Advertisment

உலகப் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களை இந்தியாவில் நிறுவ மத்திய அரசு ஆலோசனை

தலைசிறந்த 200 பல்கலைக்கழகங்கள் பட்டியலில் இந்திய கல்வி நிறுவனங்களை சேர்ப்பதற்கான முயற்சிகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Foreign Educational Institutions Bill

Foreign Educational Institutions Bill

 Ritika Chopra

Advertisment

Foreign Educational Institutions Bill : ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் இரண்டாம் முறை ஆட்சியின் போது வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் தங்களுடைய கல்வி நிறுவனங்களை நிறுவ அனுமதி அளித்து மசோதா ஒன்றை நிறைவேற்றியது. அந்த சூழலில் அதனை முற்றிலுமாக எதிர்த்த பாரதிய ஜனதா கட்சி, தற்போது தன்னுடைய இரண்டாம் ஆட்சியின் போது அதே திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது.

பல்கலைக்கழக மானிய ஆணையம் மற்றும் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் இரண்டுக்கும் பதிலாக ஒற்றை உயர்கல்வி கட்டுப்பாட்டு அமைப்பினை உருவாக்க இந்த மசோதா வழிவகை செய்யும். இது தொடர்பான முழுமையான திட்டங்களை உருவாக்க மனித வள மேம்பாட்டு அமைச்சகம் இந்த வாரம் ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்த உள்ளது.

இந்த மசோதாவின் மூலமாக, புதிய உயர்க் கல்வி ஆணையம் நேரடியாக, புகழ்பெற்ற வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் தங்கள் கல்வி நிறுவனங்களை இந்தியாவில் அமைக்க அனுமதி வழங்கும். ஆனால் இதில் இருக்கும் சிரமத்தினையும் மக்கள் அறிந்து கொள்ள வேண்டும். புகழ்பெற்ற நிறுவனங்கள் என்றால் அதற்காக நியமிக்கப்படும் கல்வியாளர்கள், உயர்கல்வி கட்டணம் எல்லாம் மிக அதிகமாக இருக்கும். இது இந்தியாவின் பெரும்பான்மை மக்களால் கட்டமுடியாத அளவிற்கு பெரும் தொகையாக இருக்கும்.

To read this article in English

கடந்த பாஜக ஆட்சியின் போது, மோடி இந்த மசோதாவில் புதிய திருத்தங்களை, நிதி ஆயோக் மற்றும் வணிக அமைச்சத்தின் உந்துதலில் மேற்கொண்டார். 2015ம் ஆண்டில் இருந்தே நிதி ஆயோக் மற்றும் காமெர்ஸ் மினிஸ்ட்ரி இதற்கான முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. சர்வதேசமயமாக்கும் முயற்சியில் இந்த திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, ஃபாரின் எக்ஸ்சேஞ்ச் மற்றும் இந்தியாவில் படித்தோம் என்ற "Educated in India" என்ற அடையாளத்தை மட்டுமே உருவாக்கும் நோக்கில் இது வடிவமைக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தை ஜூன் மாதம் 2015ம் ஆண்டு நடத்திய மோடி, நிதி ஆயோக்கிடம், இந்தியாவில் வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் தங்களின் கல்வி நிறுவனங்களை அமைக்க இருக்கும் சாதக பாதகங்களை ஆராய்ந்து அறிக்கை சமர்பிக்க கூறினார். பின்பு நிதி ஆயோக் பிரதம அலுவலகம் மற்றும் மனித வள மேம்பாட்டு அமைச்சகம் இரண்டிடமும் தங்களின் அறிக்கையை சமர்பித்தது.

2016ம் ஆண்டு காமர்ஸ் மினிஸ்ட்ரி, வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள், சிறப்பு பொருளாதார மண்டலத்தில் தங்களுடைய கல்வி நிறுவனங்களை அமைத்தால், உள்நாட்டு கொள்கைகளை பின்பற்ற தேவையில்லை என்ற ஆலோசனையை வழங்கியது. ஆனால் இந்த யோசனை மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகத்தால் நிராகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பல ஆண்டுகளாக மறுப்பு தெரிவித்து வந்த மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகம் இறுதியாக இந்த முடிவுக்கு தன்னுடைய ஒப்புதலை கடந்த மாதம் அறிவித்தது. ஏற்கனவே புதிய கல்விக் கொள்கையை வெளியிட்ட பாஜக, உலக அரங்கில் தலைசிறந்த 200 பல்கலைக்கழகங்கள் பட்டியலில் இந்தியா கல்வி நிறுவனங்களை சேர்ப்பதற்கான முயற்சிகளையும் இந்த அரசு மேற்கொண்டு வருகிறது.

Ugc Hrd Ministry
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment