Advertisment

கேரளத்தில் பாலஸ்தீன ஆதரவு பேரணி: வீடியோ காலில் பேசிய ஹமாஸ் முன்னாள் தலைவர்!

கேரள மாநிலம் மலப்புரத்தில் ஜமாத்-இ-இஸ்லாமி என்ற அமைப்பினர் இளைஞர்கள் நடத்திய பாலஸ்தீன ஆதரவு பேரணியில் ஹமாஸ் இயக்கத்தின் முன்னாள் தலைவர் காலீத் மஷல் வீடியோகான்பரன்சில் பங்குகொண்டு பேசியுள்ளார்.

author-image
WebDesk
New Update
Former Hamas chief Khaled Mashal virtually address

கேரளத்தில் பாலஸ்தீன ஆதரவு பேரணியில் ஹமாஸ் இயக்கத்தின் முன்னாள் தலைவர் காணொலி மூலமாக பேசிய விவகாரத்தில் மத்திய-மாநில அரசுகள் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநில பாஜக வலியுறுத்தியுள்ளது.

pro-Palestine rally in Kerala | Former Hamas chief Khaled Mashal virtually addresses | பாலஸ்தீனத்துக்கு ஆதரவு தெரிவித்து கேரளத்தில் நடந்த பேரணியில் ஹமாஸ் முன்னாள் தலைவர் காலீத் மஷல் உரையாற்றியுள்ளார்.
கேரளத்தின் மலப்புரத்தில் ஜமாத்-இ-இஸ்லாமி அமைப்பினர், பாலஸ்தீனத்துக்கு ஆதரவு தெரிவித்து பேரணி நடத்தினார்கள்.

Advertisment

அப்போது, ஹமாஸ் இயக்கத்தின் முன்னாள் தலைவர் காலீத் மஷல் வீடியோ காலில் பேசினார்.
அவர், “பாலஸ்தீன நிலத்திற்காக நாம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். அல்-அக்ஸா மசூதியை மீட்பதற்காகவே இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

சாத்தியமான அனைத்து முயற்சிகளையும் நாம் செய்ய வேண்டும். நாம் இணைந்து சியோனிஸ்டுகளை தோற்கடிப்போம். அல் அக்ஸாவுக்காகப் போராடும் காஸாவுக்காக ஒன்றுபட்டு நிற்போம்.
இஸ்ரேல் எங்கள் குடியிருப்பாளர்களை பழிவாங்குகிறது. வீடுகள் இடிக்கப்படுகின்றன. காஸாவின் பாதிக்கும் மேற்பட்ட பகுதிகளை அழித்துள்ளனர்.

அவர்கள் தேவாலயங்கள், கோவில்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் ஐ.நா நிறுவனங்களையும் கூட அழித்து வருகின்றனர்.
இந்தத் தாக்குதலின் அர்த்தம் என்னவெனில், காஸாவை காலி செய்ய வைப்பதுதான். ஏனெனில் காசாவில் போராளிகள் அவர்களை இராணுவ ரீதியாக தோற்கடித்துள்ளனர்” என்றார்.

ஆங்கிலத்தில் வாசிக்க : Former Hamas chief Khaled Mashal virtually addresses pro-Palestine rally in Kerala, BJP demands strong action against organisers

இந்த நிலையில் பாலக்காட்டில் ஞாயிற்றுக்கிழமை நடக்கும் மற்றொரு பேரணியில் அல்-குத்ஸிற்கான நாடாளுமன்ற உறுப்பினர்களின் லீக்கின் இயக்குநர் ஜெனரல் டாக்டர் முகமது மக்ரம் பாலாவி வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக கலந்துகொள்வார் என அறிவிக்கப்பட்டது.

இந்த விவகாரங்களில் விரிவான விசாரணை நடத்த வேண்டும் என பாரதிய ஜனதா கட்சி வலியுறுத்தி உள்ளது. இது குறித்து பேசிய அக்கட்சியின் மாநிலத் தலைவர் சுரேந்திரன், “மதச்சார்பற்ற கேரளத்தில் இப்படியொரு நிலை ஏற்பட்டுள்ளது. கேரளத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் ஹமாஸ் தீவிரவாதிகள் கலந்து கொள்கின்றனர்.
அவருக்கு விசா கிடைக்காததால்தான் அவர் வீடியோ கான்பரன்சில் கூட்டத்தில் பேசியுள்ளார். இந்த நிகழ்ச்சி அமைப்பாளர்களின் நிகழ்ச்சி நிரல் மிகவும் தெளிவாக உள்ளது. இதை மத்திய, மாநில அமைப்புகள் விசாரிக்க வேண்டும்” என்றார்.

இது குறித்து பேரணி நடத்திய அமைப்பின் இளைஞர் இயக்க மாநிலத் தலைவர் சுகைப் சி.டி, “கடந்த காலங்களில், ஹமாஸ் தலைவர்கள் வீடியோ கான்பரன்ஸ் மூலம் கேரளாவில் பல ஒற்றுமை மாநாடுகளில் உரையாற்றினர். கேரளாவில் உள்ள இஸ்லாமிய இயக்கங்களின் நிபந்தனையற்ற ஆதரவின் காரணமாகவும் பாலஸ்தீன போராட்டம் உயிர்ப்புடன் உள்ளது” என்றார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Kerala hamas
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment