ஐசிஐசிஐ வங்கி 2012ஆம் ஆண்டு மற்ற வங்கிக்கு வழங்கிய கடன்களில் முறைகேடு செய்ததாக ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி மற்றும் நிர்வாக அதிகாரி சந்தா கோச்சார் மற்றும் அவரது கணவர் தீபக் கோச்சார் ஆகியோரை மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) அதிகாரிகள் வெள்ளிக்கிழமை (டிச.23) கைது செய்தனர்.
சந்தா கோச்சார், அவரது கணவரும் வீடியோகான் குழுமத்தைச் சேர்ந்த வேணுகோபால் தூத் மற்றும் பிற நிறுவனங்களான நுபவர் ரினியூவபிள்ஸ், சுப்ரீம் எனர்ஜி, வீடியோகான் இன்டர்நேஷனல் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் மற்றும் வீடியோகான் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் உள்ளிட்ட நிறுவனங்கள் மீதும் குற்றவியல் சதி மற்றும் ஊழல் தடுப்புச் சட்டத்தின் பிரிவுகளின் கீழ் சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.
தி இந்தியன் எக்ஸ்பிரஸின் முந்தைய விசாரணையில், டிசம்பர் 2008 இல், வீடியோகான் குழுமத்தைச் சேர்ந்த வேணுகோபால் தூத் தீபக் கோச்சார் மற்றும் சந்தா கோச்சாரின் உறவினர்கள் இருவருடன் ஒரு நிறுவனத்தை நிறுவினார்; இந்த நிறுவனத்திற்கு ரூ.64-கோடி கடனை ஒரு முழுச் சொந்தமான நிறுவனம் மூலம் கொடுத்தார், அதற்கு முன் அவர் அதன் உரிமையை தீபக் கோச்சார் தலைமையிலான அறக்கட்டளைக்கு வெறும் ரூ.9 லட்சத்திற்கு மாற்றினார் என்பது தெரியவந்தது.
இந்த நிலையில், 2012 ஆம் ஆண்டு ஐசிஐசிஐ வங்கியில் இருந்து ரூ.3,250 கோடி கடனாக குழுமம் பெற்ற ஆறு மாதங்களுக்குப் பிறகு தீபக் கோச்சாருக்கு நிறுவனம் மாற்றப்பட்டது. 2017 டிசம்பரில், சிபிஐ கடன் அனுமதிப்பது குறித்து முதற்கட்ட விசாரணையை பதிவு செய்தது.
2020 டிசம்பரில், கோச்சாரின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி பதவியை நீக்கும் ஐசிஐசிஐ வங்கியின் ஜனவரி 2019 முடிவை மும்பை உயர் நீதிமன்றம் உறுதிசெய்தது. இதில் தலையிட டெல்லி உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
ஜனவரி 2019 இல், ஐசிஐசிஐ வங்கியின் வாரியம் கோச்சரை பதவி நீக்கம் செய்தது மற்றும் 2009 ஆம் ஆண்டு முதல் அவர் உயர் பதவிக்கு பொறுப்பேற்றதிலிருந்து அவருக்கு வழங்கப்பட்ட அனைத்து போனஸ்களையும் திரும்பப் பெற முடிவு செய்தது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.