நிதித்துறை மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர்களாக பொறுப்பேற்ற தமிழர்கள்

பதவியில் இருந்து ஓய்வு பெற்ற இவர் டாட்டா சன்ஸ் நிறுவனத்தின் ப்ரெசிடென்ண்டாக பதவி வகித்து வந்தார். 2019ம் ஆண்டு இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டன.

By: Updated: May 31, 2019, 03:45:56 PM

Foreign Affairs Minister S Jaishankar & Finance Minister Nirmala Seetharaman : இம்முறை தமிழகத்தில் சிவகங்கை, கோவை, கன்னியாகுமரி, ராமநாதபுரம், மற்றும் தூத்துக்குடியில் போட்டியிட்டனர் அதிமுக + பாஜக கூட்டணியில் இடம் பெற்ற பாஜகவினர். டாக்டர் தமிழிசை சௌந்தராஜன், எச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன், நயினார் நாகேந்திரன், மற்றும் சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகிய ஐவரில் எவரும் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.

தமிழர்கள் நலன் மற்றும் தமிழக பிரதிநிதிகள் யாரும் மத்திய அமைச்சரவையில் இடம் பெறாமல் போனது குறித்து ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக கவலைப்பட்டுக் கொண்டனர். ஆனால் நேற்று பதவியேற்ற 57 அமைச்சர்களில் இருவர் தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர்கள். அவர்கள் இருவருக்கும் இந்தியாவின் மிக முக்கியமான அமைச்சரவை பொறுப்புகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஒரு நாட்டின் மிகவும் சக்திவாய்ந்த அமைச்சரவையாக பார்க்கப்படுவது வெளியுறவுத்துறை, உள்ளுறவுத்துறை, நிதி, மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சகமாகும். இந்த முக்கியமான அமைச்சரவைகளில் இரண்டு தமிழர்களுக்கு இடம் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

நிதி அமைச்சர் – நிர்மலா சீதாராமன்

2017ம் ஆண்டுக்கு முன்பு வரை ஆந்திராவின் மாநிலங்களவை உறுப்பினராக இருந்த அவர் நிதி அமைச்சரவையின் கீழே வரும் ஃபினான்ஸ் மற்றும் கார்ப்பரேட் அஃபெர்ஸ் அமைச்சராக பதவி வகித்து வந்தவர். 2017ம் ஆண்டு கர்நாடகாவின் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர். பின்னர் நாட்டின் இரண்டாவது பெண் பாதுகாப்புத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

புதிய அமைச்சரவையில் இடம் பெற்ற இவருக்கு நிதி அமைச்சரவை ஒதுக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் இருந்து தேர்வு செய்யப்பட்டு  அமைச்சரவையில் இடம் பெற்ற நால்வரில் இவரும் ஒருவர்.

சதானந்த கவுடா – வடக்கு பெங்களூரு

பிரகலாத் ஜோஷி  – தர்வாத்

சுரேஷ் அங்காடி – பெலகவி

நிர்மலா சீதாராமன் – கர்நாடகாவின் மாநிலங்களவை உறுப்பினர்.

இவருடைய பிறப்பிடம் மதுரை ஆகும். கல்லூரிப்படிப்பினை திருச்சியில் படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் பெற்றோர்கள் தஞ்சையை பூர்வீகமாக கொண்டவர்கள்.

வெளியுறவுத்துறை அமைச்சர் – எஸ்.ஜெய்ஷங்கர்

1977ம் ஆண்டு ஃபாரின் சர்வீஸ் எழுதி வெற்றி பெற்றவர்களில் இவரும் ஒருவர். இவர் 2014 – 2015ம் ஆண்டு அமெரிக்காவிற்கான இந்திய தூதராக பதவி வகித்தார்.  2009 – 2013ம் ஆண்டு காலத்தில் சீனாவிற்கான இந்திய தூதராக பதவி வகித்தார். அருணாச்சலம் தொடர்பாக இந்தியா மற்றும் சீனாவிற்கு இடையே நிலவிய பதட்டமான சூழலை தணிக்க பெரிதும் உதவியர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. சீனாவுடனான எல்லை, வர்த்தகம், மற்ற கலாச்சார பகிர்வுகளை மிகவு சிறப்பாக முன்னேற்று நடத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

2015ம் ஆண்டு வெளியுறவு செயலாளாராக செயல்பட்டுக் கொண்டிருந்த சுஜாதா சிங்கினை மாற்றும் போது மோடியால் தேர்வு செய்யப்பட்டவர் ஜெய்ஷங்கர் என்பது குறிப்பிடத்தக்கது.

பதவியில் இருந்து ஓய்வு பெற்ற இவர் டாட்டா சன்ஸ் நிறுவனத்தின் ப்ரெசிடென்ண்டாக பதவி வகித்து வந்தார். 2019ம் ஆண்டு இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டன.  இவருடைய பெற்றோர்கள் தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர்கள். சுப்ரமணியம் மற்றும் சுலோச்சனா தம்பதிகளுக்கு மகனாக பிறந்த இவர் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பயின்றவர்.

மேலும் படிக்க : மோடியின் புதிய அமைச்சரவை… புதிய நம்பிக்கைகள்… எந்தெந்த உறுப்பினர்களுக்கு எந்தெந்த துறை வழங்கப்பட்டுள்ளது ? முழுமையான விபரம் உள்ளே

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:Foreign affairs minister s jaishankar finance minister nirmala sitharaman tamil faces in narendra modis new cabinet

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X