Advertisment

சென்னை ஃபோர்டு தொழிற்சாலை மூடப்படுகிறது: அரசு தலையிட டீலர்கள் வேண்டுகோள்

இந்தியாவில் விற்பனைக்கான வாகனங்கள் உற்பத்தியை நிறுத்துவதற்கு ஃபோர்டு இந்தியா முடிவெடுத்திருப்பது ஆயிரக்கணக்கான ஊழியர்களை நேரடியாகவும், அந்த துறைகளில் நூற்றுக்கணக்கான ஊழியர்களையும் பாதிக்கும் என ஊழியர்கள் தெரிவித்தனர்.

author-image
WebDesk
New Update
சென்னை ஃபோர்டு தொழிற்சாலை மூடப்படுகிறது: அரசு தலையிட டீலர்கள் வேண்டுகோள்

இந்தியாவில் செயல்பாடுகளை நிறுத்துவதற்கான முடிவை ஃபோர்டு நிறுவனம் அறிவித்த சில நாட்களுக்குப் பிறகு, அந்த நிறுவனத்தின் ஊழியர்கள் மற்றும் டீலர்கள் ஒரு உற்பத்தியை முழுமையாக மூடுவதை எதிர்க்க முடிவு செய்துள்ளனர்.

Advertisment

நாட்டில் 'ஃபோர்டு பிசினஸ் சொல்யூஷன்ஸ்' மட்டும் செயல்படுவதை விட்டுவிட்டு, இந்தியாவில் விற்பனைக்கான வாகனங்கள் உற்பத்தியை நிறுத்துவதற்கு ஃபோர்டு இந்தியா நிறுவனத்தின் முடிவு என்பது ஆயிரக்கணக்கான ஊழியர்களை நேரடியாகவும், சம்பந்தப்பட்ட துறைகளில் நூற்றுக்கணக்கான ஊழியர்களையும் பாதிக்கும் அந்த நிறுவனத்தின் ஊழியர்கள் கூறினர்.

2021ம் ஆண்டின் நான்காவது காலாண்டிற்குள் குஜராத், சனந்தில் உள்ள தனது தொழிற்சாலையில் வாகன உற்பத்தி மற்றும் 2022ம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் சென்னையில் வாகனம் மற்றும் என்ஜின் உற்பத்தியை நிறுத்த ஃபோர்டு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பைச் (FADA) சேர்ந்த விங்கேஷ் குலாட்டி தி சண்டே எக்ஸ்பிரஸிடம் கூறுகையில், அரசாங்கம் உடனடியாக தலையிட்டு ஃபோர்டு இந்தியாவால் விற்கப்பட்ட வாகனங்களுக்கு ஒரு காலத்திற்கு சேவைகளைத் தொடரும்படி கட்டாயப்படுத்த வேண்டும் என்று கூறினார்.

வாகன உரிமையாளர்களுக்காக தங்கள் சேவைகளைத் தொடரும் டீலர்களுக்கு போதுமான இழப்பீடு தருவதாக ஃபோர்டு இந்தியா உறுதியளித்துள்ளது என்று குலாட்டி கூறினார். ஆனால் அந்த வாக்குறுதி டீலர்களால் செய்யப்பட்ட பெரிய முதலீடுகளுக்கு ஈடாகப் போவதில்லை. வெறுமனே, தங்கள் வாகனங்களை இந்தியாவில் விற்பனை செய்வதால், தகுந்த காலத்திற்கு அந்நிறுவனம் தங்கள் சேவைகளைத் தொடர்வதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என்று குலாட்டி கூறினார்.

FADA தலைமை நிர்வாக அதிகாரி சஹர்ஷ் தமானி தி சண்டே எக்ஸ்பிரஸிடம் கூறுகையில்: "ஃபோர்டு நிச்சயமாக அவர்களின் சேவை ஆதரவைத் தொடரும் என்று கூறியுள்ளனது. ஆனால், நீங்கள் இந்தியாவின் செயல்பாடுகளை நிறுத்தியவுடன் ஒரு பெரிய கேள்விக்குறி உள்ளது. இந்தியாவை விட்டு வெளியேறும் நிறுவனங்கள் இதுபோன்ற விஷயங்களைச் சொல்கின்றன. ஆனால், உதிரி பாகங்கள் பிரச்சினைகள், மனிதவளப் பிரச்சினைகள் இருப்பதால் நீண்ட காலத்திற்கு அது வேலை செய்யாது. பின்னர் பல டீலர்கள் தொடர விரும்ப மாட்டார்கள்.” என்று கூறினார்.

