குடியரசுத் தலைவர் தேர்தலிலும் களம் கண்ட டி.என்.சேஷன்!

முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் நேற்று மரணமடைந்தார்.

Former chief election commissioner TN Seshan
Former chief election commissioner TN Seshan

Former chief election commissioner TN Seshan: 1955ம் ஆண்டில் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டவர் டி.என்.ஷேசன். 1990 முதல் 1996 வரையிலான காலகட்டத்தில் இந்திய தலைமை தேர்தல் ஆணையராக பணியாற்றிய இவர் நேற்று நள்ளிரவு காலமானார்.  இந்திய தேர்தல்களில் பல்வேறு சீர்திருத்தங்களை மிகவும் சிறப்பாக மேற்கொண்டவர் ஷேசன். கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் 1932ம் ஆண்டு பிறந்த இவர் தமிழகம் மற்றும் மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பதவிகளை வகுத்து வந்தார். இவரின் மறைவிற்கு அனைவரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ஐ.ஏ.எஸ் அதிகாரி, ராஜீவ் காந்தியின் அமைச்சரவை செயலாளர், தலைமைத் தேர்தல் அதிகாரி உள்ளிட்ட அனைத்து பெரிய பொறுப்புகளையும் அவர் வகித்தார். தேர்தல் நடைமுறைகளில் பல்வேறு சிறப்பான சீர்திருந்திருத்தங்களை அவர் மேற்கொண்டதற்காக ரமோன் மகசேசே விருதுகள் அவருக்கு வழங்கப்பட்டது.

குடியரசுத் தேர்தலில் போட்டியிட்ட சேஷன்

1997ம் ஆண்டும் நடைபெற்ற குடியரசுத் தலைவருக்கான தேர்தலில் கே.ஆர். நாராயணனை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியை தழுவினார். 1992ம் ஆண்டு சங்கர் தயாள் சர்மா இந்தியாவின் குடியரசுத் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார். அப்போது துணைக் குடியரசுத் தலைவராக கே.ஆர். நாராயணன் பதவி வகித்து வந்தார், 1997ம் ஆண்டுக்கான குடியரசுத் தலைவர் தேர்தலில் தயாள் சர்மா போட்டியிடவில்லை. அதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்.கே.நாராயணன் நிறுத்தப்பட்டார். அவருக்கு காங்கிரஸ் மற்றும் பாஜக என இரண்டு கட்சிகளும் தங்களின் ஆதரவை அளித்தன. அவரை எதிர்த்து சுயேட்சை வேட்பாளராக டி.என்.சேஷன் களம் இறக்கப்பட்டார். அவருக்கு சிவசேனா மட்டுமே ஆதரவு அளிக்க எளிதில் வெற்றி பெற்றார் கே.ஆர். நாராயணன். இந்த தேர்தலில் கே.ஆர். நாராயணன் பெற்ற வாக்குகள் 9,56,290 ஆகும். டி.என்.சேஷன் பெற்ற வாக்குகள் 50,631 ஆகும்.

Web Title: Former chief election commissioner tn seshan contested president election

Next Story
விலகிய பாஜக… சிவசேனா ஆட்சியமைக்க வருமாறு ஆளுநர் அழைப்புmaharashtra govt formation bjp shiv sena congress ncp fadnavis - காங்கிரஸ்-என்சிபி ஆதரவுடன் சிவசேனா ஆட்சியமைக்க விரும்பினால் வாழ்த்துகள் - பாஜக
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com