பயங்கரவாதிகளைப் பிடிக்க பஹல்காம் சுற்றியுள்ள காடுகளில் தீவிர தேடுதல் வேட்டை!

26 பேரை சுட்டுக் கொன்ற பாகிஸ்தானைச் சேர்ந்த இருவர் உட்பட 5 பயங்கரவாதிகளைப் பிடிக்க, பஹல்காமைச் சுற்றியுள்ள காடுகளில் ராணுவம், மத்திய ஆயுத காவல் படையினர், ஜம்முகாஷ்மீர் காவல்துறையுடன் இணைந்து சுற்றி வளைத்து தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

26 பேரை சுட்டுக் கொன்ற பாகிஸ்தானைச் சேர்ந்த இருவர் உட்பட 5 பயங்கரவாதிகளைப் பிடிக்க, பஹல்காமைச் சுற்றியுள்ள காடுகளில் ராணுவம், மத்திய ஆயுத காவல் படையினர், ஜம்முகாஷ்மீர் காவல்துறையுடன் இணைந்து சுற்றி வளைத்து தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

author-image
WebDesk
New Update
Pahalgam attackers

பஹல்காமைச் சுற்றியுள்ள காடுகளில் ராணுவம் தீவிர தேடுதல் வேட்டை!

காஷ்மீரின் பஹல்காமில் கடந்த 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட சம்பவம், சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலால் இந்தியா-பாகிஸ்தான் உறவில் பதற்றம் அதிகரித்துள்ளது. இதன் எதிரொலியாக சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக இந்திய அரசு அறிவித்தது. மேலும், பாகிஸ்தானியர்களுக்கான விசா சேவைகள் ரத்து செய்யப்படுவதாகவும், இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் நாட்டவர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்றும் மத்திய அரசு அதிரடியாக அறிவித்தது. இதே போல் பாகிஸ்தான் அரசு, தனது வான்வெளியில் இந்திய விமானங்கள் பறக்க தடை விதிக்கப்படுவதாகவும், சிம்லா ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாகவும் அடாவடி அறிவிப்புகளை வெளியிட்டது. மேலும் இருநாட்டு அரசுகளும் தங்கள் ராணுவ படைகளை தயார் நிலையில் வைக்க உத்தரவிட்டுள்ளன. 

Advertisment

இந்நிலையில், பஹல்காம் தாக்குதல் பயங்கரவாதிகளை தெற்கு காஷ்மீர் வனப்பகுதிகளில் அங்குலம் அங்குலமாக சல்லடையிட்டு பாதுகாப்புப் படையினர் 5 நாட்களாக தேடி வருகின்றனர். மேலும், ஒருமுறை பயங்கரவாதிகளை நெருங்கிய போது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தித்தாளுக்குத் தெரிய வந்துள்ளது.

உளவுத்துறை மற்றும் உள்ளூர்வாசிகளிடமிருந்து பெறப்பட்ட தகவலின்படி சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு பயங்கரவாதிகள் கண்டுபிடிக்கப்பட்டதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தனர். “இது பூனை-எலி விளையாட்டு. அவர்கள் வெளிப்படையாக சிக்கிய தருணங்கள் இருந்தன. ஆனால், இந்த முறை அவர்கள் தப்பிச் சென்றுவிட்டனர். காடுகள் மிகவும் அடர்த்தியானவை. ஒருவரைக் கண்டறிந்த பிறகும் துரத்துவது அவ்வளவு எளிதல்ல. ஆனால் அவர்களைப் பிடிப்போம் என்பதில் உறுதியாக உள்ளோம் என்று ராணுவ அதிகாரி ஒருவர் தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறினார்.

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க: Forces located Pahalgam attackers ‘four times…

Advertisment
Advertisements

ஏப்.21 அன்று பைசரன் புல்வெளியில் 26 பேரை சுட்டுக் கொன்ற பாகிஸ்தானைச் சேர்ந்த இருவர் உட்பட 5 பயங்கரவாதிகளைப் பிடிக்க, பஹல்காமைச் சுற்றியுள்ள காடுகளில் ராணுவம், மத்திய ஆயுத காவல் படையினர், ஜம்முகாஷ்மீர் காவல்துறையுடன் இணைந்து சுற்றி வளைத்து தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். அனந்த்நாக்கின் பஹல்காம் தாலுகாவிலுள்ள ஹபத் நர் கிராமத்திற்கு அருகேயுள்ள வனப்பகுதிகளில் முதலில் பயங்கரவாதிகள் கண்டுபிடிக்கப்பட்டதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால், அவர்கள் அடர்ந்த காடுகளைப் பயன்படுத்தி தப்பிக்க முடிந்தது.

பின்னர், குல்காம் காடுகளில் பயங்கரவாதிகள் காணப்பட்டதாகவும், அங்கு அவர்கள் பாதுகாப்புப் படையினருடன் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டதாகவும், பின்னர் தப்பிச் சென்றதாகவும் வட்டாரங்கள் தெரிவித்தன. அந்தக் குழு மீண்டும் டிரால் மலைத் தொடரிலும், கோகர்நாக்கிலும் கூடியது. அங்கு அவர்கள் தற்போது சுற்றித் திரிவதாக சந்தேகிக்கப்படுகிறது.

"பயங்கரவாதிகள் உணவுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். அப்போது அவர்கள் கிராமங்களுக்குச் சென்றுதான் ஆக வேண்டும். ஆனால், அவர்கள் உள்ளூர் தொடர்புகளை பயன்படுத்தி காடுகளுக்கே உணவு வழங்குகிறார்கள். பாதுகாப்புப் படையினருக்கு அவர்களைச் சுற்றி வளைக்க வாய்ப்பளிக்கிறது. இருப்பினும், இந்த பயங்கரவாதிகள் மிகவும் கவனமாக செயல்படுகிறார்கள்," என்று ஒரு அதிகாரி கூறினார். "அவர்கள் இரவு உணவின்போது கிராமத்திற்குச் சென்று, ஒரு வீட்டிற்குள் நுழைந்து உணவு சாப்பிட்ட சம்பவத்தை அறிந்தோம். தகவலறிந்து அங்கு சென்றடைந்தபோது பயங்கரவாதிகள் தப்பிச் சென்றுவிட்டனர் என்று அவர் கூறினார்.

மற்றொரு சவால் என்னவென்றால், பஹல்காமின் உயரமான பகுதிகளுடன் இணைக்கப்பட்டுள்ள கிஷ்த்வார் மலைத்தொடரில் இந்த பருவத்தில் பனி குறைவாகவே பதிவாகியுள்ளது. “இது பயங்கரவாதிகள் மலைத்தொடரைப் பயன்படுத்தி ஜம்மு நோக்கிச் செல்ல வாய்ப்பளிக்கிறது. அங்கு காடுகள் அடர்த்தியாகவும், கடினமான நிலப்பரப்பாகவும் இருக்கும். கிஷ்த்வார் மலைத் தொடரைச் சுற்றிச் செல்லப் பயன்படுத்தி வருகின்றனர், ஆனால் தற்போது அவர்கள் தெற்கு காஷ்மீரில் இருப்பதாக நாங்கள் நம்புகிறோம், ”என்று அந்த அதிகாரி கூறினார்.

பிரச்னை என்னவென்றால், காஷ்மீர் பக்கத்திற்கு முன் கதவும், ஜம்மு பக்கத்திற்கு பின் கதவும் உள்ளது. சமீப காலமாக, வெளிநாட்டு பயங்கரவாதிகள் ஊடுருவி செயல்பட ஜம்மு பக்கத்தை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். வடக்கு காஷ்மீரைப் போல ஊடுருவல் தடுப்பு கட்டம் அந்தப் பக்கத்தில் வலுவாக இல்லை," என்று அவர் கூறினார்.

பைசரனில் கொல்லப்பட்ட சுற்றுலாப் பயணிகளின் 2 மொபைல் போன்களை பயங்கரவாதிகள் எடுத்துச் சென்றதாக வட்டாரங்கள் தெரிவித்தன. "இந்த தொலைபேசிகள் உள்ளூர் மற்றும் எல்லையைத் தாண்டி தகவல்தொடர்புகளை ஏற்படுத்தப் பயன்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொழில்நுட்ப புலனாய்வு இந்த தொலைபேசிகளில் சாத்தியமான தடயங்களைத் தேடி வருகிறது," என்று வட்டாரங்கள் தெரிவித்தன. இதற்கிடையில், ஜம்மு-காஷ்மீர் பக்கங்களில் ஊடுருவல் தடுப்பு கட்டம் பலப்படுத்தப்பட்டுள்ளது, மேலும் பயங்கரவாதிகள் கடக்க முடியாதபடி எல்லைப் படைகள் அதிக எச்சரிக்கையுடன் வைக்கப்பட்டுள்ளன.

தாக்குதலில் மேலும் பலர் ஈடுபட்டார்களா? என்பது குறித்தும், தெற்கு காஷ்மீரில் பயங்கரவாத அமைப்புகளின்  நடமாட்டம் குறித்து ஜம்மு-காஷ்மீர் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. தாக்குதலைத் திட்டமிட்டு செயல்படுத்துவதில் பயங்கரவாதிகள் பெற்ற ஆயுதங்கள் குறித்தும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Jammu And Kashmir

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: