Advertisment

#MeToo விவகாரம் : பாலியல் பலாத்கார வழக்கில் சிக்கும் எம்.ஜே. அக்பர்

ஆண் நண்பர்களிடம் பேசியதிற்காக லண்டனில் வைத்து சரமாரியாக தாக்கப்பட்டேன் - பல்லவி கோகோய்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
MJ Akbar defamation case

MJ Akbar

#MeToo எம்.ஜே அக்பர் மீது பாலியல் பலாத்கார புகார் : இந்தியாவில் பணியிடங்களில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகள் குறித்த அனுபவங்களை கடந்த ஒரு மாதங்களுக்கும் மேலாக சமூக வலைதளங்களில் வெளிப்படையாக பெண்கள் பேசி வருகிறார்கள். சினிமா பிரபலங்கள், இலக்கியம்,என ஒவ்வொரு இடமாய் கடந்து, முன்னாள் மத்திய இணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் மீதும் பாலியல் துன்புறுத்தல்கள் ரீதியான மீடு புகார்கள் எழுந்தன. மேலும் படிக்க : எம்.ஜே. அக்பர் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை பதிவு செய்த ஊடகவியலாளர்கள் 

Advertisment

எதிர்கட்சிகளின் அழுத்தம் மற்றும் தொடர்குற்றச்சாட்டுகளின் விளைவாக தன்னுடைய இணை வெளியுறவுத் துறை அமைச்சர் என்ற பதவியை ராஜினாமா செய்தார் எம்.ஜே. அக்பர். தன் மீது அவதூறு குற்றச்சாட்டுகளை எழுப்பியதாகக் கூறி பத்திரிக்கையாளர் ப்ரியா ரமணி மீது மான நஷ்ட வழக்கினை பதிவு செய்திருக்கிறார் எம்.ஜே. அக்பர்.

#MeToo எம்.ஜே அக்பர் மீது பாலியல் பலாத்கார புகார்

இந்நிலையில் எம்.ஜே. அக்பர் மீது பாலியல் பலாத்கார புகார் ஒன்றினை அளித்திருக்கிறார் பல்லவி கோகோய். நேசனல் பப்ளிக் ரேடியோவில் தலைமை வர்த்தக அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார் பல்லவி.

1994ம் ஆண்டு, பல்லவி தி ஏசியன் ஏஜ் பத்திரிக்கையின் Op-Ed பக்கத்தின் எடிட்டராக பணியாற்றி வந்தார் பல்லவி. அப்போது அவருக்கு 23 வயது. தி வாஷிங்டன் போஸ்ட்டில் பல்லவி எழுதிய கட்டுரை ஒன்றில் எம்.ஜே. அக்பர் தன்னிடம் முறை தவறி நடக்க முற்பட்டதாகவும், முத்தம் கொடுக்க முற்பட்டதாகவும் கூறியிருக்கிறார்.

ஒரு முறை எம்.ஜே. அக்பரிடமிடமிருந்து தன்னை காத்துக் கொள்ள முயற்சித்த போது பல்லவியை தாக்கியதாகவும் எம்.ஜே. அக்பர் மீது குற்றச்சாட்டினை முன்வைத்திருக்கிறார் பல்லவி. அக்பர் என்னை பாலியல் ரீதியாகவும், மன ரீதியாகவும் மிகவும் துன்புறுத்தியதாக குற்றச்சாட்டினை பதிவு செய்திருக்கிறார்.

தன்னுடைய கட்டுரையில் ”இந்த சிறிய வயதில் இவ்வளவு பெரிய பொறுப்பில் இருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கக் கூடியதாக இருந்தது. ஆனால் எனக்கு பிடித்த வேலையை நான் செய்வதற்கான மிகப் பெரும் விலையை நான் கொடுக்க நேரிட்டது” என்று குறிப்பிட்டிருந்தார்.

மேலும் படிக்க : தி வாஷிங்டன் போஸ்ட்டில் பல்லவி எழுதிய கட்டுரை

தி வாஷிங்டன் போஸ்ட்டில் பல்லவி

ஒரு Op Ed பக்கத்தில் நான் எழுதிய கட்டுரைகளின் தலைப்பு மற்றும் இதர திட்டங்களை நான் அவரிடம் காட்ட சென்ற போது, அவர் என்னை வெகுவாக பாராட்டினார். அவர் என்னை முத்தமிட்டது எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. நான் அவருடைய அறையில் இருந்து வேகமாக வெளியேறிவிட்டேன் என்று அக்பர் தன்னிடம் முதன்முறையாக தவறாக நடந்து கொண்டதைப் பற்றி அக்கட்டுரையில் பதிவு செய்திருக்கிறார் பல்லவி.

மேலும் தி வாஷிங்கடன் போஸ்ட் பத்திரிக்கையில் கோகோய் “அவருடைய விடுதி அறையில், அவரிடம் இருந்து என்னை தற்காத்துக் கொள்ள எவ்வளவோ போராடினேன். இருந்தும் அவர் என்னையை விட மிகவும் வலுவானவராக இருந்த காரணத்தால் என்னால் எதையும் செய்ய இயலவில்லை. என்னை பாலியல் பலத்காரம் செய்தார் எம்.ஜே. அக்பர். காவல்துறையில் அவர் மீது புகார் அளிப்பதற்கு பதிலாக, நான் என்னையே நொந்து கொண்டேன். அவமானமாக இருந்தது என்று எழுதியிருக்கிறார். To read this article in English

இந்த பலாத்கார நிகழ்விற்கு பின்னர் அக்பரின் ஆதிக்கம் என் மீது அதிகமானது. அவர் என்னை தொடர்ந்து பல நாட்களாக துன்புறுத்தி வந்தார். நான் என்னுடைய சக ஆண் பணியாளர்களிடம் பேசிக் கொண்டிருந்தால் அக்பர் என் மீது மிகவும் ஆத்தரத்துடன் நடந்து கொள்வார். அவரின் பார்வையில் இருந்து தப்பித்துக் கொள்ள வெளிநாடுகளில் இருந்து வேலை பார்த்தேன். அப்போதும் ஒரு முறை என்னுடைய ஆண் நண்பரிடம் பேசியதிற்காக லண்டனில் அடித்து விரட்டப்பட்டேன் என்று தன்னுடைய இருண்ட நாட்களை வாசிங்டன் போஸ்ட்டில் பதிவு செய்திருக்கிறார் பல்லவி கோகோய்.

ஆனால் பல்லவியின் இந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருக்கும் விசயங்கள் அனைத்தையும் மறுத்திருக்கிறார் அக்பரின் வழக்கறிஞர் சந்தீப் கபூர்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment