பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் மோடி திங்கள்கிழமை (மே 13, 2024) காலமானார். அவர் ஏற்கனவே புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார். அவருக்கு வயது 72.
முன்னதாக, ஏப்ரலில், தான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக அறிவித்த மோடி, தற்போது நடந்து வரும் மக்களவைத் தேர்தல் தொடர்பான பணிகளில் இருந்து தன்னை விடுவிக்குமாறு பாரதிய ஜனதா கட்சிக்கு (பாஜக) கோரிக்கை விடுத்திருந்தார்.
இது தொடர்பாக ட்விட்டர் எக்ஸ் தளத்தில், “நான் கடந்த ஆறு மாதங்களாக புற்றுநோயுடன் போராடி வருகிறேன். இப்போது அதை பகிரங்கப்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று உணர்கிறேன்.
லோக்சபா தேர்தலின் போது என்னால் எனது பணியை செய்ய முடியாது. இதை பிரதமரிடம் பகிர்ந்து கொண்டேன். நாட்டிற்கும், பீகாருக்கும், எனது கட்சிக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்து இருந்தார்.
பீகார் முன்னாள் முதல்வர் ஜிதன் ராம் மஞ்சி, சுஷில் மோடியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து ட்விட்டர்எ எக்ஸில் அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், “எங்கள் அன்பு நண்பரும், பீகாரின் முன்னாள் துணை முதல்வரும், முன்னாள் ராஜ்யசபா எம்பியுமான சுஷில் குமார் மோடி ஜியின் மறைவுக்கு இதயப்பூர்வமான அஞ்சலிகள்” எனத் தெரிவித்துள்ளார்.
ஆங்கிலத்தில் வாசிக்க : Former Bihar deputy CM Sushil Modi passes away
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“