இந்தியாவின் டாப் 20 பணக்காரர்கள் யார், யார்? முகேஷ் அம்பானி தொடர்ந்து முதலிடம்

சாவித்ரி ஜிண்டால் 18 பில்லியன் அமெரிக்க டாலர்களுடன் மீண்டும் முதல் 10 இடங்களுக்குள் அடியெடுத்து வைத்துள்ளார்.

Mukesh Ambani, today news, tamil news, tamil nadu news

Forbes India Rich List 2021 Mukesh Ambani : ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவராக இருக்கும் முகேஷ் அம்பானி தொடர்ந்து 14 ஆண்டுகளாக இந்தியாவின் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார் என்று ஃபோர்பஸ் பத்திரிக்கை அறிவித்துள்ளது. மொத்த சொத்து மதிப்பான 92.7 பில்லியன் டாலர்கள் சொத்து மதிப்பில் இந்த ஆண்டு மேலும் 4 பில்லியன் டாலர்களை இணைத்துள்ளார். இதன் மூலம் 2008ம் ஆண்டில் இருந்து, 64 வயதான முகேஷ் அம்பானி தற்போது வரை 14 ஆண்டுகளாக தொடர்ந்து பணக்காரர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளார்.

அவர்க்கு அடுத்தபடியாக அதானி துறைமுகம் & SEZ குழுமத்தின் தலைவரான 59 வயது கௌதம் அதானி இரண்டாம் இடம் பிடித்துள்ளார். 2020ம் ஆண்டில் இருந்த 25.2 பில்லியன் அமெரிக்க டாலர் தற்போது 74.8 பில்லியனாக இந்த ஆண்டு அதிகரித்துள்ளது. வெறும் 17.9 பில்லியன் டாலர்கள் இவருக்கும் அம்பானிக்கும் இருக்கும் இடைவெளியாக உள்ளது.

இந்த ஆண்டில் 11 பில்லியன் அமெரிக்க டாலர்களை தன்னுடைய சொத்தில் இணைத்த சிவநாடார், 31 பில்லியன் அமெரிக்க டாலர்களுடன் மூன்றாம் இடம் பிடித்துள்ளார்.

சாவித்ரி ஜிண்டால் 18 பில்லியன் அமெரிக்க டாலர்களுடன் மீண்டும் முதல் 10 இடங்களுக்குள் அடியெடுத்து வைத்துள்ளார்.

கொரோனா தொற்றின் இரண்டாம் ஆண்டில் மொத்தமாக இந்திய பணக்காரர்கள் தங்களின் சொத்தை 50% அதிகரித்து, அவர்களின் மொத்த சொத்து மதிப்பானது 775 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது என்று ஃபோர்ப்ஸ் அறிவித்துள்ளது.

 1. முகேஷ் அம்பானி (92.7 பில்லியன் அமெரிக்க டாலர்கள்)
 2. கௌதம் அதானி (74.8 பில்லியன் அமெரிக்க டாலர்கள்)
 3. சிவநாடார் (31 பில்லியன் அமெரிக்க டாலர்கள்)
 4. ராதாகிஷன் தமானி ( 29.4 பில்லியன் அமெரிக்க டாலர்கள்)
 5. சைரஸ் பூனாவல்லா (19 பில்லியன் அமெரிக்க டாலர்கள்)
 6. லட்சுமி மிட்டல் (18.8 பில்லியன் அமெரிக்க டாலர்கள்)
 7. சாவித்ரி ஜிண்டால் (18 பில்லியன் அமெரிக்க டாலர்கள்)
 8. உதய் கோடக் (16.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள்)
 9. பல்லோன்ஜி மிஸ்திரி (16.4 பில்லியன் அமெரிக்க டாலர்கள்)
 10. குமார் பிர்லா (15.8 பில்லியன் அமெரிக்க டாலர்கள்)
 11. கோத்ரேஜ் குடும்பம் (15.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள்)
 12. சுனில் மிட்டல் (14.8 பில்லியன் அமெரிக்க டாலர்கள்)
 13. பஜாஜ் குடும்பம் (14.4 பில்லியன் அமெரிக்க டாலர்கள்)
 14. திலீப் சாங்வி (14.3 பில்லியன் அமெரிக்க டாலர்கள்)
 15. ஹிந்துஜா சகோதரர்கள் (14 பில்லியன் அமெரிக்க டாலர்கள்)
 16. பர்மன் குடும்பம் (11.8 பில்லியன் அமெரிக்க டாலர்கள்)
 17. மதுகர் பரேக் (11.7 பில்லியன் அமெரிக்க டாலர்கள்)
 18. அசிம் பிரேம்ஜி (11.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள்)
 19. முரளி திவி (9.9 பில்லியன் அமெரிக்க டாலர்கள்)
 20. பேணு கோபால் பங்கூர் (9.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள்)

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Forbes india rich list 2021 mukesh ambani wealthiest for 14th consecutive year

Next Story
வேளாண் சட்டங்களை விமர்சித்த வருண் காந்தி, பிரேந்தர் சிங்; நிர்வாகக் குழுவில் இருந்து நீக்கிய பாஜகVarun Gandhi out after criticising farm laws
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
X