Vivek Deshpande
Former CJI Bobde meets Mohan Bhagwat : முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே செவ்வாய்க்கிழமை அன்று ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் தலைவர் மோகன் பகவத்தை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இப்படி ஒரு பேச்சுவார்த்தை நடைபெறவில்லை என்ற போதிலும், நீதிபதி போப்டே மோகன் பகவத்தை மஹால் பகுதியில் உள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்தில் மாலை 4 மணி முதல் 5 மணி வரை சந்தித்து பேசியுள்ளார் என்று நம்பத் தகுந்த வட்டாரங்கள் அறிவித்துள்ளன.
ஆர்.எஸ்.எஸ். தலைவரை, அந்த சங்கத்தின் தலைமையகத்தில் வைத்து போப்டே சந்திப்பது இதுவே முதல்முறை. அவர் மேலும் ஆர்.எஸ்.எஸ் நிறுவனர் கே.பி. ஹெட்கேவரின் பிறந்த வீட்டையும் பார்வையிட்டார்.
போப்டேவின் சொந்த ஊர் நாக்பூர். மேலும் பல ஆண்டுகளாக அதே பகுதியில் சட்ட வல்லுநராக பணியாற்றினார். இந்த ஆண்டின் ஆரம்பத்தில் தலைமை நீதிபதி பொறுப்பில் இருந்து ஓய்வு பெற்ற அவர் நாக்பூர் மற்றும் டெல்லியில் தன்னுடைய நாட்களை கழித்து வருகிறார்.
அவருக்கு முன்பு தலைமை நீதிபதியாக பணியாற்றிய ரஞ்சன் கோகாய், ஓய்வு பெற்றவுடன் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பரிந்துரை செய்யப்பட்டார். இது பெரும் சர்ச்சையை உருவாக்கியது. இதுவரை போப்டே இது போன்ற சர்ச்சையில் அடிபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil