இந்திய ரயில்வே வடிவமைத்த புதிதாக வடிவமைக்கப்பட்ட “Post-COVID” ரயில் பெட்டிகளின் விவரங்களை ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் சமூக ஊடகங்கள் வாயிலாக பகிர்ந்து கொண்டுள்ளார். இந்த புதிய பெட்டிகள் இதற்கு முன்பு இருந்ததை போலவே இருந்தாலும், சற்று புதிதாக சில விஷயங்கள் சேர்க்கப்பட்டிருக்கும் என்றார்.
“எதிர்கால தயார் ரயில்வே: கொரோனா வைரஸை எதிர்த்துப் போராட வடிவமைக்கப்பட்ட ரயில்வே, ஹேண்ட்ஸ்ஃப்ரீ வசதிகள், காப்பர் பூசப்பட்ட ஹேண்ட்ரெயில்கள் மற்றும்லாட்சஸ்கள், பிளாஸ்மா காற்று சுத்திகரிப்பு, டைட்டானியம் டி-ஆக்சைடு பூச்சு ஆகியவற்றைக் கொண்டு முதலாவது ‘ போஸ்ட்-கோவிட் கோச் ’ உருவாக்கியுள்ளது. இது கோவிட் வைரஸ் இல்லாத பயணிகள் பயணத்திற்கு" என்று கோயல் தனது ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.
Future Ready Railway: Designed to fight Coronavirus, Railways creates 1st ‘Post COVID Coach’ with:
▪️Handsfree amenities
▪️Copper-coated handrails & latches
▪️Plasma air purification
▪️Titanium di-oxide coating
For COVID-Free passenger journey!
Details: https://t.co/VAVDu6lDST pic.twitter.com/yWakrxt4s2
— Piyush Goyal (@PiyushGoyal) July 14, 2020
கபுர்தலாவில் உள்ள ரயில்வே கோச் தொழிற்சாலையில் இருந்து உருவாக்கப்பட்ட பெட்டிகளில் நீர் குழாய் மற்றும் சோப்பு பயன்படுத்துதல், கழிவறை கதவுகள், பிளஷ் வால்வு மற்றும் தாழ்ப்பாள்கள் போன்றவை கால்களால் இயக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளன.
சென்னை போன்றே முழு ஊரடங்கு ; தமிழகத்திற்கு படையெடுக்கும் பெங்களூர் தமிழர்கள்
இரண்டு பெட்டிகளின் விவரங்கள் குறித்து அமைச்சர் விளக்கியுள்ளார். ஒன்று குளிரூட்டப்பட்டது, மற்றொன்று Non A/C. இவ்விரு பெட்டிகளிலும் பெரும்பாலும் பயணிகள் கைகளைப் பயன்படுத்தி கதவைத் திறப்பது, வாஷ்ரூம் திறப்பது போன்றவற்றை குறைத்துள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.
தாமிரம் பூசப்பட்ட handrails மற்றும் லாட்சஸ்களை ரயில்வே நிறுவியுள்ளது. “வைரஸ் இருக்கும் நேரத்தை தாமிரம் குறைக்கிறது. செம்பு நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. வைரஸ் தாமிரத்தில் இறங்கும்போது, Ion நோய்க்கிருமியை வெடிக்கச் செய்து வைரஸுக்குள் இருக்கும் டி.என்.ஏ மற்றும் ஆர்.என்.ஏவை அழிக்கிறது" என்று ரயில்வே தெரிவித்துள்ளது.
ஏ.சி பெட்டிகளில், பிளாஸ்மா காற்று உபகரணங்களை வழங்கப்படுகிறது. இது, அயனியாக்கப்பட்ட காற்றைப் பயன்படுத்திபெட்டிகளை பாதுகாத்து, கொரோனா இல்லா பயணத்தை மேற்கொள்ள உதவும்.
வாஷ்பேசின்கள், கழிவறை, இருக்கைகள் மற்றும் பெர்த்கள், சிற்றுண்டி அட்டவணை, கண்ணாடி ஜன்னல், தரை ஆகியவற்றில் சிறப்பு நானோ கட்டமைக்கப்பட்ட டைட்டானியம் டை ஆக்சைடு பூச்சு பயன்படுத்தப்பட்டுள்ளது.
“இது சுற்றுச்சூழல் நட்பு நீர் சார்ந்த பூச்சு ஆகும், இது வைரஸ்கள், பாக்டீரியாக்கள் மற்றும் பூஞ்சை வளர்ச்சியைக் கொல்லும். மிக முக்கியமாக உட்புற காற்றின் தரத்தை மேம்படுத்துகிறது. இது நச்சுத்தன்மையற்றது மற்றும் அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் (எஃப்.டி.ஏ) உணவு சோதனை ஆய்வகத்தால் அங்கீகரிக்கப்பட்டது. இது ஒரு பாதுகாப்பான பொருளாக கருதப்படுகிறது, இது மனிதர்களுக்கு பாதிப்பில்லாதது ”என்று ரயில்வே தெரிவித்துள்ளது.
இந்த பூச்சு, 12 மாதங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும், இது மனித தொடர்பு கொண்ட ஒவ்வொரு மேற்பரப்பிலும் பயன்படுத்தப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.