Advertisment

குஜராத் பல்கலை. விடுதியில் ‘ரம்ஜான் தொழுகையில் வெளிநாட்டு மாணவர்கள் மீது தாக்குதல்; 4 பேர் காயம்

ஆப்கானிஸ்தான், உஸ்பெகிஸ்தான், இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் குஜராத் பல்கலைக்கழகத்தால் நியமிக்கப்பட்ட விடுதியில் தொழுகை நடத்தும் போது தாக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

author-image
WebDesk
New Update
Gujarat

குஜராத் பல்கலைக்கழக மாணவர்கள் தாக்குதல் சம்பவம் குறித்து போலீசார் எப்.ஐ.ஆர் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

ஆப்கானிஸ்தான், உஸ்பெகிஸ்தான், இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் குஜராத் பல்கலைக்கழகத்தால் நியமிக்கப்பட்ட விடுதியில் தொழுகை நடத்தும் போது தாக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisment

 ஆங்கிலத்தில் படிக்க: Foreign students attacked ‘over Ramzan prayers’ at Gujarat University hostel; 4 injured

குஜராத் பல்கலைக்கழக மாணவர்கள் தாக்குதலின் ஆரம்ப அறிக்கையின்படி, ஆப்கானிஸ்தான், உஸ்பெகிஸ்தான், இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த சர்வதேச மாணவர்கள் சனிக்கிழமை இரவு நமாஸ் செய்து கொண்டிருந்தபோது தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில் 4 வெளிநாட்டு மாணவர்கள் தாக்கப்பட்டனர்.

அகமதாபாத்தில் உள்ள குஜராத் பல்கலைக்கழகத்தின் சர்வதேச ஆண்கள் விடுதியில் ரம்ஜான் பண்டிகையின் போது நமாஸ் செய்ததாகக் கூறப்படும் மாணவர்களை ஒரு கும்பல் சனிக்கிழமை இரவு தாக்கப்பட்டதில் 4 வெளிநாட்டு மாணவர்கள் காயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் எப்.ஐ.ஆர் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் படுகாயமடைந்த 2 மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அங்கே அவர்கள் ஆபத்தான நிலையில் இல்லை என்று கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த அகமதாபாத் காவல்துறை தலைவர் ஜி.எஸ் மல்லிக் மற்றும் குஜராத் பல்கலைக்கழக துணைவேந்தர் நீர்ஜா குப்தா ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை காலை விடுதிக்கு வந்தனர்.

முதற்கட்ட தகவல்களின்படி, ஆப்கானிஸ்தான், உஸ்பெகிஸ்தான், இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த சர்வதேச மாணவர்கள், சர்வதேச மாணவர்கள் விடுதித் தொகுதி-A-ல் குஜராத் பல்கலைக்கழகத்தால் நியமிக்கப்பட்ட பகுதியில் சனிக்கிழமை இரவு நமாஸ் செய்து கொண்டிருந்தபோது தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. 

சமூக வலைதளமான எக்ஸ் பக்கத்தில் பகிரப்பட்ட இந்த சம்பவத்தின் வீடியோக்கள், சிலர் இரு சக்கர வாகனங்களைச் சேதப்படுத்துவதைக் காட்டுகின்றன.

விடுதியைப் பார்வையிட்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய போலீஸ் கமிஷனர் மாலிக், இரவு 10.30 மணியளவில், வெளிநாட்டு மாணவர்கள் தொழுகை நடத்தும்போது, ​​20-25 பேர் அங்கு ஏன் தொழுகை நடத்துகிறீர்கள் என்று கேட்டதாகவும், ஒரு மசூதியில் அவ்வாறு செய்யச் சொன்னதாகவும் கூறினார். இதனால், விடுதி அறைகளிலும் கைகலப்பு, கல் வீச்சு, நாசவேலைகள் நடந்துள்ளது என்று கூறினார்.

“இரவு 10.51 மணிக்கு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு யாரோ தகவல் கொடுத்தனர். மேலும், பி.சி.ஆர் வேன் இரவு 10.56 மணிக்கு அந்த இடத்தை அடைந்தது. இந்த சம்பவத்தை நாங்கள் தீவிரமாகக் கவனித்துள்ளோம், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று மாலிக் கூறினார்.

“இந்த சம்பவத்தை விசாரிக்க ஒன்பது குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு குற்றவாளி அடையாளம் காணப்பட்டுள்ளார், மேலும் குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் போலீசார் கைது செய்வார்கள்” என்று அவர் கூறினார்.

குஜராத் பல்கலைக்கழக மாணவர்கள் தாக்குதல் சம்பவம் குறித்து போலீசார் எப்.ஐ.ஆர் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். (எக்ஸ்பிரஸ் புகைப்படம்)

தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பேசிய ஜமால்பூர் காடியாவின் காங்கிரஸ் எம்.எல்.ஏ இம்ரான் கெடவாலா, “இரவு 10.30 மணியளவில் நமாஸின் போது ‘ஜெய் ஸ்ரீராம்’ கோஷங்களை எழுப்பியபடி சுமார் 30 பேர் கொண்ட குழு அப்பகுதிக்குள் நுழைந்து சர்வதேச மாணவர்களைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. நான்கு மாணவர்கள் காயமடைந்தனர் - அவர்களில் இருவர் பலத்த காயமடைந்துள்ளனர் - அவர்கள் முனிசிபல் கார்ப்பரேஷன் நடத்தும் எஸ்.வி.பி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.” என்று கூறினார்.

சனிக்கிழமை இரவு சம்பவ இடத்திற்கு முதலில் வந்த கெடவாலா மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ கியாசுதீன் ஷேக் ஆகியோர் மாணவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

விடுதி பாதுகாப்பு ஊழியர்கள் முன்னிலையில் இந்த சம்பவம் நடந்ததாகவும், தாக்குதலுக்குப் பிறகு போலீசாரும் வந்ததாகவும் கெடவாலா கூறினார்.  "இந்த வெளிநாட்டு மாணவர்களின் அறைகளும் சூறையாடப்பட்டன, தாக்குதலில் ஈடுபட்டவர்கள் அவர்களின் மடிக்கணினிகள் மற்றும் மொபைல் போன்களை சேதப்படுத்தினர்" என்று எம்.எல்.ஏ மேலும் கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Gujarat
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment