கட்டாய மத மாற்றத்தை "மிகவும் தீவிரமான" பிரச்சினையாகக் கருதிய உச்ச நீதிமன்றம், திங்களன்று (நவ.14) மத்திய அரசை தலையிட்டு, நடைமுறையைச் சரிபார்க்க நேர்மையான முயற்சிகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டது.
அப்போது, கட்டாய மத மாற்றங்களை நிறுத்தாவிட்டால் "மிகவும் கடினமான சூழ்நிலை" உருவாகும் என்றும் உச்ச நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
தொடர்ந்து, நீதிபதிகள் எம் ஆர் ஷா மற்றும் ஹிமா கோஹ்லி ஆகியோர் அடங்கிய அமர்வு, சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவை கவர்ச்சி நடைமுறையை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை விவரிக்குமாறு கேட்டுக் கொண்டது.
இது தொடர்பாக நீதிபதிகள், “இது மிகவும் தீவிரமான விஷயம். கட்டாய மதமாற்றத்தை நிறுத்த மத்திய அரசு நேர்மையான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
இல்லையெனில் மிகவும் கடினமான சூழ்நிலை வரும். நீங்கள் என்ன நடவடிக்கையை முன்மொழிகிறீர்கள் என்று எங்களிடம் கூறுங்கள்…. நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தேசத்தின் பாதுகாப்பு, சுதந்திரத்தையும் இது பாதிக்கும். இது மிகத் தீவிரமான பிரச்சினை. எனவே, இந்திய அரசு தங்கள் நிலைப்பாட்டை தெளிவுபடுத்துவதும், இதுபோன்ற கட்டாய மதமாற்றத்தைத் தடுக்க மேலும் என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என்பது குறித்து பதில் தாக்கல் செய்வதும் நல்லது” என்றனர்.
கட்டாய மதமாற்றத்துக்கு எதிராக வழக்கறிஞர் அஷ்வினி குமார் உபாத்யாய் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “மிரட்டல், பரிசுகள் மற்றும் பண பலன்கள் மூலம் ஏமாற்றுதல் போன்ற மோசடியான மத மாற்றத்தை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil