/indian-express-tamil/media/media_files/2024/12/20/Gds6TmtAOlDaG6uw2iK9.jpg)
ஹரியானா முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலா. (எக்ஸ்பிரஸ் காப்பகங்கள்)
ஹரியானா முன்னாள் முதல்வரும், இந்திய தேசிய லோக் தளம் (INLD) தலைவருமான ஓம் பிரகாஷ் சவுதாலா வெள்ளிக்கிழமை பிற்பகல் அவரது குருகிராம் இல்லத்தில் மரணமடைந்தார். அவருக்கு வயது 89.
ஆங்கிலத்தில் படிக்க: Former Haryana CM, INLD chief Om Prakash Chautala passes away
ஐந்து முறை ஹரியானா முதல்வராக இருந்த ஓம் பிரகாஷ் சவுதாலா, முன்னாள் துணைப் பிரதமர் தேவிலாலின் மகன் ஆவார்.
ஓம் பிரகாஷ் சவுதாலாவின் உடல் சிர்சா மாவட்டத்தில் உள்ள தேஜா கெராவில் சனிக்கிழமை பிற்பகல் தகனம் செய்யப்படும் என்று குடும்ப வட்டாரங்கள் தெரிவித்தன. பொதுமக்கள் வந்து அஞ்சலி செலுத்துவதற்காக அவரது உடல் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை அங்கு வைக்கப்படும்.
ஓம் பிரகாஷ் சவுதாலாவுக்கு அஜய் சிங் சவுதாலா மற்றும் அபய் சிங் சவுதாலா ஆகிய இரண்டு மகன்களும் மூன்று மகள்களும் உள்ளனர்.
அபய் சிங் சவுதாலா இதற்கு முன்பு ஹரியானா சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார். இவரது மகன் அர்ஜுன் சவுதாலா தற்போது ஹரியானா மாநிலம் ரானியா தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். ஹரியானாவில் மனோகர் லால் கட்டார் தலைமையிலான பா.ஜ.க-ஜே.ஜே.பி கூட்டணி ஆட்சியில் அஜய் சிங் சவுதாலாவின் மகன் துஷ்யந்த் சவுதாலா துணை முதல்வராக இருந்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.