Former finance minister P chidambaram's anticipatory bail pleas dismissed and Appeal to the Supreme Court: ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் முன் ஜாமீன் மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து, முன் ஜாமீன் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார். இதையடுத்து, டெல்லியில் உள்ள ப.சிதம்பரம் வீட்டுக்கு சிபிஐ விசாரணை அதிகாரிகள் குழுவினர் சென்றுள்ளனர்.
Delhi High Court dismisses both anticipatory bail pleas of Former Union Finance Minister P Chidambaram in connection with INX Media case. pic.twitter.com/Gbt4Py4y8m
— ANI (@ANI) August 20, 2019
2007ம் ஆண்டு ப.சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்தபோது ஐ.என்.எக்ஸ் மீடியாவுக்கு வெளிநாடுகளில் இருந்து அந்நிய நேரடி முதலீடாக ரூ.305 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டது.
அந்நிய முதலீட்டு ஊக்குவிப்பு வாரியத்தின் (Foreign Investment Promotion Board – FIPB) கீழ் வழங்கப்பட்ட ஒப்புதலில் முறைகேடு நடந்திருப்பதாக அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ தனித்தனியாக விசாரணை செய்து வருகிறது. ஐ.என்.எக்ஸ் மீடியாவின் முன்னாள் இயக்குநர் இந்திராணி முகர்ஜி இந்த வழக்கில் அப்ரூர்வராக மாறினார்.
இந்த வெளிநாட்டு நிதியை பெற கார்த்தி சிதம்பரம் உதவிய காரணத்தால் அவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஐ.என்.எக்.ஸ் மீடியா வழக்கில், முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ அமைப்புகள் டெல்லி உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து, ப.சிதம்பரம் முன் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடியாக தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
P Chidambaram moves Supreme Court challenging the Delhi High Court order, rejecting both his anticipatory bail pleas in connection with INX Media case. Senior lawyer Kapil Sibal, representing him has sought an urgent listing of his matter. The matter is still pending. (file pic) pic.twitter.com/lAoLvr0XTk
— ANI (@ANI) August 20, 2019
இதனைத் தொடர்ந்து, ப.சிதம்பரம் ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றம் தனது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார். மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் இந்த விஷயத்தை உடனடியாக விசராணைக்கு ஏற்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் கோரியுள்ளார்.
Senior lawyer Kapil Sibal, representing P Chidambaram says, "We will mention the matter before the Supreme Court tomorrow morning." https://t.co/w4FDl3auEG
— ANI (@ANI) August 20, 2019
மேலும், வழக்கறிஞர் கபில் சிபல் கூறுகையில் இந்த விவகாரத்தை நாளை காலை உச்ச நீதிமன்றத்தில் குறிப்பிடுவோம் என்று தெரிவித்துள்ளார்.
Delhi: A team of Central Bureau of Investigation (CBI) officers arrives at the residence of P Chidambaram. Earlier today, Delhi High Court had dismissed his both anticipatory bail pleas in connection with INX Media case. pic.twitter.com/Zjn4XDiJk7
— ANI (@ANI) August 20, 2019
இதனைத் தொடர்ந்து, டெல்லியில் உள்ள ப.சிதம்பரம் வீட்டுக்கு சிபிஐ விசாரணை அதிகாரிகள் குழுவினர் சென்றனர். அதிகாரிகள் அங்கே, ஒரு மணி நேரம் இருந்த நிலையில் பின்னர் புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
மேலும் படிக்க : ராஜ்யசபை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார் மன்மோகன் சிங்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.