பால்வளம் உள்ளிட்ட துறைகளில் மேம்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
பொருளாதார நடவடிக்கையோடு நின்று விடாமல், வேளாண் உற்பத்திப் பொருட்களுக்கு கூடுதல் விலை கிடைக்கும் வகையில் அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தில் திருத்தம் செய்தல், மாநிலங்களுக்கு இடையேயான வர்த்தகம் தடையை நீக்க போதிய சட்டம் இயற்றுதல், நியாயமான வெளிப்படையான முறையில் விவசாயிகள் பெரு வர்த்தகர்கள், ஏற்றுமதியாளர்கள் ஆகியோருடன் தொடர்பு கொள்ள சட்ட ரீதியிலான கட்டமைப்பு உருவாக்குதல் போன்ற முக்கிய அறிவிப்புகளையும் அறிவித்தார்.
நிர்மலா சீதாராமன் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்:
ஊரடங்கு காலகட்டத்தில் ரூபாய் 74,300 கோடிக்கும் அதிகமாக குறைந்தபட்ச ஆதார விலையில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
ரூபாய் 18,700 அளவுக்கு பிஎம் கிஸான் நிதி திட்டத்தின் மூலம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது
இந்த ஊரடங்கு காலகட்டத்தில், பிஎம் பயிர் காப்பிட்டுத் திட்டத்தின்கீழ் ரூபாய் 6,400 கோடிக்கு கிளைம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
பொது முடக்கத்தின் போது, பாலுக்கானத் தேவை 20-25 சதவீதம் வரை குறைந்தது. இதனால், தினசரி விற்பனை அளவான ஒரு நாளைக்கு 360 லட்சம் லிட்டர்களை விட அதிகமாக, ஒரு நாமளக்கு 560 லட்சம் லிட்டர்கள் கூட்டுறவு நிறுவனங்களால் கொள்முதல் செய்யப்பட்டன என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
மேலும், 2020-21ஆம் ஆண்டில் பால் கூட்டுறவுகளுக்கு வருடத்துக்கு இரண்டு
சதவீதம் அளவில் வட்டித் தள்ளுபடி வழங்கும் புதிய திட்டத்தையும் அறிவித்தார்

அறிவிக்கப்பட்ட 8 திட்டங்கள்:

- அனைத்து வகையான கால்நடைகளுக்கும் 100% தடுப்பூசி அளிப்பதை உறுதி செய்யும் விதமாக தேசிய கால்நடை நோய்கள் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் கீழ் 13 ஆயிரத்து 340 கோடி ரூபாய் ஒதுக்கீடு,
- 10 லட்சம் ஹெக்டேரில் மூலிகை பயிர்கள் பயிரிடுவதை ஊக்குவிக்கும் வகையில் 4000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு,
- ஒருங்கிணைந்த தேனீ வளர்ப்பு முன் முயற்சிகளுக்காக ரூ. 500 கோடி ஒதுக்கீடு,

- விளை பொருளை வினியோகம் செய்வதில் ஏற்படும் சிக்கல்களைத் தீர்ப்பதற்காக ரூபாய் 500 கோடி நிதி ஒதுக்கீடு,

- தக்காளி, வெங்காயம் மற்றும் உருளை பயிருக்கு வழங்கப்பட்டு வந்த மானியம் (ஆபரேஷன் கிரீன்) தற்போது காய்கள், பழங்கள் என அனைத்து பயிர்களுக்கும் வழங்கப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil