புதிய இந்தியாவை உருவாக்க இளைஞர்களுக்கு புத்தாண்டில் மோடி சொன்னது என்ன?

18 வயதை பூர்த்தி செய்த இளைஞர்கள் வாக்காளர்களாக பதிவு செய்துகொள்ள வேண்டும் எனவும், புதிய இந்தியாவை உருவாக்க வாக்களிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

2017-ஆம் ஆண்டை பிரதமர் நரேந்திரமோடி மான் கி பாத் வானொலி உரையுடன் நிறைவு செய்தார். அதில் பேசிய மோடி, 18 வயதை பூர்த்தி செய்த இளைஞர்கள் வாக்காளர்களாக பதிவு செய்துகொள்ள வேண்டும் எனவும், புதிய இந்தியாவை உருவாக்க வாக்களிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

“21-ஆம் நூற்றாண்டின் வாக்காளர்களை இந்தியா வரவேற்கிறது. இளைஞர்களை நான் வாழ்த்துகிறேன். அவர்கள் தங்களை வாக்காளர்களாக பதிவு செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். ஒட்டுமொத்த தேசமும் உங்களை வாக்காளர்களாக வரவேற்க காத்திருக்கிறது. உங்களுடைய வாக்கு புதிய இந்தியாவுக்கான அஸ்திவாரமாக இருக்கும்”, என மோடி கூறினார்.

மேலும், அடுத்த 5 ஆண்டுகளில் புதிய இந்தியாவை எப்படி உருவாக்குவது என்ற கருப்பொருளில், உதாரண நாடாளுமன்றத்தை வரும் ஆகஸ்டு 15, சுதந்திர தினத்தன்று இளைஞர்கள் நிகழ்த்திக் காட்ட வேண்டும் என கூறினார். அதற்காக, டெல்லியின் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு இளைஞர் பிரதிநிதியாக பங்கெடுக்க வேண்டும் என மோடி தெரிவித்தார்.

×Close
×Close