Advertisment

முன்னாள் சி.பி.ஐ. இயக்குநர் மரணம்; அதிர்ச்சியில் குடும்ப உறுப்பினர்கள்!

நான் என்னுடைய வாழ்வை முடித்துக் கொள்கின்றேன். அனைவரும் மகிழ்ச்சியாக இருங்கள். நான் என்னுடைய புதிய பயணத்தை துவங்குகின்றேன்.

author-image
WebDesk
New Update
Former CBI director Ashwini Kumar found hanging in his Shimla House

Former CBI director Ashwini Kumar found hanging at his Shimla House : முன்னாள் சிபிஐ இயக்குனரும் நாகலாந்து மற்றும் மணிப்பூர் மாநிலங்களில் முன்னாள் ஆளுநரும் அஸ்வினி குமார் தன்னுடைய வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.  சிம்லாவில் இருக்கும் அவருடைய வீட்டில் அவரின் பிரேதம் கைப்பற்றப்பட்டுள்ளது.

Advertisment

அவருடைய உடலை அவரின் மகனும், மருமகளும் நேற்றிரவு 07:10 மணி அளவில் பார்த்ததாக ஹிமாச்சல் பிரதேசத்தின் டி.ஜி.பி. சஞ்சய் குண்டு அறிவித்துள்ளார். அவருடைய மரணத்தில் கொலைக்கான எந்த விதமான நோக்கம் இல்லை என்றும், அவர்கள் குடும்பத்தினர் யாரையும் சந்தேகிக்கவில்லை என்றும் கூறியுள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

நான் என்னுடைய வாழ்வை முடித்துக் கொள்கின்றேன். அனைவரும் மகிழ்ச்சியாக இருங்கள். நான் என்னுடைய புதிய பயணத்தை துவங்குகின்றேன். நோயாலும் வயது மூப்பினாலும் அவதிப்பட்டு வருவதாய் கூறி அவர் தற்கொலை கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார். எந்த விதமான நோயால் அவர் பாதிக்கப்பட்டிருந்தார் என்பதை விசாரணையின் மூலமாக தான் அறிய வேண்டும் என்று டி.ஜி.பி. கூறியுள்ளார்.

மாலையில், மாடி அறையில் தியானம் செய்ய சென்றிருந்த அவர் வெகு நேரமாகவும் கீழே வரவில்லை. சந்தேகம் அடைந்து மேலே சென்று பார்த்த மகனும் மருமகளும், அப்பகுதியில் இருக்கும் கதவு பூட்டியிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பிறகு கதவை உடைத்து உள்ளே சென்ற போது அவர் தூக்கிட்ட நிலையில் பிரேதமாக கண்டெடுக்கப்பட்டார். காவல்துறைக்கு செய்தி அளித்த நிலையில் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவர் உயிரிழந்ததாக கூறப்பட்டுள்ளது.

To read this article in English

இன்று காலை அவரின் பிரேத பரிசோதனை இந்திரா காந்தி மருத்துவமனையில் நடைபெற உள்ளது. குமார் சிர்மௌர் மாவட்டத்தில் பிறந்தார். ஐ.பி.எஸ் அதிகாரியாக 1973ம் ஆண்டு இணைந்தார். 1985ம் ஆண்டு அவர் சிம்லா மாவட்டத்தின் எஸ்.பி.ஆக பணியாற்றிய போது, புதிதாக உருவாக்கப்பட்ட எஸ்.பி.ஜி. பிரிவில் சேர்ந்தார். 1990 வரை அவர் அங்கு பணியாற்றினார். 2006ம் ஆண்டு அஸ்வினி குமார் ஹிமாச்சல் பிரதேசத்தின் டி.ஜி.பியாக பணி உயர்வு பெற்றார். அம்மாநிலத்தின் காவல் அதிகாரியாக பணியாற்றி முதன்முதலாக சி.பி.ஐயில் இடம் பெற்றவரும் அவரே. ஆரூஷி ஹேமராஜ் ஆகியோர் கொலை வழக்கு விசாரணையின் போது சி.பி.ஐ இயக்குநாராக அவர் பணியிஆற்றினார். 2010ம் ஆண்டு பணியில் இருந்து ஓய்வு பெற்ற அவர் நாகலாந்து மாநிலத்தின் ஆளுநராக மார்ச் 2013 முதல் ஜூலை 2014 வரை பணியாற்றினார். இதே காலத்தில் அவர் கூடுதலாக மணிப்பூர் மாநில ஆளுநராகவும் அவர் பணியாற்றினார். குமாரின் மனைவி, நேற்று அவர் மால் ரோடு மற்றும் கலிபரி கோவிலுக்கு சென்றதாக கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

 

Cbi Suicide
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment