Advertisment

அயோத்தி கோவிலுக்காக ராமரை வரையும் 75 ஓவியர்கள்

இந்த ஓவியர்கள் டிசம்பர் மாத நடுப்பகுதியில் கோவிலில் வேலையைத் தொடங்குவார்கள். பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பல நாட்டுத் தலைவர்கள் கலந்து கொள்ளும் விழாவில் கோயில் திறப்பதற்கு முன் இரண்டு வாரங்களில் பணியை முடிப்பார்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Ayodhya Ram temple, Ram temple, Ram temple Ayodhya, அயோத்தி கோவிலுக்காக கடவுள் ராமர், தத்துவத்தை வரையும் 75 ஓவியர்கள், ayodhya temple, Ayodhya temple case, India news, Indian express, Indian express India news, Indian express India

ஜனவரியில் கோவில் திறக்கப்படும் போது, அயோத்தியில் ராமர் கோவிலில் ராமரின் தத்துவம் மற்றும் மனித பக்கம் ஆகியவற்றைக் காட்டும் சிறப்புப் பிரிவு இருக்கும்.

இந்த ஓவியர்கள் டிசம்பர் மாத நடுப்பகுதியில் கோவிலில் வேலையைத் தொடங்குவார்கள். பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பல நாட்டுத் தலைவர்கள் கலந்து கொள்ளும் விழாவில் கோயில் திறப்பதற்கு முன் இரண்டு வாரங்களில் பணியை முடிப்பார்கள்.

Advertisment

ஜனவரியில் கோவில் திறக்கப்படும் போது, அயோத்தியில் ராமர் கோவிலில் ராமரின் தத்துவம் மற்றும் மனித பக்கம் ஆகியவற்றைக் காட்டும் சிறப்புப் பிரிவு இருக்கும்.

கருவறைக்குள் ராமர் சிலை நிறுவப்படும் அதே வேளையில், கோயில் வளாகத்தில் நடைபெறும் கண்காட்சியில், ‘ராமர்: மனிதனும் அவர் தத்துவமும்’(ராம்: தி மேன் அண்ட் தி ஐடியா) என்ற தலைப்பில் நாட்டின் 75 புகழ்பெற்ற ஓவியர்களின் படைப்புகள் இடம்பெறும்.

கலைஞர்கள் டிசம்பரின் நடுப்பகுதியில் "ஆன் சைட்" வேலையைத் தொடங்குவார்கள். பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பல நாட்டுத் தலைவர்கள் பங்கேற்கும் விழாவில் கோயில் திறப்பு விழாவுக்கு முன் இந்த பணிகள் முடிக்க இரண்டு வாரங்கள்.

வாசுதேவ் காமத், தர்மேந்திர ரத்தோர், அத்வைதா கடநாயக் மற்றும் ஹர்ஷ்வர்ஷன் ஷர்மா போன்ற முக்கியப் பெயர்களைக் கொண்ட இந்த நிகழ்வு, ராமரைப் பற்றிய அவர்களின் புரிதலில் படைப்புகளை உருவாக்குவார்கள் - இது மத்திய கலாச்சார அமைச்சகத்தின் கீழ் செயல்படும் லலித் கலா அகாடமியால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அகாடமியின் தலைவர் வி. நாகதாஸ் இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறுகையில், “அயோத்தியில் ஒரு பெரிய நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டுள்ளோம்.” என்று கூறினார்.

“பல பதிற்றாண்டு கால போராட்டத்துக்குப் பிறகு ராமர் கோயில் கட்டப்படுவது ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் விருப்பங்களை நிறைவேற்றுவதாகும்,” என்று வி. நாகதாஸ் கூறினார். மேலும், “ராமாயணத்தின் லட்சியங்கள் மூலம் அன்பு மற்றும் சமூக நல்லிணக்கத்தின் கொள்கைகளை மேம்படுத்துவதே இதன் நோக்கம்.” என்று கூறினார்.

நாகதாஸின் கருத்துப்படி, கண்காட்சிக்குப் பிறகு, பாதி கலைப்படைப்புகள் அகாடமியின் நிரந்தர சேகரிப்பின் ஒரு பகுதியாக மாறும், மீதமுள்ளவை கோயில் வளாகத்தில் காட்சிக்கு வைக்கப்படும்.

இருப்பினும், இந்த ஓவியம் வரைவதில் பங்கேற்கும் கலைஞர்களின் இறுதிப் பட்டியல் தேர்வு செய்யப்பட்டு வருகிறது என்று நாகதாஸ் கூறினார். மற்ற அதிகாரிகள் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறியதாவது, அகாடமி பல்வேறு பார்வைகள் மற்றும் சித்தாந்தங்களைக் கொண்ட கலைஞர்களை கண்காட்சிக்கு வரவழைக்க முயற்சிக்கிறது என்று தெரிவித்தனர்.

காமத், ரத்தோர், கடநாயக் மற்றும் ஷர்மா மட்டுமே இதுவரை தங்கள் பங்கேற்பை உறுதிப்படுத்தியுள்ளனர், இருப்பினும் அவர்களில் சிலர் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறியிருந்தாலும், இந்த திட்டத்திற்கான அவர்களின் குறிப்பிட்ட கருப்பொருள்கள் மற்றும் யோசனைகளை இன்னும் உறுதிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

மும்பையைச் சேர்ந்த காமத் பல மரியாதைக்குரிய உருவப்படங்களைச் செய்திருந்தாலும், ராஜஸ்தானி கலைஞரும் கலை மறுசீரமைப்பாளருமான ரத்தோரின் படைப்புகள் டென்மார்க், ஹாங்காங், சிங்கப்பூர் மற்றும் தென் கொரியாவில் கண்காட்சிகளில் இடம்பெற்றுள்ளது. கடநாயக், ஒரு சிற்பி/கலைஞர், டெல்லியில் உள்ள நேஷனல் கேலரி ஆஃப் மாடர்ன் ஆர்ட்டின் முன்னாள் தலைவர்; சர்மா ஒரு கலை ஆசிரியர் ஆவா.

அகாடமியில் ஆசிரியராகப் பணிபுரியும் டெல்லியைச் சேர்ந்த கலை ஆர்வலரான ஜானி எம்.எல் இந்த கண்காட்சியை நடத்துவார்.

அந்த இடத்திலேயே ஓவியம் வரைம் இந்த திட்டம் டிசம்பரின் நடுப்பகுதியில் தொடங்கும், இந்த ஓவியர்கள் தலா இரண்டு அக்ரிலிக்-ஆன்-கேன்வாஸ் படைப்புகளை உருவாக்க 10-14 நாட்கள் அவகாசம் வழங்கப்படும். அவை பாரம்பரிய சுவரோவிய பாணி மற்றும் கோவில் சிற்ப பாணி போன்ற கலைப்படைப்புகள் பாணியில் உருவகமாக இருக்கும் என்று ஜானி கூறினார்.

“அவர்கள் ஒரு புராண உணர்வை வழங்குவார்கள்” என்று அவர் கூறினார்.

இருப்பினும், சில கட்டுப்பாடுகள் உள்ளன. கலைஞர்கள் தங்கள் படைப்புகளை உருவாக்க எந்த குறிப்பிட்ட கட்டமைப்பும் வழங்கப்படாது என்றாலும், ராமாயணத்தின் ஏற்றுக்கொள்ளப்பட்ட பதிப்புகளுக்கு எதிராக அவர்கள் செல்ல முடியாது என்பதே ஒரே கட்டுப்பாடாக இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

சில மாதங்களுக்கு முன்பு அகாடமி தலைவராக நியமிக்கப்பட்ட கேரளாவின் பாலகாட்டைச் சேர்ந்த ஓவியர் மற்றும் அச்சு தயாரிப்பாளரான நாகதாஸின் கீழ் அகாடமி மேற்கொள்ளும் முதல் மெகா திட்டமாக இது இருக்கும். அவர் முன்பு சத்தீஸ்கரின் இந்திரா கலா சங்கீத் விஸ்வவித்யாலயாவில் காட்சி கலை பீடத்தை வழிநடத்தினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil ”

Ayodhya Temple
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment