மணிப்பூர் விவகாரம் தொடர்பாக ராகுல் காந்தி மத்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். பாஜக அரசை தேச துரோகி என்றும் வடகிழக்கு மாநிலத்தை இரண்டாக பிரிக்க பாஜக நினைப்பதாக ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
மணிப்பூர் விவகாரத்தில், மத்திய அரசுக்கு எதிராக மக்களவையில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீதான 2வது நாள் விவாதம் இன்று நண்பகல் 12 மணிக்கு தொடங்கியது . இந்நிலையில் இது தொடர்பாக ராகுல் காந்தி பேசியதிலிருந்து, “ சபாநாயகர் அவர்களே, என்னை மீண்டும் எம்.பி-யாக ஏற்றுக்கொண்டு, பேச அனுமதித்ததற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். கடந்த முறை நான் பேசியபோது அதானி அவர்களை குறிப்பிட்டு பேசினேன். இதனால் பாஜகவின் மூத்த தலைவர்கள் வேதனையடைந்திருக்கலாம். இந்த வேதனை உங்களையும் பாதித்திருக்கலாம். அதற்காக நான் மனிப்பு கேட்டுக்கொள்கிறேன். ஆனால் நான் உண்மையைத்தான் பேசினேன். பாஜகவில் உள்ள எனது நண்பர்கள் இன்று பயப்பட வேண்டாம் நான் அதானியைப் பற்றி பேசப்போவதில்லை” என்று அவர் கூறினார்.
மேலும் ராகுல் காந்தி பேசியபோது மத்திய அரசு மணிப்பூரில் பாரத மாதாவை கொலை செய்து விட்டது என்று குற்றம் சாட்டினார். மேலும் மத்திய அரசு தேச துரோகி என்றும் குற்றம் சாட்டினார்.
“ நான் மணிப்பூர் என்ற வார்த்தையை பயன்படுத்திவிட்டேன். ஆனால் உண்மை என்ன என்றால் இனி மணிப்பூர் இல்லை என்பதுதான். மணிப்பூரை இரண்டாக பிரித்துவிட்டீர்கள். மணிப்பூரை பிரித்து, அதை உடைத்து விட்டீர்கள். பிரதமரை பொறுத்தவரை மணிப்பூர் இந்தியாவில் இல்லை. இந்தியாவின் குரலை மணிப்பூரில் கொலை செய்துவிட்டீர்கள். எனது அம்மா இங்கே அமர்ந்திருக்கிறார் ( மக்களவையில் உள்ள சோனியா காந்தியை குறிப்பிடுகிறார்) . எனது இனியொரு அம்மாவான பாரத மாதாவை மணிப்பூரில் கொன்றுவிட்டீர்கள்.
நான் மணிப்பூர் சென்றிருந்தபோது, ஒரு பெண்ணிடம் அவர்களுக்கு என்ன நடந்தது என்று கேட்டேன். ” எனது சிறிய மகன், ஒரே மகனை எனது கண் முன்னே சுட்டு கொன்றனர். நான் ஒரு நாள் முழுவதும் எனது மகனின் உடலுடன் வீட்டில் இருந்தேன். பிறகு வீட்டை விட்டு வந்துவிட்டேன். நான் அணிந்திருக்கும் உடை மற்றும் எனது மகனின் புகைப்படம் மட்டுமே என்னிடம் தற்போது இருக்கிறது என்று அவர் கூறினார்” என்று ராகுல் காந்தி பேசினார்.
ராகுல் காந்தி பேச்சுக்கு ஆளும் கட்சி எம்.பி-க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அவர் மனிப்பு கேட்ட வேண்டும் என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு வலியுறுத்தினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“