வரும் மக்களவைத் தேர்தலில் மேற்கு வங்க மாநிலம் பெர்ஹாம்பூர் தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளராக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யூசுப் பதான் போட்டியிடுகிறார். ஒரு சில சிட்டிங் எம்.பி.க்களை களமிறக்க வேண்டாம் என்றும், அதற்கு பதிலாக சில புதிய முகங்களை அறிமுகப்படுத்தவும் திரிணாமுல் காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. எனவே, ஞாயிற்றுக்கிழமை முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜியால் அறிவிக்கப்பட்ட வேட்பாளர் பட்டியலில், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பதான் மற்றும் கிர்த்தி ஆசாத் இடம் பெற்றுள்ளனர்.
ஆங்கிலத்தில் படிக்க: Former cricketer Yusuf Pathan, tele star Rachana Banerjee among new names
யூசுப் பதான் 2021 ஆம் ஆண்டில் அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அவர் 2007 மற்றும் 2012 க்கு இடையில் இந்தியாவுக்காக 57 ODIகள் மற்றும் 22 T20I போட்டிகளில் விளையாடினார். அவர் 2007 T20 உலகக் கோப்பை வென்ற அணியிலும், 2011 ODI உலகக் கோப்பையை வீட்டிற்கு கொண்டு வந்த அணியிலும் ஒரு பகுதியாக இருந்தார்.
யூசுப் பதான் பெஹ்ராம்பூர் தொகுதியிலும், கிர்த்தி ஆஸ்த் பர்தமான்-துர்காபூர் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.
காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரிக்கு எதிராக பெஹ்ராம்பூர் தொகுதியில் யூசுப் பதான் நிறுத்தப்பட்டுள்ளார். 2019 பொதுத் தேர்தலின் போது, காவி எழுச்சிக்கு மத்தியிலும், வங்காளத்தில் இருப்பைத் தக்க வைக்க காங்கிரஸ் கட்சி போராடிய நிலையிலும், பெர்ஹாம்பூர் தொகுதியில் 80,000 வாக்குகள் வித்தியாசத்தில் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி வெற்றி பெற்றார்.
சந்தேஷ்காலி அமைந்துள்ள பாசிர்ஹாட் மக்களவைத் தொகுதியில், திரிணாமுல் காங்கிரஸ் தனது முன்னாள் எம்.பி.,யான ஹாஜி நூருல் இஸ்லாமை, சிட்டிங் எம்.பி நுஸ்ரத் ஜஹானுக்கு மாற்றாக களமிறக்கியுள்ளது. மஹுவா மொய்த்ரா மக்களவையில் இருந்து வெளியேற்றப்பட்ட போதிலும் தொடர்ந்து இரண்டாவது முறையாக கிருஷ்ணாநகர் தொகுதியில் இருந்து திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடுகிறார்.
மேற்கு வங்கத்தில் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. கொல்கத்தாவில் உள்ள பிரிகேட் பரேட் மைதானத்தில் நடைபெற்ற மாபெரும் பேரணியில், அம்மாநிலத்தில் உள்ள 42 தொகுதிகளிலும் கட்சி தனித்து போட்டியிடும் என்று முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“