Advertisment

ஆக்ஸிஜன் பற்றாக்குறை : சிலிண்டர் உற்பத்தி ஆலைகளை மூடும் அவலம்

தொழிற்சாலைக்கு ஆக்ஸிஜன் சப்ளை தடை செய்யபட்டுள்ளதால் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் தயாரிக்கும் ஆலைகள் மூடப்பட்டுள்ளது

author-image
WebDesk
New Update
For lack of oxygen units making oxygen cylinders shut down

 Ritu Sarin 

Advertisment

For lack of oxygen, units making oxygen cylinders shut down : தொழிற்துறை ஆக்ஸிஜன் உற்பத்திக்கு தடை விதிக்கப்பட்டது ஒரு குறிப்பிடத்தக்க வீழ்ச்சியை சந்தித்துள்ளது. கடந்த 10 நாட்களாக இந்தியாவில் அதிக அளவு ஆக்ஸிஜன் சிலிண்டர் உற்பத்தி ஆலைகளை கொண்டுள்ள குஜராத்தில் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

காரணம் : சிலிண்டர் உற்பத்தி செய்யும் ஆலைகளுக்கும் ஆக்ஸிஜன் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. உள்துறை அமைச்சகம் ஏப்ரல் 27ம் தேதி அன்று திரவ ஆக்ஸிஜன் சிலிண்டர் உற்பத்தி ஆலைகளுக்கு வழங்க வேண்டும் என்று விளக்கம் அளித்த போதும் தடை இன்னும் நீக்கப்படவில்லை.

காந்திகிராம் மற்றும் கட்ச் ஆகிய பகுதிகளில் உள்ள சிறப்பு பொருளாதார மண்டலத்தில் (SEZ) நாட்டின் மூன்றில் இரண்டு பங்கு சிலிண்டர் உற்பத்தி செய்யும் ஆலைகள் மீது விதிக்கப்பட்டிருக்கும் தடை ஆக்ஸிஜன் சிலிண்டர் பற்றாக்குறையை தான் அதிகரிக்கும் என்று ஆல் இந்தியா இண்டஸ்ட்ரியல் மெனுஃபேக்சர்ஸ் அசோசியேசன்  (All India Industrial Gases Manufacturers Association (AIIGMA)) பிரதிநிதிகள் கூறியுள்ளனர்.

இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழிடம் பேசிய ஏ.ஐ.ஐ.ஜி.எம்.ஏ தலைவர் சகேத் திக்கு, “கொரோனா வைரஸ் இரண்டாம் அலையின் கரணமாக மாநிலத்தில் ஆக்ஸிஜன் தேவை 1200 மெட்ரிக் டன் முதல் 1500 மெட்ரிக் டன் வரை அதிகரித்தது. ஆனால் மாநிலத்தில் உள்ள சிலிண்டர் ஆலைகளின் கூட்டுத் தேவை மிகக் குறைவு. நால் ஒன்றுக்கு 11 மெட்ரிக் டன் தயாரித்தது. இது குறித்து ஏற்கனவே அரசின் உயர்மட்ட்டத்தில் அறிவிக்கப்பட்டது. இருப்பினும் இன்று ஆலைகள் மூடப்படும் நிலையில் உள்ளோம்” என்றார்.

நாள் ஒன்றுக்கு சிலிண்டருக்காக நூற்றுக்கணக்கான கோரிக்கைகள் வருகிறது என்று கூறும் உற்பத்தியாளர்கள், மத்திய அரசு, மாநில அரசு மற்றும் மருத்துவமனைகளில் இருந்து பெறப்பட்ட ஆர்டர்களால் தவித்து வருவதாக கூறியுள்ளனர். SEZ இன் மிகப்பெரிய சிலிண்டர் உற்பத்தியாளரான எவரெஸ்ட் கான்டோ சிலிண்டர் லிமிடெட் நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் மேலாளர் சாரங் காந்தே நிலைமை நம்பிக்கையற்றதாக உள்ளது என்று கூறினார்.

"நாங்கள் ஒரு மாதத்திற்கு சுமார் 35,000 சிலிண்டர்கள் உற்பத்தி செய்வோம், ஆனால் ஆர்டர்களை ரத்து செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்," என்று அவர் கூறினார். "ஒரிசா, உத்தரகண்ட், சத்தீஸ்கர், டெல்லி மற்றும் மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்கள் சிலிண்டர்களுக்கு எங்களைச் சார்ந்து இருக்கின்றன, ஆனால் எங்கள் ஆலை மூடப்பட்டுள்ளது. அரசாங்கம் இப்போது ஆக்ஸிஜன் சிலிண்டர்களை மூன்று அல்லது நான்கு மடங்கு இறக்குமதி செய்கிறது. ”

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

சிலிண்டர் உற்பத்தியாளர்களை தடையில் இருந்து விலக்குவதற்கான வழிமுறைகளை எம்.எச்.ஏ வெளியிட்டுள்ள நிலையில், உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (எஃப்.டி.ஏ), மாநில அதிகாரிகள் இந்த உத்தரவுகளை நிறைவேற்றவில்லை என்று அவர் கூறினார்.

குஜராத் மாநில முதல்வர் விஜய் ரூபானியின் கூடுதல் பொது செயலாளர் மனோஜ் தாஸிடம் இது தொடர்பாக கேட்ட போது. கொரோனா தொற்று நோயாளிகளுக்கு தற்போது ஆக்ஸிஜனை வழங்குவது தான் எங்களின் முதல் நோக்கம். கூடுதல் ஒதுக்கீடு கிடைத்தவுடன் நாங்கள் நிச்சயமாக அவர்களுடன் இணைந்து பணியாற்றுவோம் என்று கூறீனார்.

மற்றொரு பெரிய சிலிண்டர் ஆலையான ராமா சிலிண்டர்ஸ் பிரைவேட் லிமிடெட்டின் உரிமையாளர்களில் ஒருவர் , தங்களுக்கு ஒரு மாதத்திற்கு 50,000 ஆக்ஸிஜன் சிலிண்டர்களின் உற்பத்தி திறன் இருப்பதாகவும், “தொழில்நுட்ப தாமதம்” காரணமாக தங்களின் கை கட்டப்பட்டுள்ளதாக கூறினார்.

நிர்வாக இயக்குனர் வாசு ராம்சிங்கனி கூறினார்: “உள்துறை அமைச்சகம் மற்றும் மத்திய சுகாதார அமைச்சகம் மற்றும் நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் இருந்து எங்களுக்கு பெரிய அளவிலான ஆர்டர்கள் உள்ளன. நாங்கள் முதலமைச்சரின் அலுவலகத்திற்கு பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளோம், நிலைமை கொஞ்சம் மோசமாக உள்ளது என்றார் அவர்.

இரண்டு சிலிண்டர் ஆலைகளை இயக்குவதற்கு ஒரு நாளைக்கு 3 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் தேவை. நூற்றுக்கணக்கான மின்னஞ்சல்கள் மற்றும் போன் அலைப்புகள் வந்துள்ளன. ஆனால் எங்களின் ஆலைகள் மூடப்பட்டுள்ளது என்று அவருடைய மகன் அமித் ராம்சிங்கானி கூறியுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment