/indian-express-tamil/media/media_files/O71X1v4RPsQcwAE4Q8Jf.jpg)
மேற்கு வங்க முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா
மேற்கு வங்க முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா கொல்கத்தாவில் உள்ள அவரது இல்லத்தில் வியாழக்கிழமை காலை மரணமடைந்தார். அவருக்கு வயது 80.
ஆங்கிலத்தில் படிக்க: Former Bengal CM Buddhadeb Bhattacharya passes away
நவம்பர் 2000 முதல் மே 2011 வரை மேற்கு வங்க முதலமைச்சராகப் பணியாற்றிய புத்ததேவ் பட்டாச்சார்யா, தெற்கு கொல்கத்தாவின் பாலிகுங்கே பகுதியில் உள்ள சிறிய இரண்டு அறைகள் கொண்ட அரசு குடியிருப்பில் வசித்து வந்தார்.
நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோயால் அவதிப்பட்டு வந்த புத்ததேவ் பட்டாச்சார்யா, கடந்த சில ஆண்டுகளாக வீட்டை விட்டு வெளியேறுவது அரிது. அவர் கடைசியாக 2019 ஆம் ஆண்டு சி.பி.எம் (CPI(M)) பேரணிக்கு சென்றபோது வெளியில் காணப்பட்டார், ஆனால் தூசி ஒவ்வாமை காரணமாக கலந்து கொள்ள முடியாமல் வீடு திரும்பினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.