/tamil-ie/media/media_files/uploads/2021/04/soli-sorabjee-759.jpg)
இந்தியாவின் முன்னாள் அட்டர்னி ஜெனரலும், மூத்த வழக்கறிஞருமான சோலி சொரப்ஜி கொரோனா தொற்றால் உயிழந்தார். அவருக்கு வயது 91.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சொராப்ஜி, சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.
சொராப்ஜி தனது சட்ட நடைமுறையை 1953 ல் மும்பை உயர் நீதிமன்றத்தில் தொடங்கினார். அதன்பிறகு 1971 ல் உச்சநீதிமன்றத்தில் மூத்த ஆலோசகராக நியமிக்கப்பட்டார். மத்திய அரசின் அட்டர்னி ஜெனரலாக 1989-1990 வரையிலும் அதன்பிறகு 1998-2004 வரையிலும் பணியாற்றினார். மேலும், 1997 ஆம் ஆண்டு நைஜீரியாவிற்கான ஐ.நா. சிறப்பு அறிக்கையாளராகவும் சொராப்ஜி நியமிக்கப்பட்டார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.