Former Assam CM Tarun Gogoi passes away : அசாம் முன்னாள் முதலமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினர்களில் ஒருவருமான தருண் கோகோய் இயற்கை எய்தினார்.
கோவிட்க்கு பிந்தைய உடல் நல பாதிப்பு காரணமாக குவகாத்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் (ஜி.எம்.சி.எச்) சிகிச்சை பெற்று வந்த அவர், மாலை 5.34 மணியளவில் காலமானார் என்று மாநில சுகாதார அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்தார்.
குவஹாத்தியில் உள்ள ஸ்ரீமந்தா சங்கர்தேவா காலகேத்ரா அரங்கில், தருண் கோகியின் உடல் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே, திப்ருகரில் உள்ள கோகோயின் குடும்பத்தினரை சந்திக்கும் திட்டத்தை ரத்து செய்த முதல்வர் சர்பானந்தா சோனோவால், அவசரமாக குவாஹாத்திக்கு திரும்பினார். “அவர் எப்போதும் எனக்கு ஒரு தந்தை ஸ்தானத்தில்இருந்து வருகிறார். அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று பிரார்த்தனை செய்த லட்சக்கணக்கான மக்களில் நானும் ஒருவன், ”என்று சோனோவால் தெரிவித்தார்.
ஆகஸ்ட் மாத இறுதியில், தருண் கோகோய்-க்கு கொரோனா நோய்த் தொற்று கண்டறியப்பட்டது. அப்போது, பிளாஸ்மா சிகிச்சைக்கும் அவர் உட்படுத்தப்பட்டார். கோவிட்டு தொற்றில் இருந்து மீண்ட பிறகு, கோவிட்டுக்கு பிந்தைய சிக்கல்களை எதிர்த்துப் போராடினார்.
முன்னதாக திங்களன்று, பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், ராகுல் காந்தி ஆகியோர் கோகோயின் மகனும், எம்.பியுமான கவுரவ் கோகோயை அழைத்து தந்தையின் உடல்நிலை குறித்து விசாரித்தனர்.
கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்தவற்கு முன்பாக, 2021 அசாம் சட்டமன்றத் தேர்தலுக்கான அனைத்து எதிர்க்கட்சிகளையும் உள்ளடக்கிய ஒரு ‘மகா கூட்டணியை’ அமைப்பதற்கான முயற்சியில் கோகோய் செயல்பட்டு வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தருண் கோகாய் மறைவிற்கு, பிரதமர் நரேந்திர மோடி தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டார்.
பிரதமர் வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், “தருண் கோகாய் அவர்கள் அசாம் மற்றும் மத்திய அரசியலில் நீண்ட அனுபவம் கொண்ட புகழ்பெற்ற தலைவராகவும், முதுபெரும் நிர்வாகியுமாகவும் திகழ்ந்தார். அவரது மறைவினால் மன வேதனையில் உள்ளேன். அவரது குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்களுக்கு இந்தத் தருணத்தில் எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி”, என்று குறிப்பிட்டுள்ளார்.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook
Web Title:Former assam cm tarun gogoi passes away leaders pays tribute
வருமான வரி சோதனை : பால் தினகரன் வீடுகளில் தங்கம் மற்றும் 120 கோடி பறிமுதல்
என் பெயரை மிஸ் யூஸ் பண்றாங்க: வீடியோவில் வருத்தப்பட்ட விஜய் டிவி நடிகை
கட்சி விளம்பரத்திற்கு அரசு நிதி : அதிமுக மீது தேர்தல் ஆணையத்தில் திமுக பரபரப்பு புகார்
10ம் வகுப்பு தேர்ச்சி போதும்: இந்திய ரிசர்வ் வங்கியில் பாதுகாப்பு காவலர் பணி
சென்னை டெஸ்டில் ரசிகர்களுக்கு அனுமதி இல்லை: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் உறுதி