FADA ஏற்கனவே டீலர்களிடமிருந்து கவலைமிக்க அழைப்புகளைப் பெற்று வருகிறது என்றார். “இது டீலர்கள், டீலர்ஷிப் ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களை பாதிக்கும். ஆட்டோ சில்லறை விற்பனைக்கு வெளியே, குஜராத் மற்றும் தமிழ்நாட்டில் ஃபோர்டு சப்ளை செய்யும் பாகங்கள் உற்பத்தியாளர்கள் தாக்கத்தை உணர்வார்கள்” என்று டாமணி கூறினார்.

டாமணி கூறியதாவது: “அனைத்து வளர்ந்த சந்தைகளிலும் உரிமையாளர் பாதுகாப்பு சட்டம் உள்ளது. இந்த சட்டம் வந்த பிறகு, நிறுவனங்கள் திடீரென வெளியேற முடியாது. அவர்கள் போதுமான நேரத்தையும் தகுந்த இழப்பீட்டையும் கொடுக்க வேண்டும். டீலர்ஷிப் ஒப்பந்தங்கள் ஒரு நீண்ட கால நோக்குநிலையைக் கொண்டிருக்கும். இந்தியாவில் ஃபோர்டு டீலர்ஷிப்பை அமைக்க சுமார் 5-6 கோடி ரூபாய் தேவைப்படுகிறது. குறிப்பிட்ட ஃபோர்டு தொடர்பான வன்பொருள் மற்றும் உள்கட்டமைப்பு உள்ளது. நீங்கள் பிராண்டுடன் தொடர்புபடுத்தாதவுடன் எந்தப் பயனும் இல்லை. டீலர்கள் SMEகள் மற்றும் குடும்பம் நடத்தும் கூட்டு நிறுவங்களின் தொழில்முனைவோர் வாழ்க்கையில் மிகப்பெரிய இழப்பாக இருக்கும். ஃபோர்டில் 4,000 ஊழியர்கள் உள்ளனர். டீலர்களிடம் 40,000 ஊழியர்கள் உள்ளனர்…” என்று கூறினர்.

FADA குறிப்பிட்டுள்ளபடி, “170 டீலர்கள் மற்றும் 391 விற்பனை நிலையங்கள் 2,000 கோடி ரூபாய் முதலீட்டில் உள்ளன. ஃபோர்டு இந்தியா நிறுவனம் 4,000 பேரை வேலைக்கு அமர்த்தியுள்ள நிலையில், டீலர்ஷிப்கள் சுமார் 40,000 பேரை வேலைக்கு அமர்த்தியுள்ளன. ஃபோர்டு இந்தியா டீலர்கள் தற்போது 1,000 வாகனங்களை வைத்திருக்கிறார்கள். இது புகழ்பெற்ற இந்திய வங்கிகளின் சரக்கு நிதியின் மூலம் ரூ.150 கோடி ஆகும்… ஃபோர்டு இந்தியா ஐந்து மாதங்களுக்கு முன்பு வரை பல டீலர்களை நியமித்தது. அத்தகைய டீலர்கள் தங்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய நிதி இழப்பைச் சந்திப்பார்கள்” என்று ஆட்டோமொபைல் அமைப்பு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சென்னையில் உள்ள பல ஃபோர்டு நிறுவன ஊழியர்கள் பேசத் தயங்கினாலும், தங்கள் வேலைகள் மற்றும் அளிக்க வேண்டிய இழப்பீட்டுத் தொகுப்புகள் குறித்து நிறுவனத்தின் முடிவு பற்றி இன்னும் தெரியவில்லை, குறைந்தது இரண்டு ஃபோர்டு பொறியாளர்கள் தங்கள் எதிர்காலத்தைப் பற்றிய தகவலுக்காக இன்னும் காத்திருப்பதாகக் கூறினர். “அவர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள், அல்லது ஒரு சிலர் வெளிநாட்டு ஆலைகளில் நடக்கும் திட்டங்களின் ஒரு பகுதியாக தக்கவைக்கப்படலாம். நாங்கள் காத்திருந்து பார்க்க வேண்டும்” என்று அவர்களில் ஒருவர் கூறினார்.

சென்னை ஃபோர்டு நிறுவனத்தின் ஊழியர் சங்கத்தைச் சேர்ந்த ஆர் சுரேஷ் திங்கள்கிழமை நிறுவனத்தின் பிரதிநிதிகளைச் சந்திக்கும்போது நிறுவனத்தின் திட்டம் பற்றி தெளிவான கருத்து கிடைக்கும் என்றார்.

ஆர். சுரேஷ் கூறியதாவது: “இங்கே மணிநேர அடிப்படையில் ஊதியம் பெறும் தொழில்நுட்ப பணியாளர்கள் மற்றும் சம்பளம் பெறும் ஊழியர்கள் உட்பட முக்கியமாக இரண்டு பிரிவு ஊழியர்கள் உள்ளனர்” என்று கூறினார். மேலும், “சென்னையில் மட்டும் 2,635 தொழில்நுட்ப பணியாளர்கள் உள்ளனர் - பெரும்பாலும் டிப்ளமோ வைத்திருப்பவர்கள் சராசரியாக 55,000 சம்பளத்துடன் உள்ளனர். இந்த சம்பள வகைகளில் பொறியாளர்கள் மற்றும் பிற உயர் பதவிகளில் இருப்பவர்களின் சம்பளம் ரூ.80,000 முதல் தொடங்குகிறது. அவர்களில் 350 பேர் சென்னையில் இருக்கிறார்கள். நாங்கள் வேலையைவிட குறைவாக எதையும் ஏற்க மாட்டோம். இந்த வாகன உற்பத்தி நிறுத்தத்தை நாங்கள் ஏற்க மாட்டோம்; எங்களுக்கு வேலை தேவை” என்று சுரேஷ் கூறினார்.

என்டிஏ கூட்டணி கட்சியான பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மத்திய, மாநில அரசுகள் ஃபோர்டு நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் செயல்பாடுகளைத் தொடர்வதற்கான விருப்பங்களை ஆராயுமாறு கேட்டுக் கொண்டார். இழப்பீட்டு சலுகை இருந்தபோதிலும், இந்த ஆண்டின் தொடக்கத்தில் தாலேகான் ஆலையை மூடுவதற்கான ஜெனரல் மோட்டார்ஸின் திட்டத்தை நிராகரிப்பதற்கான மகாராஷ்டிரா அரசின் முடிவை ராமதாஸ் மேற்கோள் காட்டியுள்ளார்.

டெல்லியின் மோதி நகரில் உள்ள விற்பனை நிலையமான ஹர்பிரீத் ஃபோர்டில், விற்பனை பிரதிநிதியாக உள்ள ஜிதேந்தர் சாதனா, வியாழக்கிழமை முதல் ரத்து செய்யத் தொடங்கியதாக கூறினார். வியாழக்கிழமை ஃபோர்டு இந்தியா நிறுவனத்தின் தலைவர் அனுராக் மெஹ்ரோத்ராத்திடம் இருந்து ஒரு வீடியோ செய்தியை வெளியிட்டது. அதில் “நாங்கள் எங்களுடைய டீலர்களுடன் நெருக்கமாக வேலை செய்வோம்” என்று தெரிவித்துள்ளார்.

சர்தானா (44) ஃபோர்டுடன் 24 வருடங்கள் வேலை செய்து வருகிறார். இருப்பினும், முன்னால் என்ன இருக்கிறது என்று தெரியவில்லை என்று கூறினார்.

டாமணி கூறியதாவது: “இது விநாயகர் சதுர்த்திக்கு சற்று முன்பு நடந்துள்ளது. வாடிக்கையாளர்களிடம் இருந்து பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இந்த நன்னாளில் இந்தியா முழுவதும் வழங்கப்படவிருந்த சுமார் 400 வாகனங்கள் வாடிக்கையாளர்களுக்கு அச்சம் இருந்ததால் வழங்க முடியவில்லை. உண்மையில், முன்பதிவுகளை உறுதிப்படுத்திய நிறைய வாடிக்கையாளர்கள் உள்ளனர். ஆனால், இப்போது பணத்தைத் திரும்பப் பெற விரும்புகிறார்கள். வாடிக்கையாளர்களுக்கு ஃபோர்டு எவ்வாறு தங்கள் வாகனங்களுக்கு தொடர்ந்து சேவை செய்யும் என்று தெரியாது.” என்று கூறினார்.

ஹர்பிரீத் ஃபோர்டின் நிர்வாக இயக்குனர் சுனில் டாண்டன், “எங்கள் டீலர்ஷிப் குழுமத்தில் மற்ற கார் உற்பத்தியாளர்களுடன் பல டீலர்கள் உள்ளனர். எனவே, எங்களால் முடிந்தவரை உள்வாங்க முயற்சிப்போம். சிறிய டீலர்களுக்கு இதை என்னால் சொல்ல முடியாது. சேவைப் பிரிவு தொடரும். ஆனால், விற்பனைத் துறை கவலைக்குரிய பகுதியாகும். நாங்கள் ஃபோர்டுடன் பேசுவோம். நாங்கள் செப்டம்பர் 9, 1996 அன்று செயல்பாடுகளைத் தொடங்கினோம். 25 ஆண்டுகளுக்குப் பிறகு அதே நாளில் ஃபோர்டின் இந்த அறிவிப்பு வந்துள்ளது.” என்று கூறினார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

India
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment