”குஜராத்தில் தேர்தல் வெற்றிக்காகவே ராகுல் கோவிலுக்கு செல்கிறார்”: சாடும் பாஜக

குஜராத் மாநிலத்தில் அடுத்த டிசம்பர் மாதம் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு தேர்தல் பிரச்சாரம் சூடுபிடிக்க துவங்கியுள்ளது.

Gujarat elections 2017, gujarat assembly elections 2017, rahulgandhi, BJP, Congress party

குஜராத் மாநிலத்தில் அடுத்த டிசம்பர் மாதம் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு தேர்தல் பிரச்சாரம் சூடுபிடிக்க துவங்கியுள்ளது.

இந்நிலையில், காங்கிரஸ்க்கு ஆதரவாக செயல்பட்டுவரும் ஹர்திக் படேலை பாலியல் புகாரில் சிக்க வைக்க வீடியோக்களை வெளியிட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இருப்பினும், இந்த குற்றச்சாட்டை பாஜக மறுத்துள்ளது.

குஜராத் தேர்தலுக்காக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி, அங்குள்ள முக்கியமான இந்து கோவில்களுக்கு சென்று வழிபட்டு வருகிறார். ராகுல் காந்தியின் இந்த செயலை பாஜக கடுமையாக விமர்சித்து வருகிறது. தேர்தலுக்காகவே ராகுல் காந்தி கோவில்களுக்கு செல்வதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது.

தலித் சமுதாய தலைவர் ஜிக்னேஷ் மேவானி, படேல் சமூகத்தினருக்காக போராடிவரும் ஹர்திக் படேல், தாக்கூர் சமுதாய மக்களுக்காக போராடும் அல்பேஷ் தாக்கூர் ஆகிய இளைஞர்களை தனக்கு ஆதரவாக்கி பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறது காங்கிரஸ். மேலும், பிரச்சாரத்தின்போது, ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு, பணமதிப்பு நீக்க நடவடிக்கை ஆகியவற்றை கடுமையாக விமர்சித்து வருகிறார்.

இதனை எதிர்த்து கருத்து ரீதியாக பிரச்சாரம் மேற்கொள்ளாத பாஜக, ராகுல் காந்தி கோவில்களுக்கு செல்வதை விமர்சித்து வருகிறது.

“கோவில்களுக்கு செல்வது இந்திய கலாச்சாரம் என்ற ரீதியில் ராகுல் காந்தி அங்கு செல்வது நல்லது. ஆனால், அதனை தேர்தல் சமயத்தில் மட்டும் செய்யக்கூடாது”, என அம்மாநில பாஜக பொதுச் செயலாளர் பூபேந்திர யாதவ் தெரிவித்தார்.

பாஜக ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்களான யோகி ஆதித்யநாத், சிவ்ராஜ் சிங் சௌஹான் ஆகியோரும் கோவில்களுக்கு அடிக்கடி செல்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: For every temple visit a sustained bjp attack on rahul gandhi

Next Story
பரபரப்பு திருப்பம்; ஒத்துக் கொண்ட டிடிவி தினகரன்….அடுத்து என்ன?
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com