நடுத்தர மக்களுக்கு அரசு அதிக வரி விதிப்பதாக எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புதன்கிழமை மக்களவையில் பதிலளித்தார். அதில், மத்திய அரசு நடுத்தர மக்களுக்கு பல்வேறு வரி சலுகை அளிப்பதாக கூறினார். கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு முன்பை விட வரி குறைவாக விதிக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டையும் அவர் மறுத்தார்.
“நடுத்தர மக்கள் மீதான வரிச்சுமை குறித்து பல உறுப்பினர்கள் பேசினர். 2023-ல், தனிநபர் வருமான வரிக்கான அடுக்குகள் எளிதாக்கப்பட்டது. அனைத்து வரி செலுத்துவோரும் 37,500 லாபம் பெற்றனர்.
புதிய ஆட்சியில் மீண்டும் வரிமான வரி திருத்தப்பட்டது. சம்பளம் பெறும் ஊழியர்களுக்கான நிலையான விலக்கு 50,000 ரூபாயில் இருந்து 75,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான குடும்ப ஓய்வூதியத்தில் பிடித்தம் 15,000 ரூபாயில் இருந்து 30,000 ரூபாயாக உயர்த்தப்பட உள்ளது.
பொது மற்றும் தனியார் துறை வங்கிகளில் முதலாளியின் பங்களிப்பிற்கான விலக்கு 10%-ல் இருந்து 14% ஆக உயர்த்தப்பட்டுள்ளது, ”என்று குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்ட நிதி மசோதா மீதான விவாதத்திற்கு நிர்மலா சீதாராமன் பதிலளித்தார்.
"தனிப்பட்ட வருமான வரிகளை விட கார்ப்பரேட் வரிகள் குறைவு என்பது உண்மைகளின் அடிப்படையில் இல்லை. கார்ப்பரேட் ஒரு சட்ட நிறுவனம். ஈவுத்தொகை வருமானம் பெருநிறுவன லாபத்தின் ஒரு பகுதியாகும்.
இதற்கு முன்னர் நிறுவனத்தின் கைகளில் குறைந்த விகிதத்தில் வரி விதிக்கப்பட்டது. 2020 ஆம் ஆண்டில், பொருந்தக்கூடிய விகிதத்தில் பங்குதாரர்களின் கைகளில் வரி விதிக்கத் தொடங்கினோம். பணக்கார பங்குதாரர்கள் ஈவுத்தொகைக்கு 39% வரி செலுத்துவார்கள் என்பதே இதன் பொருள்,” என்று அவர் கூறினார்.
ஆங்கிலத்தில் படிக்க: FM Sitharaman lists tax relief for middle class; it is tax trap Bill: Opposition
விவாட் சே விஸ்வாஸ் திட்டத்தின் மூலம் நிலுவையில் உள்ள வழக்குகள் தீர்த்து வைக்கப்பட்டுள்ளன என்று சீதாராமன் கூறினார். “பயனாளிகள் MSMEகள், தனிநபர்கள் மற்றும் சிறிய நிறுவனங்கள் என்று தரவு காட்டுகிறது. 90 லட்சம் வரி செலுத்துவோரின் சிறிய, பழைய மற்றும் சரிபார்க்கப்படாத வரி கோரிக்கைகள் பதிவுகளில் இருந்து முற்றிலும் நீக்கப்பட்டுள்ளன. இது நடுத்தர வர்க்கப் பிரிவினருக்கும் நிம்மதியாக உள்ளது,'' என்றார்.
எதிர்க்கட்சிகள் தனது சக அமைச்சரும், மத்திய அமைச்சருமான நிதின் கட்கரியின் உடல்நலக் காப்பீட்டு பிரீமியத்தின் மீதான ஜிஎஸ்டியை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை அரசாங்கத்தை தாக்க பயன்படுத்துவதால், ஜிஎஸ்டி விகிதங்களை முடிவு செய்வதற்கான மன்றம் நாடாளுமன்றம் அல்ல என்றும் அது ஒரு சபைக்கு செல்ல வேண்டும் என்றும் அவர் கூறினார்.
மருத்துவம் மற்றும் ஆயுள் காப்பீட்டு பிரீமியங்கள் மீதான 18% ஜி.எஸ்.டியை திரும்பப் பெறக் கோரி ஆர்.எஸ்.பி உறுப்பினர் என்.கே பிரேமச்சந்திரன் கொண்டு வந்த திருத்தம் எடுக்கப்படாதால் எதிர்க்கட்சி எம்பிக்கள் மக்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“